ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதன் காரணம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் , இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த யுத்தத்தில், ஸ்ரீ ராம , இலக்குவர்களைத் தனது தோளில் சுமந்தார். அதன் காரணாமாக , இராம பிரானால் போரில் எளிதில் வெற்றி பெற முடிந்தது. என்றாலும், தோளில் ஸ்ரீ ராம , இலக்குவர்களைத் சுமந்த போது இராவணன் மற்றும் மற்ற அரக்கர்கள் விடுத்த அம்பினால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடலில் ரத்தக் காயங்கள் (பல இடங்களில்) ஏற்பட்டது. அப்பொழுது , ஸ்ரீ ராமர் தனது கரத்தால் ஆஞ்சநேயரின் உடலில் வெண்ணெயை சாற்றினார். அதன் மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடல் ரணங்கள் மறைந்து அவருக்கு குளிர்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு முதன் முதலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்தியது ஸ்ரீ ராமர் தான்.
இந்த இனிய சம்பவத்தை (ராமபிரான் அன்போடு அனுமனுக்கு வெண்ணெய் சாற்றிய சம்பவத்தை) நினைவு படுத்தும் விதமாகவும், மேலும் வெண்ணெய்க் காப்பு சாற்றி ஆஞ்சநேயரை குளிர்விப்பதர்க்காகவும் பக்தர்கள் இன்று வரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அந்த வெண்ணெய்க் காப்பை சாற்றி தொழில் விருத்தி, குடும்பத்தில் மகிழ்ச்சி, சனி தோஷம் விலகல் போன்ற நற்ப்பலன்களை அடைகின்றார்கள். நாமும் இவ்வகையில், நவ வியாகர்ண பண்டிதரான ஸ்ரீ ஆஞ்சநேயரைச் சரண் புகுவோம் ; நல்ல பலன்களைப் பெறுவோம்.
No comments:
Post a Comment