Monday, 17 March 2014

ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்



குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறத. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.
இன்று ஒவ்வொரு வீடுகளும் நல்ல முறையில் இருப்பதில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. துர்சக்திகளின் ஆதிக்கத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வாறு இருக்கின்றன. பல பேர் வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருப்பதில்லை. அவர்கள் நல்ல முறையில் தெய்வ வழிபாடு செய்தாலும் பலன் இருப்பதில்லை.

பங்காளிகளாக சேர்ந்து ஒரு தெய்வத்தை வணங்கிவரலாம். இப்படி பங்காளிகள் வணங்கினாலும் ஒருவருக்கு மட்டுமே அந்த குலதெய்வம் அனைத்தையும் வழங்கிக்கொண்டிருக்கும். பலர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த நிலை எதனால் ஏற்படுகிறது என்றால் குலதெய்வத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் மண் எடுத்து வந்து அதனை பூஜை செய்து அவர்களின் பக்கமாக இதனை திருப்பிவிடுவார்கள். இது இப்பொழுது இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் இது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.

உங்களின் தெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள்.நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்றவேண்டாம்.

பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.

குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer