Sunday, 16 August 2015

வினைகள் களையும் விநாயகர் விரதம்

வினைகள் களையும் விநாயகர் விரதம்

ஆவணித் திங்கள் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் சதுர்த்தி விரதத்தைத் தொடங்க வேண்டும்.

அன்று விடியற்காலையில் எழுந்து நீராடி அன்றாடக் கடமைகளைச் செய்த பிறகு அர்ச்சனைக்குரிய மலர்களையும் மற்றும் அபிஷேகப் பொருட்கள் தூபதீபம் பூஜைக்குரிய பொருட்களையும் சேகரித்துப் பூஜை மண்டபத்தை அமைத்து விநாயகரை வழிபடுதல் வேண்டும்.

அவ்வாறு அடுத்த மாத வளர்பிறைச் சதுர்த்தி வரையில் நாள்தோறும் முறைப்படி பூஜைவேண்டும். இந்த முப்பது நாள்களிலும் ஆகாரம் பகலில் உறக்கம் இல்லாமல் இந்திரிய ஆசைகளை நீக்கி இறை எண்ணத்திலேயே ஈடுபட வேண்டும்.

31வது நாள் விநாயகரை வழிபட்டு சைவ உணவு தயார் செய்து விருந்தினர் ஏழைகளோடு இருந்து உணவு உண்ணவேண்டும். இல்லாதவர்களுக்கு அன்னதானம் வழங்கவேண்டும்.

முப்பது நாள் உண்ணாவிரதம் இருக்க இயலாதவர்கள் பூஜைக்கு முதல் நாளாவது அப்படி இருந்து மற்ற நாட்களில் பால் பழம், உப்பின்றி சமைத்த உணவு முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை உண்ணலாம்.

முப்பது நாள் விரதம் இருக்கமுடியாதவர்கள் பூஜை தொடங்கிய ஒரு நாளாவது உணவு உறக்கம் இச்சை முதலியவற்றை நீத்து இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

விநாயகருக்குரிய விரதம் இருப்பதன் மூலம் நம் வினைகளை விநாயக பெருமான் களைவார் என்பது நம்பிக்கை

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer