அருள்மிகு ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை திருக்கோயில்
மூலவர் : ஐயப்பன்
உற்சவர் : ஐயப்பன்
அம்மன்/தாயார் : மஞ்ச மாதா
தல விருட்சம் : வில்வமரம்/ அரசமரம்- வேப்பமரம்
தீர்த்தம் : கோட்டை கேணி
ஆகமம்/பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் ஆகம முறைப்படி
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : திண்டுக்கல்
ஊர் : திண்டுக்கல்
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
கார்த்திகை முதல் தேதி கொடியேற்றம்- டிச- 26- மண்டலபூஜை, டிச 27 ரத ஊர்வலம், சபரிமலைக்கு மண்டல, நடைதிறப்பு, மகரயாத்திரை, கார்த்திகை, மார்கழி முழுவதும் நித்ய பூஜை, தினமும் அன்னதானம், சனிதோறும் இரவு அன்னதானம்.
தல சிறப்பு:
தற்போது சபரிமலையில் உள்ள ஐயப்ப விக்ரகம், தமிழ்நாடு முழுவதும் பி.டி. ராஜன் தலைமையில் சுற்றி வந்தபோது, திண்டுக்கல் இப்பிரார்த்தனை மண்டபத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது சிறப்பு அம்சமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை மண்டபம், 3ஏ, மலையடிவாரம், ஆர்.வி. நகர், திண்டுக்கல்-624002
போன்:
+91 451 2427951, 97865- 47058
பொது தகவல்:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் இக்கோயில் உள்ளது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள கோயில் முன் மஞ்சள் மாதா சன்னதியும், கம்பத்தடி விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளது. வலது புறம் நாகராஜன் சன்னதி உள்ளது. பிரார்த்தனை மண்டபத்தின் முன் கோபுரத்தில் புலிவாகனங்கள் உள்ளது. உட்புறம் பிரார்த்தனை மண்டபத்தில் ஐயப்ப சுவாமிகள் தரிசனம் தருகிறார். இங்கு 500க்கும் அதிகமானோர் அமர்ந்து ஐயப்பனை வழிபடலாம். இடதுபுறம் வசந்தமண்டபம், அதன் இடப்புறம் விநாயகர் சன்னதிஉள்ளது. பிரார்த்தனை மண்டப வலப்புறம் கலையரங்கம், அன்னதான கூடம் உள்ளது.டிசம்பர் 26 மண்டலபூஜை அன்று மதியம் 12 மணிக்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்படும்.
பிரார்த்தனை
குடும்ப நலன், குழந்தை பாக்கியம், திருமணதடை நீக்கம், தீராத நோய் விலகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
அன்னதானம் வழங்குவதற்கு தேவையான பொருட்கள் வழங்கல், மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானம் செல்தல்.
தலபெருமை:
இங்குள்ள மண்டபத்தை 1969ல் திரு. ராஜகோபால் நாயுடு (வாணக்காரசாமி) தலைமையிலான குழு அமைத்தது. 1999ல் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் ஆன்மிக பக்தர்கள் நீங்கலாக, பிற மாநில ஐயப்ப பக்தர்களும், வெளிநாடு வாழ் பக்தர்களும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து தங்குகின்றனர். இங்கிருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆன்மிக யாத்திரை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து இலவசமாக தங்கி செல்கின்றனர். கோட்டை மாரியம்மன் திருவிழாவின் போது ஆராதனைகளை பக்தர்கள் இங்கிருந்து தீச்சட்டி எடுத்து சென்று அம்மனை வழிபடுகின்றனர்.
தல வரலாறு:
கடந்த 1967-ல் ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலை ஐயப்பனின் போட்டோ வைத்து வழிபட்டனர். அதன் பின் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, 1969ல் பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுகள் தோறும் விரிவாக்கம் செய்யப்பட்டு, வசந்த மண்டபம், கலையரங்கம் கட்டப்பட்டது. விநாயகர் சிலை வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில பக்தர்கள் இங்கிருந்து சபரிமலை சென்றநிலை அதிகரித்து தற்போது, கார்த்திகை, மார்கழி காலங்களிலும் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் இங்கிருந்து பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். 2013-14ல் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: தற்போது சபரிமலையில் உள்ள ஐயப்ப விக்ரகம், தமிழ்நாடு முழுவதும் பி.டி. ராஜன் தலைமையில் சுற்றி வந்தபோது, திண்டுக்கல் இப்பிரார்த்தனை மண்டபத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

No comments:
Post a Comment