Thursday 28 February 2019

80 ஆன்மீக குறிப்புகள் 1-10


80 ஆன்மீக குறிப்புகள்

1. தினசரி காலையும், மாலையும் தூய
மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள்
பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க
வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,
தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த
மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம்,
கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,
குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,
வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித
நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை
அண்டாது. தூய்மையான காற்றும்
கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக
வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை
இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து
வைக்காதீர்கள். இது இறை சக்தியைக்
குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள்
ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு
பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம்
ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால்,
அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை
சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில்
பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ
வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக
இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற
பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும்
இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி
இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது
உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது
துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில்
வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம
நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய்
தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல்
பூஜை செய்யக்கூடாது.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer