Tuesday, 29 November 2016

எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?

எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பேரியாக வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான்.

ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும் மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும்.

வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் அழகிய வீடு .

அன்பே சிவம்.

3 சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பாதாள அறை கண்டுபிடிப்பு

3 சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பாதாள அறை கண்டுபிடிப்பு

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே மலையாண்டவர் கோவிலில் 3 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த பாதாள அறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.

கோவில் திருப்பணி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே சி.என்.பாளையத்தில் புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் உள்ளது. இங்கு தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் வழக்கம் போல் கோவிலில் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பூமிக்கடியில் பாதாள அறை இருப்பதை திருப்பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் பார்த்தனர்.

இதையடுத்து ஊர் பொதுமக்கள், திருப்பணி குழுவினர் அந்த பாதாள அறை வழியாக உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்கு அடியில் அழகிய தோற்றத்துடன் ஒரு கட்டிடம் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

ஜீவசமாதி

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் மலையாண்டவர் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.

இதுபற்றி அறிந்த இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்களும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், அந்த அறைக்குள் தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் மட்டும் சென்றனர்.

அந்த அறைக்குள் வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் 3 சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் 3 பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலேயே முக்தி அடைந்திருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பார்க்க அனுமதியில்லை

இதுகுறித்து திருப்பணிக்குழு தலைவர் வைத்திலிங்கம் கூறியதாவது:-

புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெருமைகளை கொண்டதாகும். இந்த கோவிலில் தைப்பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் மீது சூரிய கதிர்கள் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர். வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவச்சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது.

இந்த நிலையில் தற்போது இங்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வரலாற்று தடயங்களும், கி.பி.7-ம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டுவரை இறை உணர்வு நிறைந்த வாழ்க்கையை மேற் கொண்டிருந்த 3 சித்தர்கள் பாதாள அறையில் தியான நிலையில் ஜீவ சமாதியான நிகழ்வு பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது பாதாள அறையை அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, மேலும் பல தகவல்கள் சேகரிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்

அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா

மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா: 1

 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:

ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி

மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா

ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா: 2

 ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்

ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்

ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்

பூத்யை பவேன்மம பூஜங்க சயாங்கனாயா 3

 ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.

பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித கெளஸ்துபே யா

ஹாராவலீவஹரி நீலமயி விபாதி

காமப்ரதா பகவதோபி கடாட்ச மாலா

கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: 4

 மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:

தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ

மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹனீய மூர்த்தி

பத்ராணி மேதிசது பார்கவநந்தனாயா: 5

 மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில்

 இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்

மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேன

மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்

மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6

 ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.

விச்வாம ரேந்த்ர பதவீ ப்ரமதான தட்சம்

ஆனந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி

ஈஷன் நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்

இந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா 7

 அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர

திருஷ்ட்யாத்ரி விஷ்டப பதம் ஸ லபம் லபந்தே

திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா 8

 எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.

தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம் புதாராம்

அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷன்ணே

துஷ்கர்ம தர்மமபனீய சிராயதூரம்

நாராயண ப்ரணயனீ நயனாம் புவாஹ: 9

 எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி சாகம்

பரீதி சசி சேகர வல்லபேதி

ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய மேலிஷீ ஸம்ஸ்திதாயை

தஸ்யை நமஸ்த்ரி புவனைக

குரோஸ்தருண்யை! 10

 திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.

ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை

ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை

சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை

புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை 11

 நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.

நமோஸ்து நாலீக நிபானனாயை

நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை

நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை

நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

 பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.

நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை

நமோஸ்து பூ மண்டல நாயிகாயை

நமோஸ்து தேவாதி தயாபராயை

நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13

 முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை

நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை

நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை

நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

 சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.

நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை

நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை

நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை

நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

 சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தனானி

ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாணி

த்வத் வந்தனானி துரிதா ஹரணோத்யதானி

மாமேவ மாதரனிசம் கலயந்து மான்யே 16

 எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி

ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்

ஸந்தனோதி வசனாங்க மானஸை

த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

 தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே

தவல தராம்சுக கந்த மால்ய சோபே

பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே

த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம் 18

 சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாம்னு தாங்கீம

ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீம் அக்ஷே

லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம் 19

 பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை

வணங்கிப் போற்றுகிறேன்.

கமலே கமலாட்ச வல்லபேத்வம்

கருணாபூர தரங்கிதைரபாங்கை

அவலோகய மாமநிஞ் சனானாம்

ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

 எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்

த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்

குணாதிகா குரிதர பாக்ய பாகினோ

பவந்தி தே புவி புத பாவிதாசயா 21

 மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய ‘கனகதாரா ஸ்தோத்திரத்தினால்’, நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.

Monday, 28 November 2016

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்?அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். இனி, 10 பொருத்தம் என்றால் என்ன? மற்றும் அதன் உண்மை விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்...

உங்கள் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி உங்கள் ராசி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையா?

தினப் பொருத்தம்
தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.
   
கணப் பொருத்தம்
குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

   
மகேந்திரப் பொருத்தம்
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
   
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

   
யோனிப் பொருத்தம்
யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.
   
ராசிப் பொருத்தம்
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் இந்த பொருத்தம் முக்கியம்.
   
ராசி அதிபதிப் பொருத்தம்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.
   
வசியப் பொருத்தம்
கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது.
   
ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்
இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
   
வேதைப் பொருத்தம்
திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப - துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.

அகத்தின் இருளை போக்கும் தீப வழிபாடு !


அகத்தின் இருளை போக்கும் தீப வழிபாடு !

தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து வழிபடப்பட்டு வருகின்றது. தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது. தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞான சம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் காணப்படுகின்றன.

அங்காரகன் மகிமை 

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும். இதற்கு சூரிய வழிபாடே காரணமாகும். கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.

கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான்.சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

லட்சுமி அம்சம்

திருக்கார்த்திகை தினத்தன்று, கிலியஞ்சட்டி எனப்படும் களி மண்ணால் செய்யப்படும் விளக்கில் பசு நெய் அல்லது நல்ண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு, அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, தீபத்தில் பசுநெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, "சிவசக்தி' சொரூப மாகிறது.

விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. திருவிளக்கை தீபலட்சுமி என்பர். துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு. தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள், வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும்; ராஜ்ஜியத்தில் ராஜ்யலட்சுமியாகவும்; இல்லங்களில் கிரகலட்சுமியாகவும் இருப்பதாக ஐதீகம். ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம்.

சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை

திருக்கார்த்திகை தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நட்டுவைத்து அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்துக் கட்டுவர். மாலையில், சொக்கப் பனை கொளுத்தப்படும். ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் பொருளாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

கற்பக தருவான பனை

பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.

பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது. பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

பொறி உருண்டை

கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு.

சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சொக்கப்பனை கொளுத்து கின்றனர்

Sunday, 27 November 2016

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் -

சூரியன் (Sun) :


எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார் வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். ஒன்றின் எண் ஆதிக்கம் நன்கு அமைந்திரந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள் மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலமம், பண வேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும்.

மனிதல் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள். புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றம் அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வர்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள்.

தாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம் அடைய ஆசைப்பட மாட்டார்கள். சூரிய புத்திரன் கர்ணன் இவரது ஆதிக்கம் நிறைந்தவர்கள். எதிரியுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்களே தவிரக் குறுக்கு வழியைத் தேட மாட்டார்கள். இதனால்தான் சகுனியின் சதித் திட்டங்களை எல்லாம் கர்ணன் எதிர்த்துக் கொண்டே இருந்தான். தங்களின் இரக்க குணத்ததால் பல பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். ஆனால் நல்ல பெயரும் புகழும் நிச்சயம் அடைவார்கள். ‘‘இவர்தான் எனது நண்பன், இவர்தான் எனது எதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறி விடுவார்கள். மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும் உண்டு.

வாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றுவார்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும், பொறாமையும் இவர்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும் சொத்துக்களையும் தீயென வெறுத்து ஒதுக்கி விடுபவர்கள் இவர்களே. படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலை வாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும் கடைப்பிடிப்பார்கள். இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியை ஒதுக்க மாட்டார்கள். தேவையானால் பெருந்தன்மையுடன் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்க முடியாது. அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள். பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், நேராக வந்து மன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் 

ஆலய அதிசயங்கள்!!

ஆலய அதிசயங்கள்!!

1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.

6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.

13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.

17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.

19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

22. அம்மன் சந்நிதி இல்லாnத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

மறக்காமல் பகிருங்கள் நண்பர்களே, அனைவர்க்கும் தெரிய படுத்துங்கள்...

நீங்கள் 9 எண்ணில் பிறந்தவர்களா?

*நீங்கள் 9 எண்ணில் பிறந்தவர்களா?*

9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த வல்லமை வந்தது என நினைக்கத் தோன்றும்.
இதற்கு ஒரு காரணம் உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய். இதற்கு முழுமையான ஆற்றலை அனலாகத் தருபவர் சூரியன். 9ஆம் எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால் அறிவில் சூரியன் போன்று பிரகாசிப்பர்.
கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணி நேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடு திரும்பும் முன் இவர்கள் வீடு திரும்பிவிடுவர். கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்த மனைவி அமைந்தால், மனைவி   சொல்லே மந்திரம் என்பதற்கு ஒப்ப பெண்டாட்டிதாசர்களாக இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.
அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட இவர்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ண நோயினால் பாதிப்பு வரலாம்.
நீதி, நேர்மை, ஒழுங்கு,  கட்டுப்பாட்டை விரும்பும் இவர்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுவர். இவ்வாறு நடக்கவில்லையானால் குடும்பத்தினாரானாலும் குதறிவிடுவர்.
மிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை. திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட இவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.
அடுத்தவர் மெச்சும்படி வாழும் இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர். அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனை கேட்குமளவிற்குப் பல இடங்களில் பஞ்சாயத்தாராகவும்;, தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.
எந்தப் பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பல நாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் ஒரு பெரும் பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்த ஓட்டத்தில் ஏற்ற இறக்கமுpள்ள இவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும். அசாத்திய மூளைத்திறன் கொண்ட இவர்கள் கோபத்தை விட்டுவிட்டால் ஊரையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

ஒன்பதாம் எண்ணுக்கு உகந்தவை:

நன்மை தரும் முதல் எழுத்து

: C,G,L,S,U,V,W,A,J,Q,Y

நன்மை தரும் தேதி

: 1,3,6,9,10,12,15,18,19,21,24,27,30

நன்மை தரும் கிழமை

: வியாழன், ஞாயிறு, செவ்வாய்

நன்மை தரும் நிறம்

: சிவப்பு, மஞ்சள்

நன்மை தரும் திசை

: தெற்கு, வடகிழக்கு

நன்மை தரும் தொழில்

: நெருப்பு சம்பந்தமானவை, இரும்பு, ஓட்டல்,

விவசாயம், கமிஷன், கடல் கடந்த வியாபாரம்,

பூஜை பொருட்கள், கார் விற்பனை,

ரியல் எஸ்டேட், காவல், ராணுவம், மருத்துவம்

நீங்கள் 8 எண்ணில் பிறந்தவர்களா?

*நீங்கள் 8 எண்ணில் பிறந்தவர்களா?*

8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் சமுதாயம் எட்டு என்றாலே ஒதுங்குகிறது என்று ஆதங்கப்படும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களே!

இந்த எண்ணில் பிறந்த எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த ஈ.வெ.ராமசாமி எட்டாம் எண்காரர்தான். தொழிலதிபர் டாடாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவே பல பிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.
எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால் நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என நினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழைய முடியாததால், பச்சையம் பெற முடியாத இலை போலவும், தாமரை இலைத் தண்ணீர் போலவும், வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணினர் நியூமராலஜியில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். சில அறிவுஜீவிகள் பாண்டித்யமே பெற்று விடுவார்கள். அது மட்டுமல்ல. இதன்மூலம் தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவர்.  எனவே, உங்களுக்கு கவலையே வேண்டாம்.
உடல்நிலை குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது.  அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, இவர்கள் எளிதில் எட்டிவிடுவர். எந்த இலக்கையும், மனோதிடத்துடன் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.

8ஆம் எண்காரர்கள் கண்டவர்களிடமும் ஆலோசனை கேட்காதீர்கள். சுயமாக சிந்தித்து முன்னேறும் வலிமை உங்களிடம் உள்ளது.

எட்டாம் எண்காரர்களுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்து

: E,H,N,X

நன்மை தரும் தேதி

: 5,14,23

நன்மை தரும் கிழமை

: புதன், சனி

நன்மை தரும் நிறம்

: சாம்பல், பச்சை

நன்மை தரும் திசை

: வடக்கு

நன்மை தரும் தொழில்

: எண்ணெய், இரும்பு, கெமிக்கல், கிரானைட், வக்கீல், கார்

எட்டில் பிறந்த பிரபலங்கள்

ஈ.வெ.ராமசாமி

: 17.9.1879

எம்.ஜி.ஆர்.

: 17.1.1917

எலிசபெத் டெய்லர்

: 17.1.1901

குருநானக்

: 8.11.1470

ஜார்ஜ் பெர்னாட்ஷா

: 26.7.1856

நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா?*

*நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா?*

7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் இறைபக்தியும் சர்வ ஞானமும் கல்வியும் நளினமும் நாவில் நல்வார்த்தைகளும் நற்செயலும் இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் குணமும் கொண்டவர்கள் ஏழாம் எண்காரர்கள். யாரேனும் அறிவுரை சொன்னால் இக்காலத்தில் கேட்பதற்கு ஒருவருமில்லை. ஆனால், இவ்வெண்காரரிடம் ஆலோசனை கேட்டுப் பிரபலமாகலாம் என்பது இவ்வெண்காரர்களின் சிறப்பம்சம்.

வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்ட இவர்கள், காதல் வலையில் மிக வேகமாகச் சிக்கி, 90 சதவீதம் தோற்றும் போவார்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக்கொள்வர். இவர்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும்.
புகையிரத நிலையங்களுக்கு அருகில் வாழ்வோருக்கு, ஏதாவது ஒரு புகையிரதம் தாமதம் என்றாலும் அது கவிழ்ந்திருக்குமோ, ஏதாவது பிரச்சினையோ என்று குழம்புவார்கள். அதுபோலத் தம்மைக் குழப்பிக்கொண்டால்தான் இவர்களுக்கு நிம்மதியே. இவர்களுக்கு வரும் துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், இரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுவர்.
பல நேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச் சாதாரணமாகப் பெற்று விடுவர். அதேநேரம், வெற்றி தேடிவரும் என்ற அதீத நம்பிக்கையில், கோடிகளைக் கைவிட்ட லட்சாதிபதிகளும் இவ்வெண்காரர்களுக்குள் அடக்கம். மதத்தின் பேரில் அதிகப் பற்றிருக்கும். பிறருக்குத் துன்பம் தரமாட்டார்கள். மனம் ஞான நிலையைத் தேடி அலையும்.
நல்ல நேரத்தில் பிறந்த இந்த எண்ணினர், தமது 25ஆம் வயதிலிருந்து அதிர்ஷ்டத்தினால் முன்னேறுவர். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பர். போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விடயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வர்.
அமைதியும் ஈகைக்குணமும் மனோபலமும் நாட்டுப்பற்றும் உடைய இவர்கள், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். புலனடக்கம் உடையவர்கள். அடிக்கடி தூரதேசப் பயணம் மேற்கொள்வர். பொருளாதார ரீதியாக அதிகக் கஷ்டப்படுவதில்லை. அடக்கமும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட தர்மத்தின் தலைவனான இவர்களுக்குப் பெரியோர் ஆசியும் கடவுளின் கருணையும் உண்டு.

ஏழாம் எண்ணுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்துக்கள்

: O,Z,R,K,B,A,I,J,Q,U,V,W

நன்மை தரும் திகதிகள்

: 1, 2, 6, 7, 10, 11, 15, 16, 19, 20, 24, 25, 28, 29

நன்மை தரும் கிழமைகள்

: ஞாயிறு, திங்கள், வெள்ளி

நன்மை தரும் நிறங்கள்

: வெள்ளை, இளஞ்சிவப்பு

நன்மை தரும் திசைகள்

: கிழக்கு, மேற்கு

நன்மை தரும் தொழில்கள்

: இலத்திரனியல், பூஜைப் பொருட்கள், ஏற்றுமதி,

சினிமா, அரசியல்,  ஆன்மிகம், சேவை நிறுவனம்,

 கட்டுமானம், சங்கீதம், அச்சகம், எழுத்துத்துறை,நீதித்துறை, மருத்துவம்

7ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:

இயேசுநாதர்

: டிசம்பர் 25

கிருபானந்த வாரியார்

: 25.08.1906

எம்.எஸ்.சுப்புலட்சுமி

: 16.09.1916

வாஜ்பாய்

: 25.12.1924

சார்லி சாப்ளின்

: 16.04.1889

நீங்கள் 6 எண்ணில் பிறந்தவர்களா?

*நீங்கள் 6 எண்ணில் பிறந்தவர்களா?*

6,15,24 தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் இவர்களின் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுவர்.

எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவர். நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பவர்கள் இவர்கள்தான். இயற்கையின் மேல் மிகுந்த நாட்டமுடைய இவர்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பர்.
எதற்கும் அஞ்சாத இவர்கள் கண்ணாடியில் அடிக்கடி தன் முகத்தைப் பார்த்து, இதைவிட அழகாக இருந்திருக்கலாமோ என்று வருத்தப்படுவர். அடிக்கடி தலைவாரிக் கொள்வர். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் சென்றால் கையோடு அழகுச் சாதனங்களை எடுத்துச் சென்று காரிலிருந்து இறங்குமுன் ஒப்பனை போட்டுக்கொண்டு தன்னை அழகுள்ளவராகக் காட்டிக்கொள்வர். காதல், களியாட்டங்களில் அதிக ஈடுபாடுள்ள இவர்கள் பெண்களால் வாழ்வில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பர். மிகுந்த யோசனைக்குப் பின்பே காரியங்களில் இறங்குவர்.
இவர்கள் பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பர். இதுபோல் வாழ்வை நன்கு அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். மகான்கள் வாழ்வே மாயம் என்பர். 6ஆம் எண்ணினரோ வாழ்வே யோகம் என்பர். இவர்கள் நினைப்பதுதான் சரி என்று சொல்வர். அதுதான் நடந்தாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர். இதனால் இவர்கள் தங்களுக்கு அறிவுரை சொல்ல யாராவது வந்தால் சிரித்துக் கொண்டே கேட்டுக்கொள்வர். ஆனால் இவர்கள் என்ன நினைத்தார்களோ, அதை நடத்திவிட்டு, புத்திமதி சொல்லியவர்களையும் சமாளித்து விடுவர்.
பணப்புழக்கம், செல்வாக்கு, வசீகரமான தோற்றம், காவியங்களில் விருப்பம், சினிமாத் துறையில் நுழைந்தால் அதிலும் சிறப்பு என இவர்களிடம் அனுகூலங்கள் அதிகம். ஆபரணங்களை அணிவதிலும் புதுப்புது ஆடைகளை உடுத்துவதிலும் விருப்பம் கொண்டவர்கள். புகழுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்யும் திறமை உண்டு. பிறர் செய்த உதவிகளை மனதில் வைத்து அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் குறைவே. இதனால், அவர்களது சாபத்துக்கு உட்பட நேரிடலாம். உலகம் அமைதியுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் பிறர் துன்பம் தாங்க மாட்டார்கள். இவர்கள் அடிக்கடி நீர்;, சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு உட்படலாம். எனவே கவனம் தேவை. திருமணத்தை தாங்களாகவே பெற்றோர் சம்மதமில்லாமல் நடத்திக்கொள்ளும் இவர்கள் சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் வாழ்வு முழுக்க பல மனக்கசப்புகளைச் சந்தித்தாக வேண்டும. எந்த நல்ல காரியமும் செய்ய நினைக்கும்போது 3ஆம் எண் சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

6ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்

மகான் அரவிந்தர்

: 15.08.1872

அண்ணாத்துரை

: 15.09.1909

காமராஜர்

: 15.07.1903

ஜெயலலிதா

: 24.02.1948

ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?

*ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?*

5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட இவர்கள் கலை நயமிக்கவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை `சோம்பேறி\' என்று வசைபாடவர். இவர்களின் மூளை சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றது போல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர்.
பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி... பக்கத்திலிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். முடியாத சில காரியங்களைக் கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து கெயர் பெற வேண்டும் என விரும்புவர். இவர்களின் இந்த போக்கினால் தான் உலகில் பல கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள் வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூட அப்படித்தான்.
ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடை குணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொடுத்து விட்டால், எதையும் செய்ய தயாராக இருப்பர். மன தைரியமும், வேகமும் நிறைந்த இவர்கள், தோல்வி ஏற்படுவதை வெகு சீக்கிரம் மறந்து அடுத்த காரியத்திற்கு தயாராகி விடுவர்.
ஐம்பெரும் பூதங்கள் இல்லையேல் உலகு இல்லை. பூமியில் இந்த 5ஆம் எண்காரர்கள் இல்லையேல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை. துடிப்புடன் செயல்படும் இவர்களுக்கு ஊர் முழுவதும் நண்பர்கள் இருப்பர். எந்தக் கருத்தையும் உடனே வெளியிடும் இவர்கள் தன்னைப் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள்.
ஐந்தாம எண் குழந்தைகளை சிறு பிராயத்திலிருந்தே நல்ல குணமுள்ள நண்பர்களுடன் பழகச் செய்ய வேண்டும். எதையும் வெகு சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் இவர்களுக்கு. நல்லதை கிரகிக்க நல்ல நண்பர்கள் வேண்டுமல்லவா?பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர், எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் இவ்வெண்காரர்கள் தகுந்த கல்வித் தரத்துடன் வேலையில் அமர்த்தி விட்டால் அதிபர்களின் பளுவை பாதியாக குறைத்து விடுவர்.
சகல விஷயங்களிலும் அத்துப்படியாக இருக்கும் இவ்வெண்காரர்களை எளிதில் சரணடையச் செய்வது புகழ்ச்சி மட்டுமே, பகல் தூக்கம் பிடிக்காத இவர்கள் `கலைத்துறையில்\' ஜாம்பவான்களாக இருப்பர்.

5 ஆம் எண்ணில் பிறந்தவ பிரபலங்கள்
வள்ளலார் - 05.10.1823ஷ்ரீ தியாகராஜ சுவாமிகள் (கீர்த்தனை கர்த்தா) - 05.05.1759வ.உ. சிதம்பரம் பிள்ளை - 05.09.1872ஜவகர்லால் நேரு - 14.11. 1889டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) - 14.11.1889அம்பேத்கர் - 14.04.1891சுபாஷ் சந்திரபோஸ் - 23.01.1897திலகர் - 23.07.1856வில்லியம் ஷேக்ஸ்யிர் - 24.04.1564

நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

*நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?*

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை.
மனதில் தோன்றியதை அப்படியே வெளியே சொல்லிவிடுவர். இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். தனது கருத்துக்களைத் தைரியமாக வெளியில் சொல்வார்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிட சாஸ்திரம், மத சம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள்.
சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக இவர்களைப் பணியமர்த்தினால் விருப்பத்துடன் அப்பணியை ஏற்று நிறுவன வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். இவர்களின் மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவது போல் இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர்.
சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். இவரின் புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட பலர் இவர்களுக்கு நண்பர்களாகி விடுவர்.
இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்துகொள்வது இவர்கள் மிக முக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும் வேகத் தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. துன்பங்களைக் கடந்து எப்படியும் வென்று விடுவார்கள்.
ஒரு இடத்தில் ஒரு மணிநேரம் இவர்களைப் பேசாமல் இருக்க வைப்பவர்களுக்கு; ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகத் தைரியமாக அறிவிக்கலாம். இவர்களது பேச்சை நிறுத்துவது அவ்வளவு கடினம். எழுத்தாற்றல் மிக்க இவர்கள் பிறர் எழுத்துக்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சீர்;திருத்தவாதியான இவர்கள் அரசாங்கத்திற்கே சில சமயங்களில் சிறப்பான யோசனைகள் சொல்லி அசத்திவிடுவார்கள்.
பேசும்போது குரலை ஏற்றி, இறக்கி கையை ஆட்டிக்கொண்டே பேசுவதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொள்வர். மற்றவர்களி;;ன விமர்சனத்தைக் கொஞ்சங்கூடக் கண்டுகொள்ளாத இவர்கள், தன் கருத்துக்களை சபையில் ஏற்றும் வரை சளைக்க மாட்டார்கள். உலகம் உருண்டைதான் என்று சொன்னால் இல்லை... அது சதுர வடிவம் உடையது என விதண்டாவாதமும் பேசுவார்கள். தான் சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்ற முயற்சிப்பார்கள். இந்த விதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன் கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. இவர்கள் திட்டம்போட்டு வைத்திருக்கும் சில அருமையான விஷயங்களை, வெளியில் முந்திரிக்கொட்டை மாதிரி சொல்லி விடுவார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு புத்திசாலி, அதை செயலுக்குக் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்.

4ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:

ராமானுஜர்

: 04.04.1917

கணிதமேதை ராமானுஜம்

: 22.12.1887

திருப்பூர் குமரன்

: 04.10.1904

சர்தார் வல்லபாய் படேல்

: 31.10.1875

தாதாபாய் நௌரோஜி

: 04.09.1825

ராஜாராம் மோகன்ராய்

: 22.05.1772

நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?

*நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?*

3,12,21,30 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 3 எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாத இவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர்.  இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.
சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கி நண் பர்களாகி விடுவர்.  சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன் சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம் எண் பேர்வழிகள் போதிக்கும் கலை தெரியாமலேயே பலரைக் கவர்ந்திழுக்கும் பலே கில்லாடிகளாக இருப்பர்.
மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பல உணவு வகைகள் அலர்ஜி என்ற சமாச்சாரத்தை இழுத் துக்கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். எவர் பணமாவது இவர்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். மத நம்பிக்கை அதிகம். தன் சமாச்சாரங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துச் செயல்படும் இவர்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவென்றே பெரும் கூட்டம் உண்டு. கௌரவத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு மஞ்சள் ஆடை அதிகம் பிடிக்கும். மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்க விரும்புவர். பிறர் துன்பங்களை தன்னுடையது போல நினைத்துக் கலங்குவர்.
காமனின் கண்பார்வை போல பார்வையில் வசீகரம் உண்டு. இருப்பினும் முழு பிரம்மச்சாரிபோல் ஆச்சார புருஷர்களாக இருப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம் அலைபாயும். இவர்களுக்கு இறையருள் அதிகமிருப்பதால் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழி தரும்.

3ஆம் எண்ணுக்கு உகந்தவை:

நன்மை தரும் முதல் எழுத்துக்கள்

: C,G,L,S,A,I,J,Q,Y

நன்மை தரும் தேதிகள்

: 1,3,9,10,12,18,19,21,27,28,30

நன்மை தரும் கிழமை

: வியாழன், ஞாயிறு, செவ்வாய்

நன்மை தரும் நிறம்

: மஞ்சள், இளம் சிவப்பு

நன்மை தரும் ஹோரை

: குரு

நன்மை தரும் திசை

: கிழக்கு

நன்மை தரும் தொழில்

: கல்வி, தரகு, ஆலோசனை, மருத்துவம்,

அரசியல், ராணுவம், வங்கி.

3ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:

ஜெகதீஷ் சந்திரபோஸ்

: 30.11.1863

சர்.சி.வி.ராமன்

: 12.01.1879

சுவாமி விவேகானந்தர்

: 12.1.1863

அலெக்சாண்டர் கிரகாம்பெல்

: 3.3.1847

வீரபாண்டிய கட்டபொம்மன்

: 3.1.1760

பகவான் ரமணர்

: 30.12.1879

ஞானி சுத்தானந்தபாரதி

: 12.5.1897

ஹென்றி போர்டு (போர்டு கார் அதிபர்)

: 12.12.1950

திப்பு சுல்தான்

: 21.11.1750

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

: 30.10.1908

நீங்கள் 2 எண்ணில் பிறந்தவரா?

*நீங்கள் 2 எண்ணில் பிறந்தவரா?*

2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2 இன் அதிபதி சந்திரன்.

இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.
உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.
இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.
பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.
அவ்வப்போது அழையா விருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.
இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்.

2 ஆம் எண்ணுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்துக்கள்

: R,K,B,O,Z,A,I,J,Q,Y,U,V,W

நன்மை தரும் எண்கள்

: 2,7,1,6

நன்மை தரும் தேதி

: 27,11,16,20,25,29

நன்மை தரும் நிறம்

: வெள்ளை, சந்தனம்

நன்மை தரும் ரத்தினம்

: முத்து

நன்மை தரும் ஹோரை

: சந்திரன், குரு, சுக்கிரன்

நன்மை தரும் திசை

: வடகிழக்கு

நன்மை தரும் தொழில்

: நீர், விவசாயம், வானியல், எழுதுகருவி, பண்ணை

2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்

மகாத்மா காந்தி

: 02.10.1969

தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா

: 02.10.1908

தாமஸ் ஆல்வா எடிசன்

: 11.02.1847

டைரக்டர் சத்யஜித்ரே

: 02.05.1921

ராஜிவ் காந்தி

: 20.08.1994

லால்பகதூர் சாஸ்திரி

: 02.10.1904

மகாகவி பாரதியார்

: 11.09.1882

காஞ்சிப் பெரியவர்

: 20.05.1894

பாடகி கே.பி சுந்தரம்பாள்

: 11.10.1908

திரு_அண்ணாமலை_திருக்கார்த்திகை_திருவிழா

#திரு_அண்ணாமலை_திருக்கார்த்திகை_திருவிழா

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!..
கண்ணார் அமுதக் கடலே போற்றி!

-
"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே."

-
கார்த்திகை நாளின் மாலைப் பொழுதில் தம் இல்லத்திலும் திருக்கோயில்களிலும் அகல் விளக்குகளை அழகுற ஏற்றி வைத்து ஆராதனை செய்வதைப் பெரும் பேறெனக் கொள்வர்.

அணிதிகழ் அகல் விளக்கொளியில் அகமும் புறமும் மகிழ்வுறும் அற்புதத் திருநாள்

இந்த நன்னாள், எதிர்வரும் 05-12-2014. வெள்ளிக்கிழமை கூடி வருகின்றது.

திருக்கார்த்திகைத் திருநாள் பூவுலகில் அக்னி மலையாகத் திகழும் அண்ணாமலைக்கே உரித்தானது.

திருக்கார்த்திகை நாளினை பத்தாம் திருவிழாவாகக் கொண்டு அருணாசலம் எனப்படும் அண்ணாமலையில் இன்று கோலாகலமாகக் கொடியேற்றம் நிகழ்கின்றது.

எண்ணற்ற பெருமைகளுடன் திகழும் திருத்தலம் - திரு அண்ணாமலை.

ஈசன் மலை வடிவாகத் திகழ்கின்றனன் என்பர் பெரியோர்.

அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப்பெருமானும் பாடிப் பரவிய திருத்தலம்.

மாணிக்கவாசகப் பெருமான் போற்றித் துதித்த திருத்தலம்.

எத்தனை எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்த திருத்தலம்.

இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் திருத்தலம்.

வாழ்வில் தடம் மாறிச் சென்றதால் தடுமாறித் தவித்த அருணகிரி தமிழ்க் குமரனின் திருவருளால் மீண்டும் தலை நிமிர்ந்து துலங்கி நின்ற திருத்தலம்.

அருணகிரிநாதர் அமுதத் தமிழில் திருப்புகழ் மொழிந்த திருத்தலம்.

இன்னும் அறியப்படாத எண்ணற்ற ரகசியங்களுடன்  - 2668 அடி உயரத்துடன் திகழும் அண்ணாமலையைச் சுற்றிலும் பல்வேறு தீர்த்தங்களும் சந்நிதிகளும் விளங்குகின்றன.

அவற்றுள் அஷ்ட லிங்க சந்நிதிகளும் அடி அண்ணாமலை திருக்கோயிலும் வெகு சிறப்பானவை.

அண்ணாமலையின் கிரிவலப் பாதை 14 கி.மீ. சுற்றளவினை உடையது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதை லட்சக் கணக்கான பக்தர் பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

திருஅண்ணாமலையை வலம் வருவது பெரும் புண்ணியம் எனப்படுகின்றது.

இத்திருத்தலத்தில் - திருக்கார்த்திகைத் திருவிழாவின் தொடக்கமாக -

23.11.2014 அன்று அண்ணாமலையின் காவல் நாயகி ஆகிய ஸ்ரீதுர்காம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன. அன்றிரவு - ஸ்ரீ துர்காம்பிகை காமதேனு வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள்.

24.11.2014 அன்று திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் உற்சவ வழிபாடுகள் நிகழ்ந்தன. அன்றிரவு ஸ்ரீபிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள்.

அதன் பின் 25.11.2014 அன்று விநாயகப்பெருமானுக்கு உற்சவ வழிபாடு நடத்தப் பெற்று ஸ்வாமி மூஷிக வாகனத்தில் திருவீதி எழுந்தருளினார்.

இன்று (26.11.2014) கார்த்திகைத் திருவிழாவின் முதல் நாளாக காலை 6.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் திருக் கொடியேற்றம்.

அண்ணாமலையாரின் திருக்கோயிலின் 72 அடி உயர கொடிமரத்தில் ரிஷபக் கொடியேற்றப்பட்டது.

#முதல்_திருநாள் - 26.11.14 - புதன் கிழமை
காலை - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் - வெள்ளி விமானங்கள்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்.
ஸ்வாமி - வெள்ளி அதிகார நந்தி வாகனம். அம்பாள் - ஹம்ஸ வாகனம்.

#இரண்டாம்_திருநாள் - 27.11.14 - வியாழக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - சூர்ய பிரபை.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி இந்திர விமானங்கள்.

#மூன்றாம்_திருநாள் - 28.11.14 - வெள்ளிக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - பூத வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி அன்ன வாகனம்.

#நான்காம்_திருநாள் - 29.11.14 - சனிக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - நாக வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம்.

#ஐந்தாம்_திருநாள் - 30.11.14 - ஞாயிற்றுக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி ரிஷப வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரிஷப வாகனம்.

#ஆறாம்_திருநாள் - 01.12.14 - திங்கட்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி யானை வாகனம்.
அறுபத்து மூவர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரதம், வெள்ளி விமானம்.

#ஏழாம்_திருநாள் - 02.12.14 - செவ்வாய்க்கிழமை
காலை ஆறு மணிக்கு மேல் ஏழு மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல்.
பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். மகா ரதம். திருத்தேரோட்டம்.

#எட்டாம்_திருநாள் - 03.12.14 - புதன் கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி விமானம்.
மாலை நான்கு மணிக்கு பிக்ஷாடனர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். குதிரை வாகனம்.

#ஒன்பதாம்_திருநாள் - 04.12.14 - வியாழக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி விமானம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்.
கையிலாய திருக்கோலம். காமதேனு வாகனம்.

#பத்தாம்_திருநாள் - 05.12.14 - வெள்ளிக்கிழமை
அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்.
மாலை அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி திருநடனம்.
மாலை ஆறு மணிக்கு திருக்கார்த்திகை - ஜோதி தரிசனம்.
இரவு - தங்க ரிஷப வாகனம்.

06.12.14 - சனிக்கிழமை
அதிகாலை சந்திரசேகரர் கிரிவலம் எழுந்தருளல்
இரவு - தெப்ப உற்சவம்.

07.12.14 - ஞாயிற்றுக்கிழமை
இரவு - அம்பாள் தெப்ப உற்சவம்.

08.12.14 - திங்கட்கிழமை
இரவு - சுப்ரமணியர் தெப்ப உற்சவம்.

09.12.14 - செவ்வாய்க்கிழமை
இரவு - விநாயகர் - வெள்ளி மூஷிகம். சண்டிகேஸ்வரர் -  வெள்ளி ரிஷபம்.

தீபத் திருவிழாவினை முன்னிட்டு - நகர் முழுதும் விழாக் கோலம் கொண்டுள்ளது. அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம் ஒளிமயமாக விளங்குகின்றது.

ஒன்பது திருக்கோபுரங்களும் தங்கக் கொடிமரமும் சந்நிதிகளும் தல விருட்சமான மகிழ மரமும் பல வண்ண மின் விளக்குகளால் ஒளிர்கின்றன.

தேடி நின்ற நான்முகனும் திருமாலும் அறியும் வண்ணம்  - லிங்கோத்பவராக அடிமுடி அறிய இயலாதபடி ஜோதி வடிவாக ஈசன் வெளிப்பட்ட திருத்தலம்.

நினைக்க முக்தி தரும் திருத்தலம்.
பஞ்ச பூதத் திருத்தலங்களுள் அக்னி ஸ்வரூபம்.

தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் சிற்றம்பலத்தில்  ஸ்ரீநடராஜர் விளங்குவது போல

திருக்கோஷ்டத்தில் லிங்கோத்பவராக அண்ணாமலையார் விளங்குகின்றார்.

தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற நடுநாட்டுத் திருத்தலங்கள் இருபத்து இரண்டனுள் தலையாயது  - திருஅண்ணாமலை

-
"தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கை தொழ
ஓடிப் போகும் நமது உள்ள வினைகளே!.."

திருப்பட்டூர் அற்புதங்கள்.....!!

திருப்பட்டூர் அற்புதங்கள்.....!!

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

3. இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.

7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.
14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

15. குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.
16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

19. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து
வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.

24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer