சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம்
பாதம்) 100/55 (ஜென்மகுரு என்றாலும் ஜெயம் உங்களுக்கே)
எந்த செயலிலும் முத்திரை பதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
குருபகவான்
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம்
இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை
கொடுத்திருப்பார். பொருளாதார சிரமமும் ஏற்பட்டிருக்கும். ஆனால், தற்போது குரு
பகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து
வைத்துள்ளார். இதுவும் சிறப்பானது இல்லை
என்றாலும், அவர் 12-ம் இடத்தில்
இருந்தது போல கெடுபலனைத் தர
மாட்டார். "ஜென்ம ராமர் வனத்திலே
சீதையை சிறை வைத்ததும் என்று
ஜோதிடத்தில் வாக்கு உண்டு. அதாவது
ராமருக்கு ஜென்மகுருகாலத்தில் வன வாசம் செல்ல
நேரிட்டது என்று கூறுவர். அந்த
நிலை உங்களுக்கு வராது. காரணம் ராமரின்
ஜாதகம் வேறு; உங்களுடைய கிரக
நிலை வேறு. அவர் தெய்வ
அவதாரம். நாம் மனிதர்கள். குரு
1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம்
வரும் என்றும் மந்த நிலை
ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு.
ஆனாலும் கவலைப்பட வேண்டாம். சாதகமற்று இருந்தாலும், குருவின் 5,7,9 ஆகிய மூன்று சுப
பார்வை பலமாக உள்ளது. இதனால்,
வாழ்வில் எதிலும் ஜெயம் அடைவீர்கள்.
குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு.
அவர் அதிக நாட்கள் அவர்
இங்கு இருக்க மாட்டார். டிச.
20ல் இடம் பெயர்ந்து 2-ம்
இடமான கன்னிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம்.
அதன்பின் துன்பம் அனைத்தும் இடம்
தெரியாமல் மறையும்.குடும்பத்தில் நிலவிய
குழப்பம் தீரும். சனிபகவான் ஜூன்
12றற அன்று வக்ரம் அடைந்து
துலாம் ராசிக்கு மாறுகிறார். 3ல்
இருக்கும் இக்கால கட்டத்தில் சனி
பல்வேறு நன்மைகளை செய்வார். செயல்களில் வெற்றியும், பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில்
அபிவிருத்தியும் உண்டாகும். சனிபகவான் செப். 5ல் வக்ர
நிவர்த்தி அடைந்து 4-ம் இடத்தில் இருக்கும்போது சில
பிரச்னைகளை தருவார். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி
சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் பார்வை
சிறப்பான இடத்தில் விழுகிறது. இது சாதகமானதாகும். மேற்கண்ட
கிரக நிலையில் இருந்து விரிவான பலனை
காணலாம்.குடும்பத்தில் மந்த நிலை உருவாகும்.கணவன், மனைவி இடையே
கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால்
சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும்
நிலை உருவாகலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுபவிஷயம் குறித்த
பேச்சில் தாமதம் ஆகலாம். இதுவும்
நன்மைக்கே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பிள்ளைகளுக்கு தக்க அறிவுரை வழங்கி
நல்வழிப்படுத்த முயல்வீர்கள்.
தொழில்,
வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும்.
அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற
தாமதம் உண்டாகும். வரவு, செலவு கணக்கைச்
சரியாக வைத்துக் கொள்ளவும். முதலீட்டை அதிகப்படுத்தாமல் இருப்பதைக் கொண்டு முன்னேறுவது நல்லது.
பங்குதாரர்களின் கருத்தை ஏற்று நடப்பீர்கள்.
எதிரியால் உருவாகும் பிரச்னையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.
பணியாளர்கள்
சுமாரான நிலையில் இருப்பர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும்.
சிலருக்கு பணி, இடமாற்றம் கிடைக்க
வாய்ப்புண்டு. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
கலைஞர்கள்
அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே
புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, புகழை விட பொருளாதார
மேம்பாடு காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு
எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்க
பொறுமை தேவைப்படும்.
மாணவர்களுக்கு
நல்ல கல்வி நிறுவனத்தில் பயிலும்
வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சக மாணவர்களின் உதவி
கிடைக்கும். டிசம்பருக்கு பிறகு முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயத்தில்
திருப்திகரமான வருவாயைக் காணலாம். அதிக செலவு பிடிக்கும்
பயிர்களைத் தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும். சிலர் புதிய சொத்து
வாங்கும்
யோகமுண்டு.
கால்நடை செல்வம் பெருகும். கூலி
வேலை செய்பவர்கள் செல்வாக்கோடு காணப்படுவர்.
பெண்கள்,
தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து
கொள்வர். குடும்ப மேம்பாட்டுக்காக கணவரிடம்
விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின்
நலனில் அக்கறை கொள்வீர்கள்.
பரிகாரம்:
வியாழனன்று குருவுக்கு முல்லை மலரால் அர்ச்சனை
செய்யுங்கள். விநாயகரை வழிபட்டு வாருங்கள். சனியன்று பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு
உதவுங்கள்.
No comments:
Post a Comment