Saturday, 28 February 2015

எளிய பரிகாரங்கள் அரிய பலன்கள்

                
எளிய பரிகாரங்கள் அரிய பலன்கள்


எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் வெகுவாகக் குறையும்.

1) காகத்திற்கு உணவிடுதல்.

2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் வைத்தல்.

3) பசுவிற்கு அகத்திகீரை, பச்சரிசி வெல்லம் தருதல்.

4) எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலமிடுதல்.

5) சனிக்கிழமை கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தி தருதல்.

6) மீன்களுக்கு பொரி அளித்தல்.

7) மலை மேல் உள்ள கோவில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் தருதல்.

8) கோயில் விளக்கிற்கு எண்ணை அளித்தல்.

9) ஊனமுற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல்.

10) அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல்.


11) அன்னதானம், நீர்ப்பந்தல் போன்றவற்றிற்கு உதவுதல்

32 கணபதி வடிவங்களும் – மந்திரங்களும்

32 கணபதி வடிவங்களும்மந்திரங்களும்
              

 32 கணபதி வடிவங்களும்

1. பால கணபதி

கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம் பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

2. பக்த கணபதி

நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம் ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்

3. ஸக்தி கணபதி

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

4. ஸித்தி கணபதி

பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

5. உச்சிஷ்ட கணபதி

நீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம் தததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத: சதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம் கரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே

6. க்ஷிப்ர கணபதி:

தந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம் பந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

7.விக்ந ராஜ (விஜய) கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந: விக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

8.ஸ்ருஷ்டி கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந: விக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:

9.ருணமோசந கணபதி:

பாஸாங்குஸௌ தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப: ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக: ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம் ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்

10.டுண்டி கணபதி

அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம் தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:

11.த்விமுக கணபதி

ஸ்வதந்த பாஸாங்குச ரக்ந பாத்ரம் கரைர் ததாநோ ஹரி நீல காத்ர: ரக்தாம்ஸூகோ ரத்ந கிரீட மாலீ பூத்யை ஸதாமே த்விமுகோ கணேஸ:

12.யோக கணபதி

யோகாரூடோ யோகபட்டாபிராமோ பாலார்காபஸ்சேந்த்ர நீலாம்ஸூகாட்ய பாஸேக்ஷ் வக்ஷாந் யோக தண்டம் ததாநோ பாயாந்நித்யம் யோக விக்நேஸ்வரோந:

13. ஏகதந்த கணபதி

லம்போதரம் ஸ்யாமதநும் கணேஸம் குடாரமக்ஷஸ்ரஜ மூர்த்வகாப்யாம் ஸலட்டுகம் தந்தமத: கராப்யாம் வாமேதராப்யாம் ததாநமீடே

14. ஹேரம்ப கணபதி

அபய வரத ஹஸ்த: பாஸ தந்தாக்ஷமாலா ஸ்ருணி பரஸூ ததாநோ முத்கரம் மோதகம் பலமதிகத ஸிம்ஹ: பஞ்ச மாதங்க வக்த்ரோ கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப நாமா

15. ந்ருத்த கணபதி

பாஸாங்குஸாபூப குடாரதந்த சஞ்சத்கரா க்ல்ருப்த வராங்குலீயகம் பீதப்ரபம் கல்பதரோரதஸ்தம் பஜாமி ந்ருத்தோப பதம் கணேஸம்

16. ஹரித்ரா கணபதி

ஹரித்ராபம் சதுர்பாஹூம் ஹரித்ரா வதநம் ப்ரபும் பாஸாங்குஸ தரம் தேவம் மோதகம் தந்தமேவச பக்தாபய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாஸநம் பாஸாங்குஸௌ மோதகமேகதந்தம் கரைர் ததாநம் கநகாஸநஸ்தம் ஹாரித்ரகண்ட ப்ரதிமம் த்ரிநேத்ரம் பீதாம்ஸூகம் ஹரித்ரா கணேஸமீடே

17. தருண கணபதி

பாஸாங்குஸாபூப கபித்த ஜம்பூ பலம்திலாந் வேணுமபி ஸ்வஹஸ்தை: த்ருத: ஸதாயஸ் தருணாSருணாப: பாயாத் ஸயுஷ்மாந் தருணோ கணேஸ:

18. வீர கணபதி

வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந் ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம் வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி

19. த்வஜ கணபதி

: புஸ்தகாக்ஷ குணதண்ட கமண்டலு ஸ்ரீர் நிவ்ருத்யமாந கரபூஷண மிந்துவர்ணம் ஸ்தம்பேரமாநந சதுஷ்டய ஸோபமாநம் த்வாம் ஸம்ஸ்மரே த்வஜகணாதிபதே தந்ய:

20. விக்ந (புவநேச) கணபதி

ஸங்கேக்ஷூசாப குஸூமேஷூ குடாரபாஸ சக்ராங்குஸை: கலம மஞ்ஜரிகா ககாத்யை: பாணிஸ்திதை: பரிஸமாஹித பூஷண ஸ்ரீ விக்நேஸ்வரோ விஜயதே தபநீய கௌர:

21. ஊர்த்வ கணபதி

கல்ஹார ஸாலி கமலேக்ஷூக சாபபாண தந்தப்ரரோஹககதீ கநகோஜ்வலாங்க: ஆலிங்கநோத்யதகரோ ஹரிதாங்கயஷ்ட்யா தேவ்யாதிஸத்வ மபய மூர்த்வ கணாதிபோமே

22. லக்ஷ்மீ கணபதி

பிப்ராணஸ் ஸூகபீஜபூர கமலம் மாணிக்ய கும்பாங் குஸாந் பாஸங் கல்பலதாஞ்ச கட்க விலஸத் ஜ்யோதிஸ் ஸூதா நிர்ஜர: ஸ்யாமேணாத்த ஸரோருஹேண ஸஹிதோ தேவீத்வயே நாந்திகே கௌராங்கா வரதாந ஹஸ்த கமலோ லக்ஷ்மீ கணேஸோSவதாத் தந்தாபயே சக்ரவரௌ ததாநம் கராக்ரகம் ஸ்வர்ணகடம் த்ரிநேத்ரம் த்ருதாப்ஜ மாலிங்கிதமப்தி புத்ர்யா லக்ஷ்மீ கணேஸம் கநகாபமீடே

23. மஹா கணபதி

ஹஸ்தீந்த்ராநநம் இந்துசூடம் அருணஸ் சாயம் த்ரிநேத்ரம் ரஸாத் ஆஸ்லிஷ்டம் ப்ரியயா பத்மகரயா ஸ்வாங்கஸ்தயா ஸந்ததம் பீஜாபூர கதேக்ஷூ கார்முக லஸச் சக்ராப்ஜ பாஸோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரக்நகலஸாந் ஹஸ்தைர் வஹந்தம் பஜே

24. ஏகாக்ஷர கணபதி

ரக்தோ ரக்தாங்க ராகாம் ஸூக குஸூமயுதஸ்தும் திலஸ் சந்த்ரமௌலி: நேத்ரைர் யுக்தஸ்த்ரிபி: வாமநகர சரணோ பீஜபூரம் ததாந: ஹஸ்தாக்ரா க்ல்ருப்த பாஸாங்குஸ ரதவரதோ நாகவக்த்ரோSஹி பூஷோ தேவ:பத்மாஸநஸ்தோ பவது ஸூககரோ பூதயே விக்நராஜ:

25. வர கணபதி

ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம் ஹஸ்தே பாஸங்குஸௌ பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம் ஸாத்விந்து மௌலிம் பஜே புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா பத்மோல்லஸத்தஸ்தயா தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத் பாத்ரோலஸத் புஷ்கரம்

26. த்ரயாக்ஷர கணபதி

கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம் ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம் ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்

27. க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி

த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத: ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந: பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித: விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை

28. உத்தண்ட கணபதி

கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ பாஸஞ்ச சக்ராந்விதம் கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா தேவ்யாஸ் ஸதாஸம்யுத: ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம் உத்தண்ட விக்நேஸ்வர:

29. த்ரிமுக கணபதி

ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம் தக்ஷே ததாந: கரை: பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம் வாமே ததாநோ முதா பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத் ஸத்கர்ணிகா பாஸூரே ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ நாகாநந: பாதுந:

30. ஸிம்ஹ கணபதி

வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம் தக்ஷே விதத்தே கரை: வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம் ஸந்மஞ்ஜரீ சாபயம் ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந: ஸங்கேந்துகௌர: ஸூப: தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி: பாயாதபாயாத் ஸந:

31. துர்கா கணபதி

தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச அஷ்டஹஸ்தோ மஹத்தநு: தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம் தந்தம் தக்ஷேவஹந் கரை: வாமே பாஸம் கார்முகஞ்சலதாம் ஜம்பூத்யதத் கரை: ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத் துர்கா கணபதிர் முதே

32. ஸங்கடஹர கணபதி


பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம் தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம் நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந் ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்

27 நட்சத்திர வேதாளங்கள்

27 நட்சத்திர வேதாளங்கள்

ஆதாளியை ஒன்(று) அறியேனை, அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ!
கூதாள கிராத குலிக்(கு) இறைவா
வேதாள கணம் புகழ்வேலவனே!
-கந்தர் அனுபூதி
——————————————————————————      
1. நாகாயுதபாணி பூத வேதாளம்அஸ்வினி
2. வஜ்ரதாரி பூத வேதாளம்பரணி
3. வைராக்கிய பூத வேதாளம்கிருத்திகை
4. கட்கதாரி பூத வேதாளம்ரோகிணி
5. ஞானபூத வேதாளம்மிருகசீரிஷம்
6. தோமரபூத வேதாளம்திருவாதிரை
7. வக்ரதந்த பூத வேதாளம்புனர்பூசம்
8. விசாள நேத்ர பூத வேதாளம்பூசம்
9. ஆனந்தபைரவபக்த பூத வேதாளம்ஆயில்யம்
10. ஞான ஸ்கந்த பக்த பூத வேதாளம்மகம்
11. தர்பகர பூத வேதாளம்பூரம்
12. வீரபாகு சேவக பூத வேதாளம்உத்திரம்
13. சூரபத்ம துவம்ச பூத வேதாளம்ஹஸ்தம்
14. தாரகாசுர இம்ச பூத வேதாளம்சித்திரை
15. ஆனந்த குக பக்த பூத வேதாளம்சுவாதி
16. சூர நிபுண பூத வேதாளம்விசாகம்
17. சண்டகோப பூத வேதாளம்அனுஷம்
18. சிங்க முகாசுர இம்ச பூத வேதாளம்கேட்டை
19. பராக்ரம பூத வேதாளம்மூலம்
20. மஹோதர பூத வேதாளம்பூராடம்
21. ஊர்த்துவ சிகாபந்த பூத வேதாளம்உத்திராடம்
22. கதாபரணி பூத வேதாளம்திருவோணம்
23. சக்ரபாணி பூத வேதாளம்அவிட்டம்
24. பேருண்ட பூத வேதாளம்சதயம்
25. கோரரூப பூத வேதாளம்பூரட்டாதி
26. குரு பைரவ சேவக பூத வேதாளம்உத்திரட்டாதி
27. குரோதன பேரவ பக்த பூத வேதாளம்ரேவதி

இக்கோயில் காஞ்சிபுரம் செய்யூரில் அமைந்துள்ளது.


வாஸ்து


27 நட்சத்திர பலகாரங்கள்


27 நட்சத்திர மலர்கள்


nashathera palan (28-2-15 to 6-3-15)


                                                                          Thank you 


அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு


மூலவர்
:
பகவதி அம்மன்
 
உற்சவர்
:
-
 
அம்மன்/தாயார்
:
-
 
தல விருட்சம்
:
வேம்பு மரம்
 
தீர்த்தம்
:
-
 
ஆகமம்/பூஜை
:
-
 
பழமை
:
500-1000 வருடங்களுக்கு முன்
 
புராண பெயர்
:
மந்தைக்காடு
 
ஊர்
:
மண்டைக்காடு
 
மாவட்டம்
:
கன்னியாகுமரி
 
மாநிலம்
:
தமிழ்நாடு

  திருவிழா:

மாசிப் பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா - 10 லட்சம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.

 தல சிறப்பு:

15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு - 629 252, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

போன்:

+91 - 4651 - 222 596

 பொது தகவல்:

ஆரஞ்சு கலரில் முகப்பு.
ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில். அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று. அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன்.
பிரார்த்தனை

கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகள் குறைபாடு, திருஷ்டி, தோஷம், தலைவலி நீங்குதல் முதலிய பிரார்த்தனைகள்.

நேர்த்திக்கடன்:

கல்யாண காரியங்களுக்கு பட்டு, தாலி காணிக்கை செலுத்தலாம். உடல் நலம் குணமாக வெள்ளியில் கை, கால் வடிவம் செய்து வைத்து வழிபட்டால் நோய் குணமாகிறது. மண் சோறு சாப்பிடலும் நடக்கிறது. திருஷ்டி தோஷம் கழிய வெடி வழிபாடு செய்யப்படுகிறது.

 தலபெருமை:

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப்பிரபலமான கோயில்

மண்டையப்பம் : பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.

15  அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது  சிறப்பு

இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்.

தரையிலிருக்கும் ஸ்ரீ சக்ரம் மேல் புற்று வளர்ந்து கொண்டே வந்தது.

காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு பிரசாதமாக புட்டமுது கொடுக்கப்படுகிறது.

   தல வரலாறு:

காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.

இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார். அந்த ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது.

இத்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும் அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு.


Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer