Saturday, 26 November 2016

நமது_இந்து_மதக்_கோவில்களில்_நடக்கும்_அற்புதங்கள்



நமது_இந்து_மதக்_கோவில்களில்_நடக்கும்_அற்புதங்கள்

★சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

★திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

★நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாத காலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

★வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.

★திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.

★ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

★கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.

★கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.

★முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

★திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.

★திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

★தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.

★காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

★சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

★திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

★குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

★ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

★திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

★வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

★திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

★சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி
முகமது உடைத்து அழித்தான்.

★அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

★இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,
மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள்
பெறுகிறார்கள்.

🌺ஓம் நமசிவாய ஓம்🌺

பெரிய கறுப்பர் போற்றி 108

பெரிய கறுப்பர் போற்றி!

1. அற்புதத் தெய்வமே        போற்றி
2. அனைவரையும் காப்பவனே        போற்றி
3. அலங்காரப் பிரியனே         போற்றி
4. அபிஷேகப் பிரியனே        போற்றி
5. அள்ளிமுடிச்ச கொண்டை அழகனே    போற்றி
6. அண்டமெல்லாம் இருப்பவனே        போற்றி
7. அரிவாள் ஏந்தியவனே        போற்றி
8. அகந்தையை அழிப்பவனே         போற்றி
9. ஆபத்தில் காப்பவனே        போற்றி
10.இல்லத்தைக் காப்பவனே        போற்றி
11. ஈடில்லா தெய்வமே        போற்றி
12 உருமாலை கட்டியவனே        போற்றி
13. உலகைக் காப்பவனே        போற்றி
14. உள்ளத்து இருளைப் போக்குபவனே    போற்றி
15. உண்மைப் பரம் பொருளே        போற்றி
16. ஊக்கம் தருபவனே        போற்றி
17. எங்கள் குல தெய்வமே        போற்றி
18. என் குருநாதனே        போற்றி
19.எந்தன் மனத்தில் இருப்பவனே        போற்றி
20. எங்கும் நிறைந்தவனே        போற்றி
21. எத்திசையிலும் இருப்பவனே        போற்றி
22. எங்களுக்கும் அருளும் கறுப்பரே     போற்றி
23. ஏழைப் பங்காளனே        போற்றி
24. ஐம்பொன் அழகனே        போற்றி
25. ஐயனாரின் தோழனே         போற்றி
26. ஐஸ்வரியம் தருபவனே        போற்றி
27. ஒளிமய மானவனே        போற்றி
28. ஒப்பற்ற தெய்வமே        போற்றி
29. ஓவியமாய் பிறப்பே        போற்றி
30. ஔஷதமானவனே        போற்றி
31. கறுப்பண்ண சாமியே        போற்றி
32. கலியுக மூர்த்தியே        போற்றி
33. கண்கண்ட தெய்வமே        போற்றி
34. கருணைக் கடலே         போற்றி
35. கவலைகளைத் தீர்ப்பவனே        போற்றி
36. கல்வியைத் தருபவனே        போற்றி
37. கண்ணின் கருமணியே        போற்றி
38. காவல் தெய்வமே        போற்றி
39. காலமெல்லாம் காப்பவனே        போற்றி
40. கார்மேக வண்ணனே        போற்றி
41. கீழ்த்திசை பார்த்த நாயகனே        போற்றி
42. குண்டலம் அணிந்தவனே        போற்றி
43. குழந்தை வரம் தருபவனே        போற்றி
44. குதிரை வாகனனே        போற்றி
45. குறைகள் தீர்ப்பவனே        போற்றி
46. குட்டி நிமித்தம் கேட்பவனே        போற்றி
47. குற்றம் பொறுக்கும் குணாளனே    போற்றி
48. குருவுக்கும் குருவே        போற்றி
49. கூப்பிட்ட குரலுக்கு வருபவனே    போற்றி
50. கோடி புண்ணியம் கொடுப்பவனே    போற்றி
51. சவ்வாது பூசுபவனே        போற்றி
52. சகலகலா வல்லவனே        போற்றி
53. சந்தனப் பிரியனே        போற்றி
54. சங்கடங்கள் தீர்ப்பவனே        போற்றி
55. சலங்கை கட்டியவனே        போற்றி
56. சர்வகாலமும் காப்பவனே         போற்றி
57. சாஸ்தாவின் காவலனே        போற்றி
58. சிவனின் அம்சமே        போற்றி
59. சிவசக்தி அம்சமே        போற்றி
60. சிவவடிவச் செல்வனே        போற்றி
61. சுக்குமாந்தடிச் சுந்தரனே        போற்றி
62. செங்கீரைச் சிங்கமே        போற்றி
63. செல்வம் தரும் செல்வனே        போற்றி
64. ஞாயிறு வடிவானவனே        போற்றி
65. திருமாலின் தளபதியே        போற்றி
66. திங்கட்சடையோனின் தொண்டனே    போற்றி
67. நகரத்தாரின் நாயகனே        போற்றி
68. நல்லதைச் செய்பவனே        போற்றி
69. நற்புகழ் நல்குபவனே        போற்றி
70. நெஞ்சில் நிலைத்தவனே        போற்றி
71. நெற்கதிர் விளையச் செய்பவனே    போற்றி
72. பலவான்குடிப் பகவானே        போற்றி
73. பரம்பரையைக் காப்பவனே        போற்றி
74. பணியாரப் பிரியனே        போற்றி
75. பங்காளிகளைக் காப்பவனே        போற்றி
76. படையல் பிரியனே        போற்றி
77. பக்தர்களுக்கு அருள்பவனே        போற்றி
78. பகைவர்களை நடுங்கச் செய்பவனே    போற்றி
79. பதினெட்டாம் படிக் கறுப்பரே        போற்றி
80. பாச்சோற்றுப் பிரியனே        போற்றி
81. போற்றி பல பாட வைத்தவனே    போற்றி
82. மாங்கல்யம் காப்பவனே         போற்றி
83. முன்னோடிக் கறுப்பவரே        போற்றி
84. முக்கண்ணன் தளபதியே         போற்றி
85. முறுக்குமீசை அழகனே        போற்றி
86. முண்டாசு கட்டியவனே        போற்றி
87. முள்செருப்பு அணிந்தவனே        போற்றி
88. மெய்வடிவானவனே        போற்றி
89. ராங்கியத்து ராஜாவே        போற்றி
90. ருத்திராட்சம் அணிந்தவனே         போற்றி
91. வயிரவன் கோயிலின் வள்ளலே    போற்றி
92. வருண தேவன் போற்றுபவனே    போற்றி
93. வாரிவழங்கும் வள்ளலே        போற்றி
94. வாழவைக்கும் தெய்வமே        போற்றி
95. வாழ்வு தருபவனே        போற்றி
96. வெற்றிதரும் கறுப்பரே         போற்றி
97. வெள்ளியங்கி அணிந்தவனே        போற்றி
98. வெவ்விய  காலனை வீழ்த்துபவனே    போற்றி
99. வெண்ணையுண்டோனின் அம்சமே    போற்றி
100. வேந்தர்க்கு வேந்தனே        போற்றி
101. வேண்டும் வரம் தருபவனே        போற்றி
102. வேட்டைப் பிரியனே        போற்றி
103. வேலங்குடிக் கறுப்பரே        போற்றி
104. வேதவடிவானவனின் சீடனே    போற்றி
105. வேள்வி வேந்தனின் காவலனே    போற்றி
106. வேற்றுமையின்றி அருள்பவனே    போற்றி
107. வையம் காக்கும் வள்ளலே        போற்றி
108. ஓம் ஸ்ரீ பெரிய கறுப்பண சுவாமியே போற்றி போற்றி
       
பலவான்குடி பெரிய கறுப்பையா

ஆடிவெள்ளியில் ஆண்டுதோறும் உனக்குப் படைப்பையா
தேடிவந்து எம்மைக் காப்பது உன்னுடைய பொறுப்பையா
கூடிநாங்கள் கூப்பிடுகிறோம் எம்கவலை தீருமைய்யா
பாடி அழைக்கிறோம் பரம்பரையைக் காத்திடுவாய் கறுப்பையா

காய்வெட்டி பழுக்கப்போட்டு பங்காளிகள் கூடினோம்
நோய்நொடி யின்றி எங்களை காத்திடுவாய் கறுப்பையா
செங்கீரையில் வீற்றி ருக்கும் சிங்காரக் கறுப்பையா
பொங்கல் வைத்து பூஜை கொடுத்தோம் முன்னோடிக் கறுப்பையா

பால்தயிர் பன்னீர் அபிஷேகம் செய்திட்டோம் கறுப்பையா
ஜல்ஜல் ஓசையுடன் சட்டென வந்துவிடு கறுப்பையா
சந்தனம் விபூதி அபிஷேகம் செய்திட்டோம் கறுப்பையா
அந்திசந்தி ஆபத்து நேரத்தில் காத்திடுவாய் கறுப்பையா

இளநீர் பழங்கள் அபிஷேகம் செய்திட்டோம் கறுப்பையா
நாள்தோறும் எங்களுக்கு நல்லதைச் செய்திடுவாய் கறுப்பையா
ஆண்டுதோறும் சொர்ணாபிஷேகம் செய்திட்டோம் கறுப்பையா
வேண்டுதலை நிறைவேற்றி வைத்திடு பெரிய கறுப்பையா

செங்கீரைத் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்திட்டோம் கறுப்பையா
எங்கள் குலத்தை என்றென்றும் காத்திடுவாய் கறுப்பையா
மலராலே மகிழ்ச்சியுடன் அலங்காரம் செய்திட்டோம் கறுப்பையா
பலவான்குடி மக்களுக்கு பக்கபலமாய் இருந்திடு கறுப்பையா

பாச்சோறு பணியாரம் படைத்திட்டோம் பெரிய கறுப்பையா
பூச்சொரியும் பார்வையுடன் பக்தர்களை பார்த்திடு கறுப்பையா
பக்தியுடன் உனக்கு பள்ளயமிட்டோம் பெரிய கறுப்பையா
சுக்குமாந் தடியுடன் வந்தருள் தந்திடு பலவான்குடி கறுப்பையா.

கறுப்பர் வாரார்

கறுப்பர் வாரார்!

வாராரய்யா வாராரு
கறுப்பரிங்கே வாராரு
வாராரய்யா வாராரு
கறுப்பரிங்கே வாராரு

அள்ளி முடிச்ச கொண்டையப்பா
அழகு - மீசை துள்ளுதப்பா
வல்ல வேட்டிப் பட்டுடனே
வாரார் ஐயா ராசாப்போலே    (வாராரய்யா வாராரு.....)

ஆளுயரம் அரிவாளாம்
அதுக்கேத்த கம்பீரமாம்
காலிலே முள்ளுச் செருப்பாம்
கறுப்பனுக்கே தனிச்சிறப்பாம்    (வாராரய்யா வாராரு...)

வீச்சரிவாள் கையிலுண்டு
வேகமான குதிரையுண்டு
சுற்றிவரும் பகையழிக்கச்
சுக்குமாந் தடியுமுண்டு    (வாராரய்யா வாராரு...)

இடுப்பிலே சலங்கையுண்டு
இடிமுழக்கச் சிரிப்புமுண்டு
வாக்கிலே வலிமையுண்டு
வற்றாத கருணையுண்டு    (வாராரய்யா வாராரு...)

கையிலே சவுக்குமுண்டு
கனகமணிச் சலங்கையுண்டு
பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமன் நாமமுண்டு    (வாராரய்யா வாராரு...)

சந்தனமுண்டு ஜவ்வாதுண்டு
சாம்பிராணி வாசமுண்டு
சம்பங்கி ரோஜாமுல்லை
மணக்குதப்பா இங்கே இப்போ    (வாராரய்யா வாராரு...)

கறுப்பர் துதி

சாட்டையில் பம்பரம் போலாட பேய்கள் தலை சுழல
வேட்டைகளாடி வரும்போது தெய்வங்கள்
மெய்மறந்து பாட்டுகள் தேடிப் பதுங்கி நின்றோடப்
பகலவன் போல் கோட்டையில் வாழ்பவனே

நீ கறுப்பய்யா எங்கள் குல தெய்வமே.
சிங்கையில் வாழ் அய்யன் சித்தருவாள் ஏந்தும் கையன்
வங்கி சமுதாடு கொண்ட மார்த்தாண்டன் யெங்கள் பிரான்
அண்ணல் கறுப்பண்ணரவர் யானினைத்தேன்
முத்துமணி வண்ணனையே நீ துணையாய் வா

தரையேழும் போற்றும் புதுவை நகரம் தழைக்க வந்த
துரைராசன் கோட்டைக் கறுப்பணசுவாமி துரந்தரனே
அரை நாழிகையும் பிரியாமல் தோழநற்றுணையாக வைத்த
வரதா தென்சிங்கை கறுப்பா பெலத்த வலுச் சிங்கமே.

சினமான கஞ்சன் தனையே வதைத் தோனென்று
தேவகியாள் மனமே மகிழ வரங் கொடுத்தோன்
திருமால் மருகாயினமான சுற்றமும் மற்றுமுள்ளோரும்
இனிப்புகழ கனமான வாழ்வு தருவாய் பெரியகறுப்பண்ணனே

ஆறாரு செய்த பிழையிருந்தாலும் அன்போர்க்குகந்து
பாராதிருந்திட ஞாயமுண்டோயிந் தப்பா தகங்கள்
நீராகிலும் சற்றே மாறாதிருந்து யென்னை றெக்ஷீ அய்யா
காராரும் மேனித் துரையே பெரிய கறுப்பண்ணனே!

எந்தன் மேல் குற்றம் ஏதுபிழைகள் இருந்திடினும்
தந்தை தாய் சேயின் முகங் கண்டிரங்கிடும் தன்மையென
வந்தனம் செய்து உன் பாதார விந்தம் வணங்கதற்கு
கந்துகம் ஏறி வருவாய் பெரிய கறுப்பண்ணனே!

கறுப்பசாமி வாரார்

கறுப்பர்வாரார் கறுப்பர்வாரார்        கறுப்பசாமி
அந்தக்கரியமேகம் போலேவாரார்        கறுப்பசாமி
குதிரைமேலே ஏறிவாரார்        கறுப்பசாமி
ஐயா-குதூகலமாய் ஓடிவாரார்        கறுப்பசாமி
அந்தாவாரார் இந்தாவாரார்        கறுப்பசாமி
ஐயா-ஆனந்தமாய் ஓடிவாரார்        கறுப்பசாமி
கட்டுக்கட்டி போகையிலே        கறுப்பசாமி
ஐயா- காவலாக கூடவாரார்        கறுப்பசாமி
எரிமேலி சென்றவுடன்        கறுப்பசாமி
ஐயா-எதிரேவழி காட்டிடுவார்        கறுப்பசாமி
அழுதைமலை எற்றத்திலே        கறுப்பசாமி
ஐயா - அழகாக நிற்கிறாரே        கறுப்பசாமி
உடும்பாறைக் கோட்டையிலே        கறுப்பசாமி
ஐயா - உருட்டி உருட்டி குளிக்கிறாரே    கறுப்பசாமி
வழிநடையாய்ப் போகையிலே        கறுப்பசாமி
ஐயா- வழிகாட்டி வந்திடுவார்        கறுப்பசாமி
நீலிமலை ஏற்றத்திலே        கறுப்பசாமி
ஐயா- நின்றுதவி செய்திடுவார்        கறுப்பசாமி
மலையாள தெய்வமய்யா        கறுப்பசாமி
ஐயா-மக்களையே காத்திடுவார்        கறுப்பசாமி
படிஏறிப் போகையிலே        கறுப்பசாமி
ஐயா- பாதுகாத்து வந்திடுவார்        கறுப்பசாமி
பட்டாகத்தி கொண்டுவாரார்        கறுப்பசாமி
ஐயா- பக்கத்துணையாய் வருவார்    கறுப்பசாமி
கச்சை கட்டி போகையிலே        கறுப்பசாமி
ஐயா - காதில்கடுக்கனிட்டு        கறுப்பசாமி
மீசை முறுக்கி வாரார்        கறுப்பசாமி
ஐயா- மிடுக்காக ஓடிவாரார்        கறுப்பசாமி   (கறுப்பர் வாரார்).

வந்தான் கறுப்பன் விளையாட....

வந்தான் கறுப்பன் விளையாட ..

வந்தான் கறுப்பன் விளையாட
வாளில் ஏறி நின்றாட
வந்தான் கறுப்பன் விளையாட
வாளில் ஏறி நின்றாட

வாளும் வேலும் விளையாட
வாளில் ஏறி நின்றாட
சுக்கு மாந்தடி சுழன்றாட
வந்தான் கறுப்பன் விளையாட

காலில் சலங்கை கலகலக்க
கையில் வாளும் பளபளக்க
முறுக்கு மீசை துடி துடிக்க
வந்தான் கறுப்பன் விளையாட

பாலும் சோறும் கமகமக்க
பள்ளயம் இங்கே ஜொலி ஜொலிக்க
பிள்ளைகள் நாங்கள் கொண்டாட
வந்தான் கறுப்பன் விளையாட

சந்தனக் கறுப்பன் தானாட
சங்கிலிக் கறுப்பன் உடனாட
பதினெட்டாம் படி கறுப்பனுமே
வந்தான் இங்கே விளையாட

முன்னோடியுமே ஓடிவர
நொண்டியும் இங்கே ஆடிவர
பதினெட்டாம் படி கறுப்பனுமே
வந்தான் இங்கே விளையாட

கொராட்டி எனும் ஓர் ஆலயமாம்
கூடி இருப்பவன் சாஸ்தாவாம்
தங்கையும் அங்கே அருகிருக்க
தரணியைக் காக்க வந்தவனாம்

வந்தான் விளையாட

பட்டாடைகளும் பளபளக்க
பரிகளிரண்டும் துடிதுடிக்க
பாவங்கள் போக்கிட கறுப்பனுமே
பறந்தே வந்தான் விளையாட

அலங்காரங்களும் ஜொலி ஜொலிக்க
ஆலயம் வண்ணங்கள் மினுமினுக்க
திருப்புத்தூர் நகர் கருப்பனுமே
தினமும் வந்தான் விளையாட

கண்களில் தீப்பொறி பறபறக்க
கைகளில் பிரம்புகள் சுழன்றாட
வெள்ளைக் குதிரையின் மேலேறி
விரைந்தே வந்தான் விளையாட

சின்னவர் அருகே சிரித்திருக்க
முத்துவும் முறுவல் பூத்திருக்க
சொத்தாம் கோட்டைக் கறுப்பனுமே
சுகமாய் வந்தான் விளையாட

சுக்கு மாந்தடி சுழன்றாட
சூழும் பேய்கள் சுழன்றறோட
கோமகன் கோட்டைக் கறுப்பனுமே
குதித்தே வந்தான் விளையாட

சங்கிலி பின்னல்கள் சலசலக்க
சலங்கைகள் காலினில் ஒலிஒலிக்க
சங்கிலிக் கறுப்பனும் இன்றிங்கே
சரியாய் வந்தான் விளையாட

முன்னோடிக் கறுப்பர் துதி

முன்னோடிக் கறுப்பர் துதி


வேஷ்டியும் லேஞ்சம் தரித்து தடிக்கம்பு மேலெடுத்து
தோட்டி கறுப்பன் எனப் பெயருஞ் சொல்லி - தொடர்ந்திரவில்
பாட்டுரை சிற்றம்பலக் கவிராயர் முன்பற்று வழி
காட்டிய சிங்கைத் துரையே முன்னோடி என்காவலனே!

படுக்கும் பொழுதும் நடக்கும் பொழுதும் பரிந்த சனுகு
தொடுக்கும் பொழுதும் த்ரேக தியானம் தொழும் பொழுதும்
அடுக்கும் பொழுதும் என் சிந்தை உன்பால்
கருணைப் பிரதாப முன்னோடி மகாதெய்வமே!

நீட்டிய கைதனில் பாயந்தோடி அந்த நிமிடந்தனில்
நாடிய காரியம் உனைப்போல் முடிக்க வல்லாரு முண்டோ
கோட்டி செய்யும் வலுப்பேய்களை சங்கிலி கொண்டுகட்டி
மாட்டிய உக்கிரதீரா முன்னோடி மகாதெய்வமே!

கல்லாத நெஞ்சரை ஈயாஉலுத்தர் கசடர் தம்மை
சொல்லான செந்தமிழாற் பாடிஎன்றுமே யான்துதித்து
செல்லாமற் சிந்தையில் எண்ணும்படிக் கருள் செய்திடுவாய்
வல்லார்க்கு வல்லதோர் தீரா முன்னோடி மகாதெய்வமே

மண்ணோடிவந்து வணங்கு கறுப்பண்ணர் மகிழ்
முன்னோடி ஒன்று மொழியக்கேள் - என்பேரில்
நீபக்ஷம் வைத்து நான்நினைத்த படியே கிருபை
தாபக்தன் மேல்விரும்பித் தான்.

செங்கீரை முன்னோடிக் கறுப்பர்

செங்கீரை என்கின்ற சிங்கார சிற்றூரில்
சீர் கொண்டிலங்கும் தேவா!

எங்குலம் காக்கவும் இன்னல்கள் தீர்க்கவும்
வெண்புரவி ஏறிவா! வா!
ஆடுடன் சேவலும் பொங்கலும் வைத்துமே
ஆண்டாண்டு பூசை வைப்போம்

பீடுடன் தரணியில் பெருவாழ்வு பெற்றிட
பேரருளை நீயும் தா! தா!

கையிலொரு அரிவாளும் கனத்த பெருமீசையும்
கண்டதும் நடுங்கவைக்கும்!

பொய்மையும் தீமையும் போயொழிந்தனுதினம்
வாய்மையே முன்பு நிற்கும்!

முன் ஓடிவரும் வினை தீர்ப்பதால் தான் உன்னை
முன்னோடி கறுப்பனென்றார்!

முன்னோடி கறுப்பனே! முன் வந்து பணிகிறோம்!
உனதருள் தந்து காப்பாய்!

காக்கும் தெய்வம்

காக்கும் தெய்வமே - எங்கள்
கருப்ப தெய்வமே - நாங்கள்
நோக்கும் இட மெல்லாம்
உந்தன் வீரத்தோற்றமே    (காக்கும்)

அள்ளிச் சொருகிய - மலர்
அழகுக் கொண்டையும் - வளர்
துள்ளு மீசையும் - உந்தன்
எழிலைக் கூட்டுதே    (காக்கும்)

பகையழித்திடும் - சிறந்த
பரந்த தோள்களும் - நல்ல
கருத்த மேனியும் - உந்தன்
வலிமை காட்டுதே.    (காக்கும்)

காடு வீடெல்லாம் - உந்தன்
காவலில் உண்டு - உயர்
படி பதினெட்டு - <உந்தன்
பார்வையிலுண்டு    (காக்கும்)

ஜாதி மல்லிகை - உயர்
சாந்து ஜவ்வாது - மணக்கும்
சாம்பி ராணியும் - உந்தன்
வரவைக் கூறுதே        (காக்கும்)

சாய வேட்டியும் - உயர்
ஜரிகைப் பட்டுமே - உந்தன்
மேனி அழகிலே - தவழ்ந்து
மின்னிச் சொலிக்குதே    (காக்கும்)

வெள்ளைக் குதிரையும் - உயர்
வீச்சரி வாளும் - நல்ல
தண்டை கிண்கிணி முழங்க
இங்கு வாருமே        (காக்கும்)

சுழன்றா டிடும் - அழகுச்
சுக்கு மாந்தடி - எடுத்து
விளையாடியே - ஐயா
ஓடி வாருமே        (காக்கும்)

கெட்டி மேளமே - கொட்டி
உனை யழைக்கவே -இந்த
செட்டி மக்களாம் - நாங்கள்
சேர்ந்து வணங்கிடும்     (எங்கள் காக்கும்).
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer