கறுப்பர் வாரார்!
வாராரய்யா வாராரு
கறுப்பரிங்கே வாராரு
வாராரய்யா வாராரு
கறுப்பரிங்கே வாராரு
அள்ளி முடிச்ச கொண்டையப்பா
அழகு - மீசை துள்ளுதப்பா
வல்ல வேட்டிப் பட்டுடனே
வாரார் ஐயா ராசாப்போலே (வாராரய்யா வாராரு.....)
ஆளுயரம் அரிவாளாம்
அதுக்கேத்த கம்பீரமாம்
காலிலே முள்ளுச் செருப்பாம்
கறுப்பனுக்கே தனிச்சிறப்பாம் (வாராரய்யா வாராரு...)
வீச்சரிவாள் கையிலுண்டு
வேகமான குதிரையுண்டு
சுற்றிவரும் பகையழிக்கச்
சுக்குமாந் தடியுமுண்டு (வாராரய்யா வாராரு...)
இடுப்பிலே சலங்கையுண்டு
இடிமுழக்கச் சிரிப்புமுண்டு
வாக்கிலே வலிமையுண்டு
வற்றாத கருணையுண்டு (வாராரய்யா வாராரு...)
கையிலே சவுக்குமுண்டு
கனகமணிச் சலங்கையுண்டு
பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமன் நாமமுண்டு (வாராரய்யா வாராரு...)
சந்தனமுண்டு ஜவ்வாதுண்டு
சாம்பிராணி வாசமுண்டு
சம்பங்கி ரோஜாமுல்லை
மணக்குதப்பா இங்கே இப்போ (வாராரய்யா வாராரு...)
கறுப்பர் துதி
சாட்டையில் பம்பரம் போலாட பேய்கள் தலை சுழல
வேட்டைகளாடி வரும்போது தெய்வங்கள்
மெய்மறந்து பாட்டுகள் தேடிப் பதுங்கி நின்றோடப்
பகலவன் போல் கோட்டையில் வாழ்பவனே
நீ கறுப்பய்யா எங்கள் குல தெய்வமே.
சிங்கையில் வாழ் அய்யன் சித்தருவாள் ஏந்தும் கையன்
வங்கி சமுதாடு கொண்ட மார்த்தாண்டன் யெங்கள் பிரான்
அண்ணல் கறுப்பண்ணரவர் யானினைத்தேன்
முத்துமணி வண்ணனையே நீ துணையாய் வா
தரையேழும் போற்றும் புதுவை நகரம் தழைக்க வந்த
துரைராசன் கோட்டைக் கறுப்பணசுவாமி துரந்தரனே
அரை நாழிகையும் பிரியாமல் தோழநற்றுணையாக வைத்த
வரதா தென்சிங்கை கறுப்பா பெலத்த வலுச் சிங்கமே.
சினமான கஞ்சன் தனையே வதைத் தோனென்று
தேவகியாள் மனமே மகிழ வரங் கொடுத்தோன்
திருமால் மருகாயினமான சுற்றமும் மற்றுமுள்ளோரும்
இனிப்புகழ கனமான வாழ்வு தருவாய் பெரியகறுப்பண்ணனே
ஆறாரு செய்த பிழையிருந்தாலும் அன்போர்க்குகந்து
பாராதிருந்திட ஞாயமுண்டோயிந் தப்பா தகங்கள்
நீராகிலும் சற்றே மாறாதிருந்து யென்னை றெக்ஷீ அய்யா
காராரும் மேனித் துரையே பெரிய கறுப்பண்ணனே!
எந்தன் மேல் குற்றம் ஏதுபிழைகள் இருந்திடினும்
தந்தை தாய் சேயின் முகங் கண்டிரங்கிடும் தன்மையென
வந்தனம் செய்து உன் பாதார விந்தம் வணங்கதற்கு
கந்துகம் ஏறி வருவாய் பெரிய கறுப்பண்ணனே!
கறுப்பசாமி வாரார்
கறுப்பர்வாரார் கறுப்பர்வாரார் கறுப்பசாமி
அந்தக்கரியமேகம் போலேவாரார் கறுப்பசாமி
குதிரைமேலே ஏறிவாரார் கறுப்பசாமி
ஐயா-குதூகலமாய் ஓடிவாரார் கறுப்பசாமி
அந்தாவாரார் இந்தாவாரார் கறுப்பசாமி
ஐயா-ஆனந்தமாய் ஓடிவாரார் கறுப்பசாமி
கட்டுக்கட்டி போகையிலே கறுப்பசாமி
ஐயா- காவலாக கூடவாரார் கறுப்பசாமி
எரிமேலி சென்றவுடன் கறுப்பசாமி
ஐயா-எதிரேவழி காட்டிடுவார் கறுப்பசாமி
அழுதைமலை எற்றத்திலே கறுப்பசாமி
ஐயா - அழகாக நிற்கிறாரே கறுப்பசாமி
உடும்பாறைக் கோட்டையிலே கறுப்பசாமி
ஐயா - உருட்டி உருட்டி குளிக்கிறாரே கறுப்பசாமி
வழிநடையாய்ப் போகையிலே கறுப்பசாமி
ஐயா- வழிகாட்டி வந்திடுவார் கறுப்பசாமி
நீலிமலை ஏற்றத்திலே கறுப்பசாமி
ஐயா- நின்றுதவி செய்திடுவார் கறுப்பசாமி
மலையாள தெய்வமய்யா கறுப்பசாமி
ஐயா-மக்களையே காத்திடுவார் கறுப்பசாமி
படிஏறிப் போகையிலே கறுப்பசாமி
ஐயா- பாதுகாத்து வந்திடுவார் கறுப்பசாமி
பட்டாகத்தி கொண்டுவாரார் கறுப்பசாமி
ஐயா- பக்கத்துணையாய் வருவார் கறுப்பசாமி
கச்சை கட்டி போகையிலே கறுப்பசாமி
ஐயா - காதில்கடுக்கனிட்டு கறுப்பசாமி
மீசை முறுக்கி வாரார் கறுப்பசாமி
ஐயா- மிடுக்காக ஓடிவாரார் கறுப்பசாமி (கறுப்பர் வாரார்).

No comments:
Post a Comment