காளி காதல்
காளி மாதாவை வழிபடுவதற்கு முன்னோர்கள் மூன்று வழிகளை வகுத்துக் கொடுத்தனர். அதாவது 1. தாய்-சேய் உறவு 2. தோழி-என்ற நட்புமுறை 3. நாயகன் நாயகி பாவம். இதனில் பின்னிரண்டு முறைகளும் சிரம சாத்தியமானது என்பதே அன்றே உணர்ந்தவர்கள் தீர்க்கதரிசி மஹா கவி பாரதியார். ஆனாலும் அவள் காளிமாதாவின் மேல் காதல் கொண்டார். எப்படி?
ராகம் தாளம்-திஸ்ஏகம்
புன்னாகவராளி
1. பின்னொ ரிராவினிலே-கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு
கன்னி வடிவமென்றே-களி
கண்டுசற் றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! - இவள்
ஆதிபராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!
2. செல்வங்கள் பொங்கி வரும் -நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்
அல்லும் பகலுமிங்கே-இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை-இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை-நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!
No comments:
Post a Comment