Wednesday, 29 November 2017

அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா காலடி- எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்

அருள்மிகு ஐயப்பன்(அம்பாடத்து மாளிகா) திருக்கோயில்


மூலவர் : ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : பூர்ணாநதி
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : மஞ்ஜப்புரா
  மாவட்டம் : எர்ணாகுளம்
  மாநிலம் : கேரளா

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலின்படி, விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.
 
தல சிறப்பு:
 
  இங்கு ஐயப்பனுக்கு சிலை இல்லை. ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல். இத்தலத்தில் மூலவராக இருப்பது தலசிறப்பு.
 
திறக்கும் நேரம்:
 
  தினமும் இக்கோயில் திறக்கப்படாது. சபரிமலையில் நடை திறக்கும் மாதபூஜை உள்ளிட்ட நாட்களில் மட்டும், காலை 5 - 1 மணி, மாலை 5 - 8 மணி வரை நடை திறந்திருக்கும். பங்குனி உத்திரத்தன்று நடை திறக்கப்பட்டிருக்கும். பெண்களுக்கும் அனுமதி உண்டு.
 
முகவரி:
 
  அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா காலடி- எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.
 
போன்:
 
  +91- 484 - 228 4167.
 
பொது தகவல்:
 
  பங்குனி உத்திரத்தில் சிவ, விஷ்ணுவின் புதல்வராக தர்மசாஸ்தா அவதரித்தார். சாஸ்தாவின் அவதாரமே ஐயப்பன் என்பதால் பங்குனி உத்திரத்தன்று நடை திறக்கப்பட்டிருக்கும். பெண்களுக்கும் அனுமதி உண்டு.
 

பிரார்த்தனை
 
  தீராத நோய்கள், திருமணத்தடை, அனைத்து வித பிரச்னைகளும் தீர இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
 
நேர்த்திக்கடன்:
 
  பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
 
தலபெருமை:
 
 
அம்பாடத்து மாளிகா குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை என்பவர் ஆண்டுதோறும் சபரிமலை சென்று வந்தார். வயதான காரணத்தினால் அவர் சபரிமலை செல்ல சிரமப்பட்டார். ஒருமுறை இவர் சிரமப்பட்டு மலையேறும் போது, அந்தணர் ஒருவருடன் ஓரிடத்தில்
தங்க நேர்ந்தது. அவர் கேசவன் பிள்ளையிடம் ஒரு வெள்ளிமுத் திரையுடன் கூடிய தடி, விபூதிப்பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றை கொடுத்து விட்டு, "இதோ வருகிறேன்' என கூறி சென்றார். ஆனால், திரும்பி வரவில்லை.கேசவன் பிள்ளை ஐயப்பனை தரிசித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது, அந்த அந்தணர் அவரை சந்தித்து, "நான் கொடுத்த மூன்று பொருள்களையும் பூஜித்து வாருங்கள்' எனக் கூறிவிட்டு மாயமாகி விட்டார். அந்தணராக வந்தது ஐயப்பனே என இவர்கள் கருதுகின்றனர்.அன்று முதல் அம்பாடத் துமாளிகா குடும்பத்தினர் கோயில் ஒன்றை கட்டி, மூலஸ்தானத்தில் இந்த மூன்று பொருள்களையும் வைத்து, அவற்றை ஐயப்பனாக கருதி பூஜித்து வருகின்றனர்.



 
 தல வரலாறு:
 
 
ஐயப்பனின் தந்தையான பந்தளராஜாவுக்கு உதயணன் என்ற திருடனால் தொந்தரவு இருந்தது. உதயணன் மக்களிடம் கொள்ளையடித்து வந்தான். இதனால் பந்தள மகாராஜா தன் மகன் ஐயப்பனிடம் இதுபற்றி சொன்னார். ஐயப்பன் உதயணனை அழிக்கச்சென்ற போது, அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டு ராஜாக்கள் தங்கள் படையுடன் அவருக்கு உதவியாக சென்றனர். அன்றுமுதல் இந்தக் குடும்பங்கள் ஐயப்பனின் நெருங்கிய நண்பர் களாயினர்.இதன் பிறகு ஐயப்பன், மகிஷியை அழிக்க பூமிக்கு வந்த தன் கடமை முடிந்து விட்டதால், சபரிமலைக்கு புறப்பட்டார். தான் செல்லும் முன் எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி  அம்பலப்புழா மற்றும் அம்பாடத்து மாளிகா குடும்பத்தினரிடம் விளக்கினார். உடனே அம்பலப்புழா குடும்பத்தினரும், ஐயப்பனின் நண்பரான வாபரும் எருமேலி வழியாக சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைத்தனர். இதுவே "பெரிய பாதை' எனப்படுகிறது. இதன்பிறகு, ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர். அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சாஸ்தா சிலையில், ஐயப்பன் ஜோதி சொரூபமாக ஐக்கியமாகி விட்டார். அன்றிலிருந்து ஆண்டு தோறும் பெரியபாதை வழியாக அம்பலப்புழா குடும்பத்தினரே முதலில் சபரிமலை செல்கின்றனர். அடுத்ததாக அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர் செல்வர்.அத்துடன் பெரியபாதையில் திருவாபரணப்பெட்டி செல்லும் போது அம்பலப்புழா குடும்பத்தினர் வழி ஏற்படுத்தி கொடுக்க, அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர் திருவாபரணப்பெட்டியுடன் செல்கின்றனர்.



 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஐயப்பனுக்கு சிலை இல்லை. ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல். இத்தலத்தில் மூலவராக இருப்பது தலசிறப்பு. 

திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை மண்டபம், 3ஏ, மலையடிவாரம், ஆர்.வி. நகர், திண்டுக்கல்-624002

அருள்மிகு ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை திருக்கோயில்


மூலவர் : ஐயப்பன்
  உற்சவர் : ஐயப்பன்
  அம்மன்/தாயார் : மஞ்ச மாதா
  தல விருட்சம் : வில்வமரம்/ அரசமரம்- வேப்பமரம்
  தீர்த்தம் : கோட்டை கேணி
  ஆகமம்/பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் ஆகம முறைப்படி
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : திண்டுக்கல்
  ஊர் : திண்டுக்கல்
  மாவட்டம் : திண்டுக்கல்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  கார்த்திகை முதல் தேதி கொடியேற்றம்- டிச- 26- மண்டலபூஜை, டிச 27 ரத ஊர்வலம், சபரிமலைக்கு மண்டல, நடைதிறப்பு, மகரயாத்திரை, கார்த்திகை, மார்கழி முழுவதும் நித்ய பூஜை, தினமும் அன்னதானம், சனிதோறும் இரவு அன்னதானம்.
 
தல சிறப்பு:
 
  தற்போது சபரிமலையில் உள்ள ஐயப்ப விக்ரகம், தமிழ்நாடு முழுவதும் பி.டி. ராஜன் தலைமையில் சுற்றி வந்தபோது, திண்டுக்கல் இப்பிரார்த்தனை மண்டபத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது சிறப்பு அம்சமாகும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை மண்டபம், 3ஏ, மலையடிவாரம், ஆர்.வி. நகர், திண்டுக்கல்-624002
 
போன்:
 
  +91 451 2427951, 97865- 47058
 
பொது தகவல்:
 
  திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் இக்கோயில் உள்ளது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள கோயில் முன் மஞ்சள் மாதா சன்னதியும், கம்பத்தடி விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளது. வலது புறம் நாகராஜன் சன்னதி உள்ளது. பிரார்த்தனை மண்டபத்தின் முன் கோபுரத்தில் புலிவாகனங்கள் உள்ளது. உட்புறம் பிரார்த்தனை மண்டபத்தில் ஐயப்ப சுவாமிகள் தரிசனம் தருகிறார். இங்கு 500க்கும் அதிகமானோர் அமர்ந்து ஐயப்பனை வழிபடலாம். இடதுபுறம் வசந்தமண்டபம், அதன் இடப்புறம் விநாயகர் சன்னதிஉள்ளது. பிரார்த்தனை மண்டப வலப்புறம் கலையரங்கம், அன்னதான கூடம் உள்ளது.டிசம்பர் 26 மண்டலபூஜை அன்று மதியம் 12 மணிக்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்படும்.
 

பிரார்த்தனை
 
  குடும்ப நலன், குழந்தை பாக்கியம், திருமணதடை நீக்கம், தீராத நோய் விலகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
 
நேர்த்திக்கடன்:
 
  அன்னதானம் வழங்குவதற்கு தேவையான பொருட்கள் வழங்கல், மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானம் செல்தல்.
 
தலபெருமை:
 
  இங்குள்ள மண்டபத்தை 1969ல் திரு. ராஜகோபால் நாயுடு (வாணக்காரசாமி) தலைமையிலான குழு அமைத்தது. 1999ல் கும்பாபிஷேகம் நடந்தது.  திண்டுக்கல் ஆன்மிக பக்தர்கள் நீங்கலாக, பிற மாநில ஐயப்ப பக்தர்களும், வெளிநாடு வாழ்  பக்தர்களும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து தங்குகின்றனர். இங்கிருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆன்மிக யாத்திரை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து இலவசமாக தங்கி செல்கின்றனர். கோட்டை மாரியம்மன் திருவிழாவின் போது ஆராதனைகளை பக்தர்கள் இங்கிருந்து தீச்சட்டி எடுத்து சென்று அம்மனை வழிபடுகின்றனர்.

 
 தல வரலாறு:
 
  கடந்த 1967-ல் ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலை ஐயப்பனின் போட்டோ வைத்து வழிபட்டனர். அதன் பின் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, 1969ல் பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுகள் தோறும் விரிவாக்கம் செய்யப்பட்டு, வசந்த மண்டபம், கலையரங்கம் கட்டப்பட்டது. விநாயகர் சிலை வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில பக்தர்கள் இங்கிருந்து  சபரிமலை சென்றநிலை அதிகரித்து தற்போது, கார்த்திகை, மார்கழி காலங்களிலும் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் இங்கிருந்து பக்தர்கள்  சபரிமலை செல்கின்றனர். 2013-14ல் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: தற்போது சபரிமலையில் உள்ள ஐயப்ப விக்ரகம், தமிழ்நாடு முழுவதும் பி.டி. ராஜன் தலைமையில் சுற்றி வந்தபோது, திண்டுக்கல் இப்பிரார்த்தனை மண்டபத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது சிறப்பு அம்சமாகும். 

அருள்மிகு வெண்ணுமலையப்பர் திருக்கோவில், பெரியகண்டியங்குப்பம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.

அருள்மிகு வெண்ணுமலையப்பர் திருக்கோயில்

மூலவர் : வெண்ணுமலையப்பர்
  உற்சவர் : வெண்ணுமலையப்பர்
  அம்மன்/தாயார் : பூரணி, பொற்கலை
  தல விருட்சம் : வன்னி மரம்
  தீர்த்தம் : தீர்த்தகுளம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : பெரியகண்டியங்குப்பம்
  ஊர் : பெரியகண்டியங்குப்பம்
  மாவட்டம் : கடலூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம் 10 நாள் உற்சவம், சித்திரை வருடப்பிறப்பு,
 
தல சிறப்பு:
 
  விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது.
 
திறக்கும் நேரம்:
 
  மாலை 3 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு வெண்ணுமலையப்பர் திருக்கோவில், பெரியகண்டியங்குப்பம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
 
போன்:
 
  +91 9486881433
 
பொது தகவல்:
 
  கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், ஆதி அய்யனார், கருப்பசாமி, சுந்தரமூர்த்தி அய்யனார், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளன.
 

பிரார்த்தனை
 
  திருமண தடை நீங்கவும், நோய்கள் குணமாகவும், குழந்தை பாக்கியம் பெறவும், திருடு போன பொருள்கள் மீண்டும் கிடைக்கவும் பிரார்த்தினை செய்யப்படுகிறது.

 
நேர்த்திக்கடன்:
 
  கிடா வெட்டி பூஜை, வீரனாருக்கு பிராது கட்டும் முறை.
 
தலபெருமை:
 
  -
 
 தல வரலாறு:
 
  சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் இருந்து திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வழியாக திருநாவலூர் சென்றார். அப்போது விருத்தகிரீஸ்வரர் அவரை அழைத்து, தன்னை பற்றி பாடல் பாடுமாறு கூறினார். அதற்கு சுந்தரமூர்த்தி நாயனார் மறுத்துவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தார். பின்னர் விருத்தகிரீஸ்வரர் தனது காவலாளிகளை விட்டு, சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வரச்செல்லி மீண்டும் தன்னை பற்றி பாடல் பாடும்படி கூறுகிறார். அப்போதும் சுந்தரமூர்த்தி நாயனார் மறுத்துவிட்டுச் சென்றார். இதனால், ஆத்திரமான விருத்தகிரீஸ்வரர், இவ்வழியாக மீண்டும் சுந்தரமூர்த்தி நாயானார் வரக்கூடாது என்பதற்காக, வடக்கு எல்லையான பெரிய கண்டியங்குப்பத்தில் வெண்ணு மலையப்பரை, காவலுக்கு  நியமித்தார் என்பது இக்கோவிலின் ஐதீகம்.
 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது. 

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில் சி.சாத்தமங்கலம், சிதம்பரம் கடலூர் மாவட்டம்.

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில்


மூலவர் : சாஸ்தா
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : பூரணை, புஷ்கலை
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை :
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : சாஸ்தாமங்கலம்
  ஊர் : சாத்தமங்கலம்
  மாவட்டம் : கடலூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  வைகாசி பிரமோற்ஸவம் எனப்படும் பத்து நாள் திருவிழா
 
தல சிறப்பு:
 
  சாஸ்தா கையில் சாட்டையுடன் இருப்பது சிறப்பு.மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு சாஸ்தா திருக்கோயில் சி.சாத்தமங்கலம், சிதம்பரம் கடலூர் மாவட்டம்.
 
 
பொது தகவல்:
 
  இங்குள்ள சாஸ்தாவிற்கு வாகனமாக யானை வாகனம் உள்ளது. இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும். மேலும் ஐயனார் கோயிலுக்கே உரிய விதத்தில் சுமார் பத்தடி உயரம் கொண்ட நான்கு குதிரைகள் சுதையால் செய்யப்பட்டுள்ளன.
 

பிரார்த்தனை
 
  கையில் சாட்டையுடன் உள்ள சாஸ்தாவை வணங்கினால் எதிரி பயம் நீங்கும் என்பதும், பூரணை புஷ்கலையுடன் உள்ள கல்யாண வரதர் எனப்படும் கல்யாண சாஸ்தாவை வணங்கினால் திருமண தடைகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.
 
நேர்த்திக்கடன்:
 
  இங்குள்ள சாஸ்தாவிற்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஹரிஹரபுத்திர சுவாமி சாஸ்தா மூலஸ்தானத்தில் இருபுறமும் இரண்டு அம்பாளுடன் (பூரணை, புஷ்கலை) கருங்கல் சிலா விக்ரகமாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார். மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. ஆண்டவன் என அனைவராலும் போற்றப்படும் சாஸ்தாவிற்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்ஸவம் எனப்படும் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து தினங்களும் காலையிலும் இரவிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஒன்பதாம் நாள் தேர் திருவிழாவும் பத்தாம் நாள் பகலில் அருகில் உள்ள வெள்ளாற்றில் தீர்த்தவாரியும் இரவு பூரணை புஷ்கலையுடன் திருக்கல்யாணமும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் புஷ்ப பல்லக்கு நடைபெறும். அன்று பல ஊர்களில் இருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வந்து சாஸ்தாவிற்கு நாதஸ்வர இசை அஞ்சலி செலுத்துவர்.
 
 தல வரலாறு:
 
  ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு திருடர்களால் மிகவும் தொந்தரவு ஏற்பட்டு வந்தது. இதனால் வருந்திய மக்கள் காவல் தெய்வமான சாஸ்தாவை வழிபட விரும்பினர். இதன் அடிப்படையில் இங்கு பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு திருடர்களின் தொந்தரவு நீங்கி நிம்மதி ஏற்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் திருடர்கள் நுழைந்து பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரின் ஐம்பொன்சிலைகளை திருடி சென்று விட்டனர். பின்னர் ஹரிஹரபுத்திரரின் அருளால் அவர்களே இச்சிலைகளை இங்கு கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விட்டனர். கையில் சாட்டையுடன் உள்ள இந்த சாஸ்தாவை வணங்கினால் திருடர்கள் மற்றும் எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது நம்பிக்கை.
 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. 

Friday, 24 November 2017

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்-25

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்



மூலவர் : ஐயப்பன்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : மேட்டுப்பாளையம்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  மே மாதத்தில் வரும் ஹஸ்த நட்சத்திரதன்று நடைபெறும் பிரதிஷ்டா தின சிறப்பு பூஜை வருட முக்கிய பூஜைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, விஷூ, ஆடிமாத கடைசி வெள்ளியன்று அஷ்டத்ரவ்ய மஹா கணபதி ஹோமம், ஓணம், விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, வித்யாரம்பம், தீபாவளி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும் கார்த்திகை முதல் மார்கழிமுடிய தினமும் ஆராதனைகள் உண்டு. இவையல்லாமல் வியாழன்று சந்தான கோபால பூஜை, வெள்ளியன்று மாங்கல்ய புஷ்பாஞ்சலி, முதல் தமிழ்மாத சனிதோறும் புஷ்பாஞ்சலி அமாவாசையன்று காரிய சித்தி ஸ்ரீபகவதி சேவை பூஜை என எண்ணற்ற பூஜைகள் நடைபெறுகின்றன. மண்டல காலத்தில் தினமும் கணபதி ஹோமத்துடன் தொடங்கும் பூஜைகள், பிற ஆராதனைகள், ஐயப்பமார்களின் சரண கோஷங்கள் கருவறையைச் சுற்றிலும் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகள், வேத கோஷங்கள் என நம்மை இறையருளில் மெய்மறக்க செய்கின்றன.
 
தல சிறப்பு:
 
  -
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்-25
 
போன்:
 
  +91 (04254) 22 22 76
 
பொது தகவல்:
 
  கோயில் பணிகள் நிறைவுற்ற நிலையில், தலைவர் பொறுப்பில் இருந்தவரின் காலில் இருந்த ஆறாத புண்ணும் பூர்ணமாக ஆறி, நல்ல நலத்துடன் காணப்படுகின்றார். நடப்பதற்கு எந்த விதமான அவஸ்த்தையும் இல்லை. இது ஐயப்பன் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையும் அவன் கருணையுமின்றி வேறு என்னவாக இருக்க முடியும் என நினைவு கூறுகின்றார். 25 ஆண்டுகளாக காலில் ஏற்பட்ட புண்ணால் பட்ட துன்பங்களும் சிரமங்களும் வார்த்தைகளால் சொல்லி மாளாது. இத்துடன் சபரிமலைக்கு சென்றதோடு ஐயப்பனுக்கும் தளராமல் சேவை செய்தேன். மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் பூர்ண நலம் பெற்றேன் என்றார். கோயில் கேரள சிற்ப சாஸ்திர முறைப்படி கட்டப்பெற்றுள்ளது. மூன்று கலசங்களையுடைய ஒரு நிலை ராஜ கோபுரமும் பெரிய நுழைவு வாயிலையும் கொண்டுள்ளது. கருவறையைச் சுற்றி கணபதி, முருகன், பகவதி மகாவிஷ்ணு மற்றும் நவகிரஹ சன்னதிகள் அமைந்துள்ளன. உட்பிரகார சுவற்றில் ஐயப்பனின் வரலாற்றைக் குறிக்கும் படங்களையும் அதன் விளக்கங்களையும் அழகுடன் புகைப்படங்களாக காட்சிப்படுத்தி உள்ளனர். சிறிய கோயிலாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைத்திருப்பது சிறப்பு.
 


பிரார்த்தனை
 
  -
 
நேர்த்திக்கடன்:
 
  -
 
தலபெருமை:
 
  10 தூண்களைக் கொண்ட முன் மண்டபத்தில் பலிபீடமும், செப்புத் தகடுகள் வேய்ந்த நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய நெடிதுயர்ந்த கொடிக்கம்பம் நம்மை வரவேற்பதைப் போல் உள்ளது. மண்டபத்தூண்களில் தசாவதார சுதைச் சிற்பங்களை நேர்த்தியாக அமைத்துள்ளனர். கருவறையில் சாந்தமே உருவான புன்னகை தழும்பும் முகத்துடன், எண்ணற்ற நெய் தீபங்களின் ஒலி வெள்ளத்தில் கருணையோடு அருள்பாலிக்கின்றார். கோயில் முழுவதும் தீபம் எரியும் நெய்யின் நறுமணம் வியாபித்துள்ளதை உணரமுடிகிறது.
 
 தல வரலாறு:
 
  மலைகளின் ராணியாக வீற்றிருந்து கொள்ளை கொள்ளும் அழகு கொண்டது நீலகிரிமலை. இம்மலையின் அடிவாரத்தில் பசுமையான தென்னை, பாக்குத்தோப்புகள் அடர்ந்த பகுதியில், மேட்டுப்பாளையம் சிவன் புரத்தில் அமைந்த எழில்மிகு திவ்ய க்ஷேத்திரம் தான் ஐயப்பன் திருக்கோயில். காரமடை சாலையில் மேற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. ஐயப்பன் கோயில் என்றாலே ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளங்குவதைக் காணமுடியும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் இந்நகரில் ஐயப்பனுக்கென தனிக் கோயில் ஏதும் இல்லை. சபரிமலைக்குச் செல்ல மாலை போடுவதற்கும் கட்டுநிறை செய்வதற்கும் 45 கி.மீ. தொலைவில் உள்ள கோவைக்குச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. சபரிமலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் கூடிக்கொண்டே வந்தது. ஒத்த குணங்களையுடைய பக்தர்கள் சேர்ந்து ஐயப்ப சேவா சமிதி என்ற அமைப்பினை ஏற்படுத்தினர் பின் ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது.

இப்பூஜை, ஐயப்பனுக்கு கோயில் அமைப்பதற்கென, ஆண்டவனிடம் விண்ணப்பம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜை ஆகும். இவ்வாறு நடத்தப்பெற்ற பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு சுவாமி ஐயப்பன் கோயில் கட்ட அனுமதி வழங்கினார். அதுவரை பிற கோயில்களில் ஐயப்பன் படத்தை

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், மணிகண்டன் நகர், இடையர்பாளையம், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 108.

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்



மூலவர் : ஐயப்பன்
  உற்சவர் : ஐயப்பன்
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : தமிழ் ஆகமத்தின்படி பூஜை
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : இடையர்பாளையம்
  ஊர் : குனியமுத்தூர்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  ஆடிவெள்ளி, புரட்டாசி மாத நவராத்திரி, கார்த்திகை மாத சபரிமலை ரதயாத்திரை போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
 
தல சிறப்பு:
 
  -
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5.30 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், மணிகண்டன் நகர், இடையர்பாளையம், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 108.
 
போன்:
 
  +91 82202 36779, 94430 91917
 
பொது தகவல்:
 
  கோயில் கிழக்கு முகம் பார்த்து உள்ளது. ஐயப்பன் கிழக்கு பார்த்து உள்ளார். மகாகணபதி கிழக்கு பார்த்தும், காசி விஸ்வநாத விசாலாட்சி கிழக்கு பார்த்தும், முருகன் வள்ளி, தெய்வானை கிழக்கு பார்த்து, லட்சுமி நாராயண மகாலட்சுமி கிழக்கு பார்த்தும், துர்க்கை வடக்கு பார்த்தும், செல்வ கணபதி வடக்கு பார்த்தும், மாரியம்மன் பொறவியம்மன், ஆதிபொரவியம்மன் வடக்கு பார்த்து, ஆஞ்சநேயர், உற்சவ மூர்த்தி ஐயப்பன் கிழக்கு பார்த்து, தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து, பைரவர் தெற்கு பார்த்தும், நவகிரக பஜனை மண்டபம் உள்ளது.
 


பிரார்த்தனை
 
  திருமணத்தடை, குழந்தைபாக்கியம், உத்தியோகம் கிடைக்க இங்கு பிரார்த்திக்கின்றனர்.

 
நேர்த்திக்கடன்:
 
  முருகனுக்கு 12 வாரம் பூஜை செய்தால் கல்யாணம் நடக்கும், திருமணம் நடந்தவுடன் முருகனுக்கு தாலி செய்து தருகின்றனர். துர்கை அம்மனுக்கு வெள்ளி, செவ்வாய் ராகு காலம் பூஜை செய்தால் கல்யாணம் மற்றும் குழந்தை பெறும், ஐயப்பனுக்கு சனிக்கிழமை நெய் அபிஷேகம் செய்தால் உத்தியோகம் பணி கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வடமாலை மற்றும் வெற்றிலை மாலை செலுத்தினால் கல்யாண காரியம் நிவர்த்தியாகும்.
 
தலபெருமை:
 
  -
 
 தல வரலாறு:
 
  பல முன்னோர்கள் இதே இடத்தில் மாரியம்மன் மற்றும் பொறவியம்மன் வைத்து பூஜை செய்து வந்தனர். கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் லே-அவுட் செய்து மணிகண்டநகர் வந்தது. அதிலிருந்து ஐயப்பன் போட்டோ வைத்து பூஜை மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் வீட்டில் பூஜை செய்தனர். 1986 மாரியம்மனுக்கு முதல் கும்பாபிஷேகம், பிறகு 2002 பரிவார தெய்வங்கள் சன்னிதி அமைத்து மூன்றாம் கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு 22.8.16 அன்று நான்காவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 50 வருடங்களாக சபரிமலை யாத்திரை நடக்கிறது. 1986ம் ஆண்டு கோயில் கட்டப்பட்டது.  

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சங்கனூர், கோவை.

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்


மூலவர் : ஐயப்பன்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : -
  ஊர் : சங்கனூர்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும், மலையாள மாதத்தின் முதல் நாளும் சிறப்புக்குரிய நாளாகும். அன்று ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெறும். ஐயப்பனின் பிறந்த தினமான பங்குனி உத்திரமும், பிரதிஷ்டா தினமான ஆனிமாத உத்திரமும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மண்டல பூஜையிலும் விளக்கு பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்று ஐயப்பனின் அருளுக்கு பாத்திரமாவது சிறப்பாகும். மகரஜோதியன்று சபரிமலையில் நடப்பதைப் போன்றே திருவாபரணம் ஊர்வலம், அருகிலுள்ள அம்மன் கோயிலில் இருந்து பவனிவருவது கண்களை விட்டகலாத அருட்காட்சி.
 
தல சிறப்பு:
 
  கும்பாபிஷேகத்தின் போது மூன்று விளக்கு மூன்று நாட்கள் எரிந்துகொண்டிருந்தது சிறப்பு.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சங்கனூர், கோவை.
 
போன்:
 
  +91 422 2333906
 
பொது தகவல்:
 
  கோயிலில் ஐயப்பன் கிழக்கு நோக்கி யோக நிஷ்டையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே சிவன் சன்னதியும், குருவாயூரப்பன் சன்னதியும் உள்ளன. ஐயப்பன் ஹரிஹர மைந்தன் அல்லவா! அவர் பார்வையில் இருவரும் அருள்பாலிப்பது சிறப்பாகும். கன்னிமூலையில் கணபதி, வடமேற்கு மூலையில் முருகன் மற்றும் பகவதி சன்னதிகள் உள்ளன. கணபதி சன்னதி அருகே நாகர் மற்றும் நாகதேவி சன்னதிகள் உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவகிரகங்கள் அமைந்துள்ளன.
 


பிரார்த்தனை
 
  குருவாயூரப்பன் சன்னதியில் வித்யா கோபாலம் என்ற சிறப்பு பூஜை அடிக்கடி நடத்தப்படுகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களாம். சிவன் சன்னதியில் நடைபெறும் மிருத்யுஞ்சய புஷ்பாஞ்சலி மிகவும் சக்தி வாய்ந்த ஆராதனையாகும். ஆரோக்கியத்தில் குறைபாடு உள்ளவர்கள் பலர் இந்த பூஜையில் கலந்துகொண்டு நற்பலன் பெறுகிறார்களாம். பகவதி சன்னதியில் நடைபெறும் மாங்கல்ய சுக்தம் என்ற ஆராதனையில் பங்கு பெறுவதன் மூலம் மாங்கல்ய பலமும் குடும்ப ஒற்றுமையும் ஓங்குவதாக நம்பிக்கை. தொழில் அபிவிருத்தி அடைய, கண்திருஷ்டி நீங்க நீராஞ்சனம் பூஜையை பக்தர்கள் செய்கின்றனர். புஷ்பாஞ்சலியும் நிறமாலாவும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய ஆராதனைகள்.
 
நேர்த்திக்கடன்:
 
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  ஐயப்பன் கோயிலின் அமைப்பு சபரிமலையை போன்றே உள்ளது. அங்குள்ள பூஜை முறைகளே இங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன. கும்பாபிஷேகத்தின் ஓர் அங்கமாக, கருவறையில் ஐயப்பன் முன்பு மூன்று உருளிகளில் நெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் நிறைத்து அதில் பெரிய திரி இட்டு தீபம் ஏற்றுவர். முதல் தீபம் ஐயப்பனுக்கும், இரண்டாம் தீபம் பூஜை செய்த தந்திரிக்கும், மூன்றாவது தீபம் கோயிலைச் சார்ந்தவர்களுக்கும் உரியன. பின் பச்சை தென்னை ஓலை தடுப்பு மூலம் நடையை அடைத்து, அதன் மீது துணி திரையிட்டு மறைத்து விடுவர். மூன்று நாட்கள் பூஜை, தீபாராதனை எல்லாம் திரைக்கு முன்தான் நடைபெறும். மூன்று நாட்கள் கழித்து திரையை விலக்கும் போது மூன்று தீபங்களும் அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும். கும்பாபிஷேக வைபவத்தில் அனைவருடைய பணியும் செவ்வனே எந்தக் குற்றம் குறையுமின்றி செய்திருந்தால்தான் விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பது ஐதிகம். மூன்றாம் நாள், பூஜைகள் முடிந்து நடை திறக்கப்போகும் தருணம். சன்னதி எதிரே ஒவ்வொருவர் மனத்திலும் முகத்திலும் ஒருவித அச்சத்துடனும் கலக்கத்துடனும் காத்திருக்கின்றனர். நடைதிறக்கப்பட்டது. என்ன அற்புதம்! மூன்று தீபங்களும் எந்தத் தூண்டுகோலும் இல்லாத நிலையில் மூன்று நாளும் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அனைத்து பணிகளும் சரியான பாதையில் நிறைவேறியதை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்தது. அத்தருணத்தில் எழுந்த விண்ணை முட்டும் ஐயப்ப கோஷம் அனைவரின் மனமகிழ்ச்சியையும் பிரதிபலித்தது.
 
 தல வரலாறு:
 
  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வதித்த ஐயப்ப பக்தர்கள் சிலர் கார்த்திகை மாதம் விரதம் இருந்து சபரிமலை கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பு பக்தர்களிடம் நிதி திரட்டி, ஒவ்வொரு வருடமும் விளக்கு பூஜையை விமர்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சித்தாபுதூர், கோயம்புத்தூர்.

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்


மூலவர் : மணிகண்டன்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : -
  ஊர் : சித்தாபுதூர்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  பிரதோஷம் ஏகாதசி, கிருத்திகை, சிவராத்திரி
 
தல சிறப்பு:
 
  ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தருகிறார் ஐயப்ப சுவாமி. எனவே, இந்த தலத்திற்கு வந்து ஐயப்பனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களோடு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு, மாதம் ஒரு முறை ஸ்ரீசக்கர பூஜை விமரிசையாக நடைபெறுகிறது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சித்தாபுதூர், கோயம்புத்தூர்.
 
 
பொது தகவல்:
 
  கேரள முறைப்படி ஐயப்பன், விநாயகர், பகவதி, சிவன், குருவாயூரப்பன், முருகன் மற்றும் நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
 


பிரார்த்தனை
 
  குழந்தை வரம் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனை வழிபாடு செய்கின்றனர்.
 
நேர்த்திக்கடன்:
 
  ஐயப்பனுக்கு நீராஞ்சன தீபம் ஏற்றியும், நெய் விளக்கு ஏற்றியும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  தூய்மையுடனும், பொலிவுடனும் அமைந்துள்ளது ஆலயம், நைவேத்தியப் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு மடப்பள்ளி, நடைப்பந்தல், சுத்தமான தேக்கு மரத்தாலான சுற்றம்பலம், நமஸ்கார மண்டபம் ஆகியவை கேரள தச்சு வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
ஐயப்ப சுவாமியின் சுற்றம்பலத்தில் சுற்று விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. மாலை வேளையில், பிரகாசமாக ஒளிவீசும் விளக்குகளைக் காணக் கண்கோடி வேண்டும். தங்க கொடிமரம், தினமும் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் (கார்த்திகை துவங்கி விரத காலங்களில் தினமும் சுமார் 2, 500 பேருக்கு அன்னதானம் நடைபெறுமாம்) சுதந்திரத் திருநாளில் சமபந்தி போஜனம் என அமர்க்களப்படுகிறது ஆலயம். சுவாமி குடிகொண்டிருக்கும் கருவறையில் மேற்கூறையை தங்கத்தில் (சுமார் 25 கிலோ) வேய்ந்திருக்கிறது ஆலய நிர்வாகம். பிரதோஷம் ஏகாதசி, கிருத்திகை, சிவராத்திரி, போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விஜயதசமி நன்னாளில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் எனும் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. மணக்க மணக்க சந்தனம், திவ்வியமான தீர்த்தம், சுவாமிக்கு அணிவித்த மலர்கள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஐயப்பனை மனதார தரிசித்து, பிரசாதங்களை பெற்று சென்றால், நம் வாழ்க்கையையும் மணக்க செய்வான் மணிகண்டன்.
 
 தல வரலாறு:
 
  சுமார் 60 வருடங்களுக்கு முன்பு, பக்தர்கள் சிலர் ஐயப்ப சுவாமியின் சிறிய படமொன்றை வைத்து பூஜித்து வந்தனர். 68ம் வருடம் ஐயப்பன், விநாயகர், பகவதியம்மன், முருகப்பெருமான், சிவபெருமான் ஆகியோருக்கு விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபடத் துவங்கினர்.  69ம் வருடம், பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து பெரிய நீலகண்டன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கேரள பாரம்பரிய முறையில் இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் 19 வருடங்களாக மேல்சாந்தியாக இருந்த எழிக்கோடு சசிநம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் செய்தி.
 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தருகிறார் ஐயப்ப சுவாமி. எனவே, இந்த தலத்திற்கு வந்து ஐயப்பனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களோடு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு, மாதம் ஒரு முறை ஸ்ரீசக்கர பூஜை விமரிசையாக நடைபெறுகிறது. 
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer