Friday, 1 March 2019

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஶ்ரீ பேச்சியம்மன் பற்றிய தகவல்கள்

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஶ்ரீ பேச்சியம்மன் பற்றிய தகவல்கள்:

💥தேரிக்காட்டில் உள்ள ஶ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தலமாகும்...
💥இங்கு அருள்பாலிக்கும் பேச்சியம்மனும் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாவாள்...
💥இந்த கோவிலில் கற்குவேல் அய்யனுக்கு அடுத்தப்படியாக உத்தரவினை பேச்சியம்மன் சன்னதியில் பூ போட்டு பலரும் பார்க்கின்றனர்...
💥கோவில் சாமியாடிகள் மற்றும் பூசாரிகள் அய்யனுக்கு அடுத்தபடியாக இந்த பேச்சியம்மனிடம் தான் உத்தரவைப் பெறுகின்றனர்....
💥குழந்தை வரம் அளிப்பதில் மிக முக்கிய தெய்வமாக பேச்சியம்மன் அருள்பாலிப்பதால் குழந்தை இல்லாத தம்பதியினர் பலரும் இவளை வேண்டி மரத்தொட்டிலைக் கட்டுகின்றனர்...குழந்தை பிறந்த பிறகு இவளுக்கு மரப்பாச்சி பொம்மை மற்றும் சீலைப்பிள்ளையை நேர்த்திக்கடனாக வாங்கி வைக்கின்றனர்...
💥கற்குவேல் அய்யன் கிழக்கு நோக்கி நதியைப் பார்த்தும் பேச்சியம்மன் தெற்கு நோக்கி கடலினைப் பார்த்தும் இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்...
💥தேரிக்காட்டு பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் இங்குள்ள பேச்சியம்மன் வனப்பேச்சியம்மனாக அருள்பாலிக்கிறாள்...
💥அய்யனார் சைவப் பிரியராக இருக்கிறார்...கோவிலில் உயிர் பலியிடுதல் பெரும்பாலும் இவளுக்கு தான் பலியிடப்படுகிறது....
💥கள்ளர் வெட்டு திருவிழா முடிந்த பிறகு இவளுக்கு எண்ணற்ற உயிர் பலியிடப்படுகிறது...
💥கோவிலில் பேச்சியம்மனுக்கு தான் பெரிய அளவில் மலைப் போல் படையல் போடப்படுகிறது(பெரிய படைப்பு படைக்கப்படுகிறது)....
💥கோவிலில் உள்ள முளைப்பாரி மண்டபத்தின் பெயர் கற்குவேல் அய்யனார் பேச்சியம்மன் முளைப்பாரி மண்டபமாகும்...இதிலிருந்து கள்ளர் வெட்டு திருவிழாவில் கற்குவேல் அய்யனுக்கும் இந்த பேச்சியம்மனுக்கும் தான் முளைப்பாரி போடப்படுகிறது என்பது புலனாகிறது....
💥திருவிழா காலங்களில் பேச்சியம்மனுக்கு எண்ணற்ற பட்டு சேலைகள் நேர்த்திக்கடனாக வருகிறது....
💥பக்தர்கள் பலர் பேச்சியம்மனை அய்யனின் தாயாகவும் சிலர் அய்யனின் பாச தங்கை தான் பேச்சியம்மன் என்றும் கருதுகின்றனர்...
💥கோவிலில் அருள்பாலிக்கும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பிரியமானவளாக பேச்சியம்மன் இருக்கிறாள்...
💥அய்யனுக்கு அடுத்தபடியாக பேச்சியம்மன் தனி சன்னதியில் வலப்புறம் ராக்காயி அம்மன் மற்றும் இடப்புறம் உச்சிமாகாளி அம்மன் உடன் அருளாட்சி புரிகிறாள்....
💥அய்யனின் முக்கிய பரிவார தேவதையாக தளவாய் வனப்பேச்சியம்மன் அருள்பாலிக்கிறாள்....
💥கோவிலில் உள்ள அக்னி மாடத்தி அம்மன் பேச்சியம்மன் அருளால் பிறந்து கன்னியாக அக்னியில் தெய்வ தன்மை அடைந்தவள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்....
💥பேச்சியம்மனுக்கு நேராக அவருடைய மகன் சுடலை மாடசாமி இருப்பது மற்றோரு சிறப்பாகும்.....

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer