Thursday, 28 February 2019

பஞ்சாட்சரம் ஆனது மூன்று வகைப்படும்

பஞ்சாட்சரம் ஆனது மூன்று வகைப்படும் :

அவை முறையே ஸ்தூல ; ஸூக்ஷ்ம ; காரண பஞ்சாட்சரம் ஆகும்.

இதில்

நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம்

சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம்

சிவசிவ - காரண பஞ்சாட்சரம்

#ஸ்தூல_பஞ்சாட்சரம் :

" நமசிவய " என்பது " ஸ்தூல பஞ்சாட்சரம் " ஆகும்

இம்மந்திரத்தை  ஓம்காரம் ஆன பிரணவத்தோடு சேர்ந்து
" ஓம் நமசிவய " என்று உச்சரிப்பதே மரபாகும்.

சித்தர்கள் இம்மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடாகவே உணர்ந்தனர்
இம்மந்திரத்தின் மூலம் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் ( நிலம் ; நீர் ; நெருப்பு ; மண் ; ஆகாயம் )கட்டுப்படுவதோடு ஐம்பொறிகளும் ( கண் ; காது ; மூக்கு ; வாய் ; மனம் ) நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும்.

பஞ்சாட்சரத்தின் பஞ்சபூதங்களை ஆளும் தன்மை ஆனது கீழ்க்கண்டவாறு குறிக்கும்.

1) ந - நிலத்தை குறிக்கிறது

2) ம - நீரை குறிக்கிறது

3) சி - நெருப்பை குறிக்கிறது

4) வ - காற்றை குறிக்கிறது

5) ய - ஆகாசத்தை குறிக்கிறது

எம்பெருமான் ஈசனின் பஞ்சமுகத்தோடு இணைந்த பஞ்சாட்சர தத்துவ விளக்கம் :

1)" ந "  - ஈசனின் கிழக்கு நோக்கிய முகமான
" தத்புருஷம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " மஞ்சள் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " கௌதம மகரிஷி " ஆவார்.

2) " ம " - ஈசனின் தெற்கு நோக்கிய முகமான
" அகோரம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " கறுப்பு நிறம் " ஆகும்
இதன் ரிஷி " அத்ரி மகரிஷி " ஆவார்.

3) " சி " - ஈசனின் மேற்கு நோக்கிய முகமான
" சத்யோஜாதம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " சாம்பல் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " விஸ்வாமித்ர மகரிஷி " ஆவார்

4) " வ " - ஈசனின் வடக்கு நோக்கிய முகமான
" வாமதேவம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " பொன் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " ஆங்கிரஸ மகரிஷி " ஆவார்

5) " ய " - ஈசனின் மேல் நோக்கிய முகமான
" ஈசானம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " சிவப்பு நிறம் " ஆகும்
இதன் ரிஷி " பாரத்வாஜ மகரிஷி " ஆவார்.

#சூட்சும_பஞ்சாட்சரம் :

" சிவயநம " என்பது " சூட்சும பஞ்சாட்சரம் " ஆகும்.

இம்மந்திரத்தை ஓம்காரம் ஆன ப்ரணவத்தோடு சேர்த்து " ஓம்சிவயநம " என்று உச்சரிக்க வேண்டும்

எம்பெருமான் ஈசனின் ஐந்து முகங்களில் இருந்து " ஓம் " என்னும் " பிரணவம் " உதித்தது

அதாவது

1) ஈசனின் வடக்கு நோக்கிய முகம் ஆன
" வாமதேவம் " முகத்தில் இருந்து - " அகாரமும் "

2) ஈசனின் மேற்கு  நோக்கிய முகம் ஆன
" சத்யோஜாதம் " முகத்தில் இருந்து - " உகாரமும் "

3) ஈசனின் தெற்கு நோக்கிய முகம் ஆன
" அகோரம் " முகத்தில் இருந்து - " மகாரமும் "

4) ஈசனின் கிழக்கு நோக்கிய முகமான
" தத்புருஷம் " முகத்தில் இருந்து - " பிந்து " எனப்படும் நாதத்தின் தொடக்கமும்

5) ஈசனின் மேல் நோக்கிய முகமான
" ஈசானம் " என்னும் முகத்தில் இருந்து
" நாதம் " ஆன " சப்த ரூபமும் " தோன்றின.

இவ்வாறு " ஓம் " என்னும் பிரணவத்தோடு
" சிவயநம " சேர்ந்து முழுமையான
" மந்திர ஸ்வரூபம் " ஆனது

" அவ்வும் உவ்வும் மவ்வுமாய்
அமர்ந்ததே சிவாயமே "

" சிவாயநம என்று சிந்திந்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லையே "

" திருவாய் பொலிய சிவயநம என்று
நீறணிந்தேன்"
" தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே "

#காரண_பஞ்சாட்சரம் :

" சிவ சிவ " என்பது " காரண பஞ்சாட்சரம் " ஆகும்

சிவ சிவ என்னும் மந்திரமானது நமது காரணத்தில் உள்ள பிற கழிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியரின் ஆழ்ந்த கருத்தாகும்.

இம்மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக் கூடியது

ஆகையால் இம்மந்திரத்தின் மூலமாக லௌகீக லாபங்களை எதிர்பார்க்க முடியாது
அதாவது " உலகியல் குறிக்கோள்களை " பூர்த்தி செய்த ஒருவருக்கு ( துறவு நெறி பூண்டவர்களுக்கும் மிக வயதானவர்களுக்கும் )மட்டுமே இம்மந்திரம்
பொருத்தமானது ஆகும்.

" சிவசிவ என்றிட தீவினை மாலும் "
" சிவசிவ என்கிலார் தீவினையாளர் "
" சிவசிவ என்றிட தேவருமாவர் "
" சிவ சிவ எண்ண சிவகதி தானே "

சி  - சிவானந்தம் - பொருள்

வ - சிவசன்னதி - அருள்

ய - உயிர்கள் - தெருள்

ந - திரோதானம் - மருள்

ம - ஆணவம் - இருள்

தன்னை அறிந்தவன் தவத்தை அடைகிறான்
தவத்தை அடைந்தவன் சிவத்தை அடைகிறான்

" நித்தம் தவம் இருந்தால் "
" சித்தம் சிவம் ஆகும் "

லக்ஷ்மண விரதம்

லக்ஷ்மண விரதம்

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற *அகஸ்திய மாமுனிவர்* அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும் அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து *ராவண கும்பகர்ண* வதத்தை விட *லக்ஷ்மணன்* ராவணன் மகன் *மேகநாதனை வதைத்ததே* மாபெரும் வீர செயல் என்றார்.அகஸ்தியர் அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள் மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க *அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ* ஆனால் ஏதும் அறியாதவன் போல் *லக்ஷ்மணின் பெருமையை* என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு *மூன்று அறிய வரங்கள்* தரவேண்டும் என நிபந்தனை வைத்தான் அவை *1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்*
*2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்* *3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்* என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான் அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர் இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்( *பெண்ணையும்*) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் *ரிஷிமுக பர்வதத்தில்* மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன் அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் *நித்ராதேவி* யிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன் அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது மூன்றாவது *நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர்* நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் *பலா அதிபலா* என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் அந்த *பலா அதிபலா* மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க *ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்* லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் *ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும்* என்பது எம் கருத்து..!
 *ஸ்ரீ ராமஜெயம்* சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே,
 *ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம்* சொல்வது புண்ணியமே..!

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

80 ஆன்மீக குறிப்புகள்

80 ஆன்மீக குறிப்புகள் 71-80

80 ஆன்மீக குறிப்புகள்




71. பூஜை அறையில் அதிக படங்களையும்,
தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக்
கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும்
இடையில் போதிய இடம் விட்டு வைக்க
வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில்
சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர்
பாத்திரங்களில் நேரடியாக வைத்து
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை
வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட
விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும்
விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு
செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது
நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு
அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும்
கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு
வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது
லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு
வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு
கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே
உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம்
சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது
வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி
வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும்
உதவும். வெளியே செல்லும்போது சட்டைப்
பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து
சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி,
தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

80 ஆன்மீக குறிப்புகள் 61-70

80 ஆன்மீக குறிப்புகள்






61. வெற்றிலை நுனியில் லட்சுமியும்,
மத்தியில் சரவஸ்தியும், காம்பில்
மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே
வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு
வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு
வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு
இடது புறம் வருமாறு வைக்க வேண்டும்.
அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி
சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை
போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை
போடும் போது வாழை மரத்திலிருந்து
நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது
பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு
முன் தான தருமம் செய்வதென்றால் செய்து
விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம்
செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும்
ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல
பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து
முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையை விரித்து போட்டு இருந்தால்
லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள்
உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப்
பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும்,
பாதமும் திறந்து நிலையில் இருக்க
வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான
வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்
படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து
இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப்
படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்
திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்
கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்
தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப்
பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு,
தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து
கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.


80 ஆன்மீக குறிப்புகள் 51-60

80 ஆன்மீக குறிப்புகள்




51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில்
வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில்
வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம்
செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல
மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள்
போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும்.
நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில்
ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில்
போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட
வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்
வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி
கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை
ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி
இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது
என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல
வழியனுப்பிய பிறகு பூஜை,
முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம்,
திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை
வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும்.
வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம்
கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம்
பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள்
ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம்
இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப்
போட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.
ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும்
வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால்
சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு
குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி,
குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து
விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு
நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு.
காலையில் எழுந்ததும் துளசியைத்
தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம்
கொடுக்கும்போது சிறிது துளசியுடன்
தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு
தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப்
படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க
வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்
கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை
எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு
வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில்
எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த
அளவு பாக்கு வைக்க வேண்டும்.


80 ஆன்மீக குறிப்புகள் 41-50

80 ஆன்மீக குறிப்புகள்



41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு
பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி
வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட
துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும்.
மா இலை தோரணங்களுக்கு பதிலாக
பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால்
மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின்
வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு
வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது.
யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து
கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக்
கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும்
துளசியை கையில் வைத்துக் கொண்டு என்
பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின்
தொடர்ந்து செல்வேன் என பகவான்
கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில்
துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை
அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம்
செய்யும்போது வெற்றிலை மற்றும்
பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2,
4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு,
வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள்,
தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில்
நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற
பொருட்களின் மீது வைக்க வேண்டும்.


80 ஆன்மீக குறிப்புகள் 31-40

80 ஆன்மீக குறிப்புகள்



31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர
உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி
உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை
வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்.
அவ்வாறு கேட்க முடியாத நிலையில்
மாலையில் கேட்பது அவ்வளவு
உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க
தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே
வெற்றிதான். காலையில் விழித்தவுடன்
நாராயணனையும் இரவு தூங்கு முன்
சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி
தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில்
தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில்
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம்
ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய
வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து
கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல்
இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும்
ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில்
உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால்
பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது
கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை
எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.

39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள்
அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது
தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.


80 ஆன்மீக குறிப்புகள் 21-30

80 ஆன்மீக குறிப்புகள்



21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப்
படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை
சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால்,
சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்
கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில்
காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது
நின்றவாரே தொழுதல் குற்றமாகும்.
அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்ப
ோது காலை, மாலை வேளைகளில்
விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த
பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய்
உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில்
குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள்
மட்டுமே விபூதியை நீரில் குழைத்து
பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும்
இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது
பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால்
மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப்
பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல்
உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல்
கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும்,
தலைகுடுமியை முடியாமலும்,
தலையிலும், தோளிலும் துணியை
போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ
வழிபாடு செய்யக் கூடாது.

80 ஆன்மீக குறிப்புகள் 11-20


80 ஆன்மீக குறிப்புகள்



11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது.
இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல்
கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும்
இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத
பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள்
வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்,
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே
குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம்
அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு
மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை
மணி முதல் ஆறு மணிக்குள் தீபம்
ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும்
நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும்
எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில்
விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய்,
இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை
ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி
பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர
சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ
ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி
வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை
ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான்
விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில்
பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி
தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட
வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.


80 ஆன்மீக குறிப்புகள் 1-10


80 ஆன்மீக குறிப்புகள்

1. தினசரி காலையும், மாலையும் தூய
மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள்
பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க
வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,
தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த
மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம்,
கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,
குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,
வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித
நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை
அண்டாது. தூய்மையான காற்றும்
கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக
வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை
இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து
வைக்காதீர்கள். இது இறை சக்தியைக்
குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள்
ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு
பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம்
ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால்,
அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை
சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில்
பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ
வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக
இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற
பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும்
இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி
இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது
உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது
துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில்
வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம
நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய்
தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல்
பூஜை செய்யக்கூடாது.


Tuesday, 26 February 2019

துளசியைப் பற்றி பத்ம புராணம்

*துளசியைப் பற்றி பத்ம புராணம்*

 • எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள்.

 •  சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும் ரோகங்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

 • எவரது இல்லத்தில் துளசிச்செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன
ஏற்படாது.

 •  துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய
வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு
மறுபிறவி கிடையாது.

 • அனுமார் இலங்கையில் சீதா தேவியைத் தேடி அலைந்தபோது ஒரு
மாளிகையில் துளசி மாடத்தையும் நிறைய துளசிச் செடிகளையும் கண்டு இங்கு
யாரோ ஒரு விஷ்ணு பக்தர் இருக்கிறாரென்று ஊகித்தாராம். அங்கு இறங்கி
விசாரித்தபோது அது விபீஷணரின் மாளிகை என்று தெரிய வந்ததாம்.

 • சீதை துளசியை பூஜை செய்ததின் பயனாக அவளுக்கு ராமபிரான்
கணவராக கிடைத்தாரென்று துளசி ராமாயணம் கூறுகிறது.

 • விஷ்ணு பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தைப்
பிரசாதமாகப் பெறுவது பக்தர்கட்கு உவப்பானதாகும். இதைச் சரணாமிர்தம்,
தீர்த்த பிரஸாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர்.
இதைப்பற்றி ஆகமநூல்,

*அகால மிருத்யு ஹரணம்*
*ஸர்வ வியாதி விநாசனம்*
*விஷ்ணோ பாதோதகம் பீத்வா*
*புனர் ஜன்ம ந வித்யதே*

Monday, 25 February 2019

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்

#திருவண்ணாமலை

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்

🍀திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்
கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.

🍀தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன.

🍀திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது.

🍀இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

🍀பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள், நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும், பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.

🍀இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது, எப்படி வளர்ச்சி பெற்றது, யார்-யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

🍀திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால், இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

🍀அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🍀முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம் நூற்றாண்டில் கருவறை, செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது.

🍀6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது.

🍀9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது, திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள்தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள்.

🍀அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான்.

🍀1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.

🍀12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி, வாரி வழங்கினார்கள்.

🍀14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

🍀15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

🍀16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராய ருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக, மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்தான்.

🍀அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

🍀217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் ‘கிருஷ்ணராயன்’ என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.

🍀1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

🍀இதற்கிடையே குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் சிறு, சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது.

🍀கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

🍀மன்னர்கள் மட்டுமல்ல... மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் அலை, அலையாக வர உதவி செய்தது.

🍀14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

🍀கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும், சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

🍀மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை வியந்து, வியந்து பார்க்கிறோம் என்றால் அதற்கு இந்த இரு மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான்.

🍀திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார்.

🍀அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன், தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer