Thursday 28 February 2019

80 ஆன்மீக குறிப்புகள் 71-80

80 ஆன்மீக குறிப்புகள்




71. பூஜை அறையில் அதிக படங்களையும்,
தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக்
கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும்
இடையில் போதிய இடம் விட்டு வைக்க
வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில்
சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர்
பாத்திரங்களில் நேரடியாக வைத்து
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை
வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட
விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும்
விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு
செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது
நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு
அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும்
கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு
வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது
லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு
வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு
கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே
உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம்
சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது
வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி
வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும்
உதவும். வெளியே செல்லும்போது சட்டைப்
பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து
சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி,
தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer