Sunday, 24 March 2019

அஷ்டம சனியும், ஏழரை சனியும்!

*அஷ்டம சனியும், ஏழரை சனியும்!*

*அஷ்டம சனி:*

✰ ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி வருவது தான் அஷ்டமத்து சனி.

✰ அஷ்டம சனியில் தொட்டது துலங்காது, அஷ்டமத்து சனி திசையில் அந்நிய தேசத்தில் புகழ்பெறுவான் என்றெல்லாம் கூறுவார்கள்.

✰ வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். அஷ்டம சனி நடக்கும் போது புத்தி வேலை செய்யாது, உணர்ச்சி மட்டும் வேலை செய்யும்.

✰ அஷ்டம சனி இரண்டரை வருடம் இருக்கும். ஆனால் அது போன பிறகு அவர்களிடம் பேசினால் ஞானி போல பேசுவார்கள். அஷ்டம சனி வந்து போனவர்கள் நிதானமாகவும், யதார்த்தமாகவும் பேசுவார்கள்.

✰ பொதுவாக சனி இரண்டரை வருடம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும். சந்திரனுக்கு 8-ல் சனி வருவது அஷ்டம சனி.

*ஏழரைச் சனி:*

✰ ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் ஏழரைச் சனி ஆகும்.

✰ அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும்.

✰ வான்வெளியில் எல்லா ராசிகளிலும் சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக் கொண்டு வர 30 வருடங்களை வகுத்தால் 12 ராசிகளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

✰ ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால் என்று நஷ்டமாகவே அக்காலம் இருக்கும்.

✰ அடுத்த பகுதியை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

✰ அடுத்த பகுதியை கழிவுச் சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.

*பரிகாரங்கள்:*

✰ உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

✰ பொதுவாக சனிக்கிழமைகளில் எள் விளக்கு ஏற்றலாம்.

✰ சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

✰ அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

✰ ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

✰ தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

✰ தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

✰ விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்ல பலனைக் கொடுக்கும்.

✰ சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.

✰ கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer