Thursday, 28 February 2019

பஞ்சாட்சரம் ஆனது மூன்று வகைப்படும்

பஞ்சாட்சரம் ஆனது மூன்று வகைப்படும் :

அவை முறையே ஸ்தூல ; ஸூக்ஷ்ம ; காரண பஞ்சாட்சரம் ஆகும்.

இதில்

நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம்

சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம்

சிவசிவ - காரண பஞ்சாட்சரம்

#ஸ்தூல_பஞ்சாட்சரம் :

" நமசிவய " என்பது " ஸ்தூல பஞ்சாட்சரம் " ஆகும்

இம்மந்திரத்தை  ஓம்காரம் ஆன பிரணவத்தோடு சேர்ந்து
" ஓம் நமசிவய " என்று உச்சரிப்பதே மரபாகும்.

சித்தர்கள் இம்மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடாகவே உணர்ந்தனர்
இம்மந்திரத்தின் மூலம் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் ( நிலம் ; நீர் ; நெருப்பு ; மண் ; ஆகாயம் )கட்டுப்படுவதோடு ஐம்பொறிகளும் ( கண் ; காது ; மூக்கு ; வாய் ; மனம் ) நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும்.

பஞ்சாட்சரத்தின் பஞ்சபூதங்களை ஆளும் தன்மை ஆனது கீழ்க்கண்டவாறு குறிக்கும்.

1) ந - நிலத்தை குறிக்கிறது

2) ம - நீரை குறிக்கிறது

3) சி - நெருப்பை குறிக்கிறது

4) வ - காற்றை குறிக்கிறது

5) ய - ஆகாசத்தை குறிக்கிறது

எம்பெருமான் ஈசனின் பஞ்சமுகத்தோடு இணைந்த பஞ்சாட்சர தத்துவ விளக்கம் :

1)" ந "  - ஈசனின் கிழக்கு நோக்கிய முகமான
" தத்புருஷம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " மஞ்சள் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " கௌதம மகரிஷி " ஆவார்.

2) " ம " - ஈசனின் தெற்கு நோக்கிய முகமான
" அகோரம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " கறுப்பு நிறம் " ஆகும்
இதன் ரிஷி " அத்ரி மகரிஷி " ஆவார்.

3) " சி " - ஈசனின் மேற்கு நோக்கிய முகமான
" சத்யோஜாதம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " சாம்பல் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " விஸ்வாமித்ர மகரிஷி " ஆவார்

4) " வ " - ஈசனின் வடக்கு நோக்கிய முகமான
" வாமதேவம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " பொன் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " ஆங்கிரஸ மகரிஷி " ஆவார்

5) " ய " - ஈசனின் மேல் நோக்கிய முகமான
" ஈசானம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " சிவப்பு நிறம் " ஆகும்
இதன் ரிஷி " பாரத்வாஜ மகரிஷி " ஆவார்.

#சூட்சும_பஞ்சாட்சரம் :

" சிவயநம " என்பது " சூட்சும பஞ்சாட்சரம் " ஆகும்.

இம்மந்திரத்தை ஓம்காரம் ஆன ப்ரணவத்தோடு சேர்த்து " ஓம்சிவயநம " என்று உச்சரிக்க வேண்டும்

எம்பெருமான் ஈசனின் ஐந்து முகங்களில் இருந்து " ஓம் " என்னும் " பிரணவம் " உதித்தது

அதாவது

1) ஈசனின் வடக்கு நோக்கிய முகம் ஆன
" வாமதேவம் " முகத்தில் இருந்து - " அகாரமும் "

2) ஈசனின் மேற்கு  நோக்கிய முகம் ஆன
" சத்யோஜாதம் " முகத்தில் இருந்து - " உகாரமும் "

3) ஈசனின் தெற்கு நோக்கிய முகம் ஆன
" அகோரம் " முகத்தில் இருந்து - " மகாரமும் "

4) ஈசனின் கிழக்கு நோக்கிய முகமான
" தத்புருஷம் " முகத்தில் இருந்து - " பிந்து " எனப்படும் நாதத்தின் தொடக்கமும்

5) ஈசனின் மேல் நோக்கிய முகமான
" ஈசானம் " என்னும் முகத்தில் இருந்து
" நாதம் " ஆன " சப்த ரூபமும் " தோன்றின.

இவ்வாறு " ஓம் " என்னும் பிரணவத்தோடு
" சிவயநம " சேர்ந்து முழுமையான
" மந்திர ஸ்வரூபம் " ஆனது

" அவ்வும் உவ்வும் மவ்வுமாய்
அமர்ந்ததே சிவாயமே "

" சிவாயநம என்று சிந்திந்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லையே "

" திருவாய் பொலிய சிவயநம என்று
நீறணிந்தேன்"
" தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே "

#காரண_பஞ்சாட்சரம் :

" சிவ சிவ " என்பது " காரண பஞ்சாட்சரம் " ஆகும்

சிவ சிவ என்னும் மந்திரமானது நமது காரணத்தில் உள்ள பிற கழிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியரின் ஆழ்ந்த கருத்தாகும்.

இம்மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக் கூடியது

ஆகையால் இம்மந்திரத்தின் மூலமாக லௌகீக லாபங்களை எதிர்பார்க்க முடியாது
அதாவது " உலகியல் குறிக்கோள்களை " பூர்த்தி செய்த ஒருவருக்கு ( துறவு நெறி பூண்டவர்களுக்கும் மிக வயதானவர்களுக்கும் )மட்டுமே இம்மந்திரம்
பொருத்தமானது ஆகும்.

" சிவசிவ என்றிட தீவினை மாலும் "
" சிவசிவ என்கிலார் தீவினையாளர் "
" சிவசிவ என்றிட தேவருமாவர் "
" சிவ சிவ எண்ண சிவகதி தானே "

சி  - சிவானந்தம் - பொருள்

வ - சிவசன்னதி - அருள்

ய - உயிர்கள் - தெருள்

ந - திரோதானம் - மருள்

ம - ஆணவம் - இருள்

தன்னை அறிந்தவன் தவத்தை அடைகிறான்
தவத்தை அடைந்தவன் சிவத்தை அடைகிறான்

" நித்தம் தவம் இருந்தால் "
" சித்தம் சிவம் ஆகும் "

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer