மாங்கல்ய பலம் தரும் ஆடி வெள்ளி விரதம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அதிலும் ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆடி மாதமே அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. எந்த விதத்திலும் பக்திக்கு இடையூறு இருக்க கூடாது என்றே ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள் இடம் பெறுவதில்லை. ஆடி முதல் வெள்ளி மட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என பெண்கள் வீடுகளிலும் கோயில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். அந்த வகையில் இந்த மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. மகாலட்சுமிக்கு உகந்த இந்த விரதத்தை அம்பாள்கோயில்ளில் பூஜைகள் செய்து பெண்கள் அனுஷ்டிப்பார்கள். சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது.ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகிறது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் பக்தி மணம் கமழும் மாதமாக போற்றப்படுகிறது
Thursday, 16 July 2015
மாங்கல்ய பலம் தரும் ஆடி வெள்ளி விரதம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment