Tuesday, 27 October 2015
Monday, 12 October 2015
நவராத்திரி விரதம் பிறந்த கதை
நவராத்திரி விரதம்
பிறந்த கதை
நவராத்திரி
விழா ஆண்டு தோறும் புதுப்புது
மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற
சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது
என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக
அம்மன் ஒன்பது நாள் போர்
செய்து பத்தாம் நாள் வெற்றி
பெறுகிறாள். மகிஷம் என்றால் எருமை.
இது சோம்பல் மற்றும் அறியாமையின்
சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி
மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது
நாள் விழா கொண் டாடப்படுகிறது.
இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை
என்னும் இருள் விலக அம்பிகையை
இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம்.இருள்
விலகி ஒளி பிறந்த பத்தாம்
நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம்.
ஒரு நாளில் பகல் என்பது
சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின்
அம்சமாகவும் கருதப்படுகிறது.பகலும் இரவும் இல்லாவிட்டால்
நாள் என்பது கிடையாது. பகலில்
உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன்
மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க
செய்கிறாள்.
இரவெல்லாம்
விழித்திருந்து உலகை காக்கும் அம்பிகைக்காக
ஒன்பது நாள் இரவு மட்டும்
திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர். இதன் பின்னணியில்
உள்ள கதை வருமாறு:-
சும்பன்,
நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின்
அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே
எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும்
என்ற வரத்தை பெற்றிருந்தனர்.
எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர்.
அவர்களது
அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும்
தோன்றினர்.காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான
அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.
பிராம்மணி
என்ற பிரம்ம சக்தி அன்ன
வாகனத்தில் அட்சமாலை , கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி
கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை
தாமரைப்பூவுடனும் மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி
ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும் கவுமாரி
என்ற கார்த்திகேய சக்தி மïர
வாகனத்தில் வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி
ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய
சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும்
சாமுண்டா என்ற பைரவரின் சக்தி
எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி
என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை
ஆயுதமாகவும் கொண்டு
கமல பீடத்தில் தோன்றினார்கள்.
இவர்கள்
காளிகா என்ற சண்டிகா தேவியுடன்
ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த
நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர்.
அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள்
கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த
வைபவம் நவராத்திரிஎனப்படுகிறது. படைத்தல்,
காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே.
பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம்
பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்
பவள் அவளே. முத்தொழில் புரியும்
மும் மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே.
தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது
மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி
மாதப் பிரதமை முதல் நவமி
வரை நவராத்திரி காலமாகும்.
அதில் முக்குணங் களுக்கும் மூலமான சர்வ லோக
நாயகியை ஒன் பது நாள்களும்
பூஜிக்கும் போது, முதல் மூன்று
நாள்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த
மூன்று நாள்கள் மகாலட்சுமியையுëம்,
கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும்
வணங்கவேëண்டும். வணங்குவதால் எதையும்
பெறலாம். கல்வி,இசை,புகழ்செல்வம்தானியம்,வெற்றி, தண்ணீர்
ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.
ஆதிபராசக்தியை
துர்க் கையாக நினைத்து வழிபட்டால்
பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித்
தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக
எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவே தான் இந்நாட்களில்
கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து,
இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.
இதற்கு
காரணம், தேவியால் தான் இந்த உலகம்
இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய
மும்மூர்த்திகளும் ருத்திரன்,
சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற
வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி,
மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடëக்கமாக உள்ளனர். எனவே
சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக
அர்த்தம்.*
சகல சௌபாக்கியங்களும் தரும் நவராத்திரி விரதம்
சகல சௌபாக்கியங்களும் தரும் நவராத்திரி விரதம்
ஆத்தாளை,
எங்கள் அபிராம வல்லியை, அண்டம்
எல்லாம்
பூத்தாளை,
மாதுளம் பூ நிறத்தாளை, புவி
அடங்கக்
காத்தாளை,
ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை,
முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
புரட்டாசி
மாதப் பிரதமை தொடங்கி நவமி
வரை வரும் ஒன்பது தினங்கள்
நவராத்திரி விரத காலமாகும். அதில்
முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக
நாயகியை ஒன்பது நாட்களும் பூஜித்து
வழிபடும் போது, முதல் மூன்று
நாட்கள் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் வேண்டியும்,
அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீ
மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்)
வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீ
சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல
கலை ஞானங்கள் என்பவற்றை
வேண்டியும் வணங்குகின்றோம்.
புரட்டாசி
மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன்,
கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும்.
இக்காலம் தேவர்களுக்கு இராக்காலம் என வரலாறு கூறுகிறது.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன
காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப்
பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம்
எல்லோரும் கொண்டாடுகிறோம். கன்னி ராசிக்கு அதிபதியானவன்
புதன் வித்யாகாரகன் என்று அழைக்கப்படுகிறான். கல்வி,
புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக
அமைய இந்த புதனின் பார்வை
மிகவும் முக்கியமானது. எனவே தான் இந்தக்
காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது மிகவும் சிறந்தது என கருதுகின்றனர்..
நவராத்திரி
என்றாலே சக்தியை வழிபடுவது என்பது
தான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி
மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின்
முக்கிய தத்துவம் ஆகும். பராசக்தியே சர்வ
வல்லமை படைத்தவர் ஆவார். இந்த விரதத்தை
அனுஷ்டித்தால் சகல சொபாக்கியங்களும் கிடைப்பது
உறுதி.
Saturday, 10 October 2015
வீட்டில் கொலு வெச்சுருக்கீங்களா? இதோ சில சூப்பர் டிப்ஸ்....
வீட்டில் கொலு வெச்சுருக்கீங்களா? இதோ சில சூப்பர் டிப்ஸ்....
நவராத்திரி
என்றாலே ஒன்பது நாட்கள் நடைபெறும்
ஒரு பண்டிகை என்பது அதன்
பெயரிலேயே தெரிகிறது. மேலும் நவராத்திரியில் கொலு
வைப்பது தான் முக்கியமானது. ஆகவே
இந்த நாட்களில் அனைத்து வீடுகளிலும் கொலு
பொம்மைகளை வாங்கி வைத்து, வீட்டில்
அலங்கரித்து, விதவிதமான ரெசிபிக்களை செய்து, கடவுளுக்கு படைத்து
வருவார்கள். அதிலும் இந்த நவராத்திரி
பெண்கள் போற்றுதலுக்குரிய நாள் என்று சொல்லலாம்.
சொல்லப்போனால் நவராத்திரியை பெண்கள் போற்றும் நவராத்திரி
என்று சொல்வார்கள்
ஏனெனில் பெண்கள் இந்த
நாட்களில் வீட்டில் கொலுவை அமைத்து பூஜை
செய்து வருவார்கள். அதிலும் இந்த நாட்களில்
பெண் தெய்வங்களான லட்சுமி, சரஸ்வதி, துர்கையை போற்றும் வகையில் வீட்டில் படிக்கட்டுகளை
அமைத்து, பொம்மைகளை வாங்கி அடுக்கி, வீட்டிலேயே
தெய்வத்தை குடியிருக்கும் வகையில் அலங்காரங்களை செய்வார்கள்.
இப்போது அவ்வாறு செய்யும் கொலு
அலங்காரத்திற்கு ஒரு சில டிப்ஸ்...
* கொலுவில்
வைக்கும் பொம்மைகளில் தூசிகள் ஏதேனும் இருந்தால்,
அப்போது அதன் மேல் மண்ணெண்ணெய்
தடவி, விபூதியால் துடைத்தால், பளிச்சென்று இருக்கும்.
* கொலுவை வைக்கும் போது
கண்டிப்பாக, அங்கு மலையையும் செட்
செய்வார்கள். அவ்வாறு மலையை செட்
பண்ணும் போது, ஒரு தகர
டப்பாவை கவிழ்த்து வைத்து, அதனுள் சாம்பிராணியை
எரிய வைத்தால், அந்த மலை தேவலோகத்தில்
வரும் புகைப்போல் காட்சியளிக்கும். மேலும் அந்த இடமே
வாசனையுடன் இருக்கும்.
* சிலர்
தெப்பக்குளம் போல் அமைப்பார்கள். அவ்வாறு
அமைக்க ஒரு அகன்ற பாத்திரத்தில்
நீரை ஊற்றி, அதில் சிறிய
வாத்து பொம்மைகள், கலர்கலரான தெர்மாகோல் உருண்டைகள், ஜிகினா போன்றவற்றை நீரின்
மேல் தூவினால், குளம் நன்கு ஜொலிக்கும்.
* கொலு என்றாலே அதில்
எதை வேண்டுமானாலும் வைக்கலாம். சிலர் பூங்காவை வைப்பார்கள்.
அவ்வாறு பூங்காவை அமைக்கும் போது, அங்கு செடிகள்
வளர்ந்திருப்பது போல் இருக்க, கடுகு
மற்றும் கேழ்வரகை நீரில் இரண்டு மணிநேரம்
ஊற வைத்து, பின் சிறிய
பிளாஸ்டிக் டப்பாவில் மண்ணை போட்டு, அதன்
மேல் இந்த கடுகு மற்றும
கேழ்வரகைத் தூவினால் விரைவில் முளைத்துவிடுவதோடு, செடி போன்றும் அழகாக
காணப்படும்.
* படிகள்
அமைக்கும் போது இதன் இரு
ஓரங்களும் அழகாக இருக்க, வீட்டில்
இருக்கும் காலியான ஸ்ப்ரே பாட்டில்
அல்லது சென்ட் பாட்டிலின் மீது,
கலர் பேப்பரை சுற்றியோ அல்லது
அந்த டப்பாவின் மேல் பசையைத் தடவி,
பாசி அல்லது முத்துக்களையோ அதன்
மேல் ஒட்ட வைத்து, பின்
அதனுள் பூங்கொத்துக்களை வைத்தால், பார்க்க அழகாக இருக்கும்.
* ஏதேனும்
புல்வெளி அல்லது புல் தரைகள்
அமைக்க வேண்டுமென்றால், வீட்டில் தேங்காய் பால் எடுத்த தேங்காய்
சக்கையை, பச்சை கலர் பவுடரில்
கலந்து, பரப்பினால், புல்வெளிகள் போன்று காட்சியளிக்கும்.
ஆகவே வீட்டில் கொலு வைப்பவர்கள், மேற்கூறிய
சில டிப்ஸ்களை படித்து, உங்கள் வீட்டுக் கொலுவையும்
அழகாக அலங்கரித்து மகிழுங்கள்.
நவராத்திரி கொலு டிப்ஸ்
நவராத்திரி கொலு டிப்ஸ்
நவராத்திரி
கொலுவில் வைக்க, புத்தம் புதிய
பொம்மைகள் தான் வேண்டும் என்ற
அவசியமில்லை. நிறம் மங்கிய பழைய
பொம்மைகளை ஏதேனும் ஒரு அடர்த்தியான
கலரில் பெயிண்ட் அடித்து, புதுப்பித்து பயன்படுத்தலாம்.
* கொலுவில்
சாம்பிராணியை சின்ன டப்பாக்களில் ஆங்காங்கே
வைத்தால், பார்க்க நன்றாகவும் இருக்கும்,
நல்ல மணமாகவும் இருக்கும். எந்தப் பூச்சியும் கொலு
வைத்திருக்கும் இடத்தை அண்டாது.
* நவராத்திரி
கொலுவில் பூங்கா போன்று செட்
போடும் போது, கீழே கனமான
பிளாஸ்டிக் பேப்பரை போட்டு, அதன்
மீது மண்ணை போட்டு பரப்பவும்,
மரத்தூளோடு, பச்சைக்கலரை கலந்து, அதை மண்ணில்
தூவி விட்டால் புல்வேளி போல் பசுமையாக அழகாக
இருக்கும்.
* தினமும்
கொலுவுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.
பூஜை எல்லாம் முடிந்தவுடன் கொலுவுக்கு
ஆரத்தி எடுத்து யார் காலும்
படாத இடத்தில் செடியில் ஆரத்தி தண்ணீரை ஊற்றவும்.
* கொலுவுக்கு
வருபவர்களுக்கு தினமும் பிரசாதம்
வழங்கலாம். சுண்டல், ஐஸ்க்ரீம், இனிப்பு, கார வகைகள், ஸ்டிக்கர்
பொட்டு ஆகியவற்றை வழங்கினால் விருந்தினர்களும் சந்தோஷமாக செல்வார்கள்.
* கொலுவில்
மலை அமைக்க, மண் கொட்டி
கஷ்டப்பட வேண்டாம். மண்ணை கரைத்து ஊற்றி
காய்ந்த பழைய துணியை நான்கு
குச்சிகள் மீது வைத்தால் மலை
போல் இருக்கும். தேவையான இடத்தில் மண்ணைத்தூவி
கொள்ளலாம்.
* கொலுவுக்கு
வரும் விருந்தினர்களுக்கு புது பொம்மைகளை தாம்பூலத்துடன்
சேர்த்து வழங்கினால், பொம்மைகள் சேரும். விருந்தினர்களுடன் வரும்
குழந்தைகளும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்வார்கள்.
* கோவிலில்
சந்தனக் காப்பு செய்து, பூஜை
முடிந்த பிறகு கலைத்த சந்தனத்தை
பிள்ளையார் போல் செய்து கொலுவில்
வைத்து வணங்கினால், திருமணமாகாத பெண்களுக்கு திருமண யோகம் கிட்டும்.
* முன்பெல்லாம்
வீட்டில் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள்
இருந்தால் மரப்பாச்சியில் ஆண், பெண் பொம்மைகள்
செய்து அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள், கொலுவில் எப்போதும் இடம் பெறும் மரப்பாச்சியிலான
பொம்மைகள் இடம் பெறுவது சிறப்பாக
கருதப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)