Saturday 23 March 2019

கடவுள் எப்படி உருவானார்?



கடவுள் எப்படி உருவானார்?


முதன் முதலாக கடவுள் எப்படி உருவானார் குருவே ? என்றான் அவருடைய பிரதான சீடன். நான் சொல்கிறேன், ஆனால் உன்னால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டார் குரு.

எனக்குப் புரிகிறார்ப்போல் சொல்லுங்களேன் என்றான் சீடன். சரி அதற்கு தகுந்த நேரம் வரும் அப்போது சொல்கிறேன் என்றார் குரு.

வழக்கம் போல இருவரும் ஆற்றில்
குளித்துவிட்டு நந்தவனத்துக்கு சென்று மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து தியான அறையில் வைத்தனர்.

தியானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தான் சீடன்.குருவும் தியானத்தைத் தொடங்கினார்.சீடனின் மனம் தியானத்தில் லயிக்கவில்லை
அவன் கேட்ட கேள்வியிலேயே
சுழன்றுகொண்டிருந்தது.

திடீரென்று ஏதோ கூக்குரல்கள். உணர்வுக்கு வந்த போது அவன் கண்ட காட்சி, சற்று முன் உணர்வோடு தியானம் செய்து
கொண்டிருந்த அவனுடைய குரு மல்லாந்து படுத்திருந்தார். ஆமாம் அவர் உடலில் சலனமில்லை. அவர் உடல் சில்லிட்டுப் போயிருந்தது. அவர்முக்தி அடைந்துவிட்டார்.

அவனால் நம்ப முடியவில்லை ஆனாலும் அடுத்தடுத்து குருவை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவன் அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவன் உலகமே குருதான். இப்போது அவரும் போய்விட்டாரே இனி அவன் என்ன செய்யப் போகிறான்.அவனுக்கு துயரம் மேலிட்டது, எதிர்காலம் அவனை பயமுறுத்தியது.

யார் யாரோ அவனுக்கு ஆறுதல்
சொன்னார்கள். இனி அவன்தான் அந்த ஆசிரமத்துக்கு தலைமை என்றார்கள். அவன் மனதில் இதெல்லாம் உறைக்கவில்லை..
ஆயிற்று குருவின் உடலை சமாதியில் இட்டு மண்ணை நிரப்பி மேலே மூடினர்.

மறு நாள் சீடன் குளித்துவிட்டு வந்தான்.ஆஸ்ரமத்தில் குருவின் புகைப்படம் ஒரு பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது.அவருடைய படத்துக்கு மாலை சாற்றிவிட்டு..அவரை வணங்கி தன் கடமைகளைத் தொடங்கினான்.

அசரீரியாய் குருவின் குரல் கேட்டது சீடனே என்ன செய்கிறாய்?

குருவே உங்களை வணங்கி விட்டு என் கடமைகளைத் தொடங்குகிறேன் என்றான் அவன்.

ஆமாம் நீ ஏன் என்னை வணங்க வேண்டும் ?,

கடவுளையல்லவா வணங்க வேண்டும்? என்றார் குரு.

குருவே என்னைப் பொறுத்தவரை
தாய்,தந்தை, குரு ,கடவுள் எல்லாமே
நீங்கள்தானே அதனால்தான் உங்களை வணங்கி விட்டு கடமைகளை தொடங்குகிறேன் என்றான்.

அப்படியானால் நீ என்னைக் கடவுளாகவும் மதிக்கிறாயா? என்றார் குரு.

ஆம் குருவே என்றான் சீடன்.
இப்போது புரிந்ததா கடவுள் எப்படி
உருவானாரென்று ? என்று கேட்டார் குரு.

ஆமாம் இப்போது புரிந்து கொண்டேன் என்றான் கண்களில் நீர் வழிய சீடன்.அவன் காதுகளில் யாரோ பிரார்த்தனை செய்யும் சப்தம் கேட்டது.கண்களைத் துடைத்துக்கொண்டு,
உணர்வுக்கு திரும்பினான்.

எதிரே அவனுடைய குரு
தியானம் செய்துகொண்டிருந்தார்.

தியானத்தை முடித்துவிட்டு அவனைப் பார்த்து இந்தப் பிரசாதத்தை எல்லோருக்கும் கொடு என்றார்.சீடனும் பிரசாதத்தை எல்லோருக்கும் வினியோகிக்கத் தொடங்கினான் ஒரு புதிய தெளிவுடன்.

"நீங்கள் எல்லா மதங்களுடைய கருத்தும் ஒன்று என்று எப்படிச் சொல்ல முடியும் என்று
கேட்டார்கள்.

யார் கடவுளை வணங்கினாலும்
தன்னுடைய எண்ணத்தைத்தான்,
மனதைத்தான் வணங்குகிறானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்தஒரு கவிதையைப் படித்துக் காண்பித்தேன்.

"கடவுளை வணங்கும் போது கருத்தினைஉற்றுப்பார் நீ
கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே"

எனவே யார் எந்த வகையில் கடவுளை வணங்கினாலும் சரி, சிறிது நேரம் பொறுத்து எது நிற்கிறது என்று பார்த்தால் உன்னுடைய மனம்தான் அந்த வடிவம் எடுக்கிறது.விக்ரகத்தையோ,சக்தியையோ,.அகண்டகாரமாக இருக்கக் கூடியதையோ வேறு எந்தப்
பொருளையோ கடவுள் என்று
வணங்கினாலும் அந்த வடிவம் எடுப்பது நீதான் உன் மனம்தான்" என்கிறார் மகரிஷி...

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer