Saturday 12 March 2016

தக்ஷிணகாளி கற்பூராதி ஸ்தோத்திரம்!

தக்ஷிணகாளி கற்பூராதி ஸ்தோத்திரம்!

வித்யா ராஜ்ஞீ மந்திரம்

கற்பூராதி ஸ்தோத்ரம் என்ற தக்ஷிணகாளியினுடைய ஸ்தோத்திரத்தில், அந்த அம்பிகையினுடைய மந்திரோத்தாரம் முழுவதும் அடங்கியுள்ளது. தேவியின் த்யானம், யந்திரம், சாதனை ஸ்வரூபவர்ணனை மட்டுமின்றி தக்ஷிணகாளியின் முக்கியமான மந்திரமும் இதில் உள்ளது. 21- வது ச்லோகமான இதம் ஸ்தோத்தரம் என்பதில் இது விரிவாகவே விளக்கப்பட்டுள்ளது.

தக்ஷிணகாளியின் மந்திரங்களில் மிகவும் கீர்த்தி பெற்றது வித்யா ராஜ்ஞீ எனும் மந்திரம். த்விம் சாக்ஷ்ரீ, அதாவது 22 பீஜங்களைக் கொண்டது. இந்த மந்திரம் முதல் 5 ச்லோகங்களிலேயே விளக்கப்படுகிறது.

முதல் ச்லோகம்...........க்ரீம்-க்ரீம்-க்ரீம் (3 அக்ஷரங்கள்)
2-வது ச்லோகம்.......... ஹூம் ஹூம் (2 அக்ஷரங்கள்)
3-வது ச்லோகம் ........... ஹ்ரீம் ஹ்ரீம் (2 அக்ஷரங்கள்)
4-வது ச்லோகம் ............ தக்ஷிண காளிகா (6 அக்ஷரங்கள்)
5-வது ச்லோகம்........... க்ரீம்-க்ரீம்-க்ரீம்-ஹூம்-ஹூம்-ஹ்ரீம்-ஹ்ரீம் ஸ்வாஹா (9 அக்ஷரங்கள்)

எனவே முதல் ஐந்து சுலோகங்களிலேயே 22 அக்ஷரங்கள் கொண்ட வித்யாராஜ்ஞீ மந்திரம் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீவிமலானந்த ஸ்வாமி 5-வது சுலோகத்தின் டீகாவில் பின் வருமாறு சக்தானந்த தரங்கினி-யை மேற்கோள் காட்டி, தக்ஷிண்காளியினுடைய உண்மை ஸ்வரூபத்தையே இந்த 22 அக்ஷரங்களும் குறிப்பிடுகிறது என்கிறார்.

க்ரீம் கரோ மஸ்தகம் தேவி
க்ரீம் காராக்ஷ லலாடகம்
என்று ஆரம்பித்து.

ஸ்வஸப்தேன பதத்வந்தம்
ஹகாரேன நகாம் ததா
என்று முடிக்கிறார்.

5-வது சுலோகத்திலுள்ள ஸ்வரூபம் என்ற வார்த்தையும் 6-வது சுலோகத்திலுள்ள சகலம் என்ற வார்த்தையும் இந்த வித்யா ராஜ்ஞீயைக் குறிப்பிடுகின்றது.

ஆறாவது அவளுடைய, ஒரு அக்ஷரம் முதல் 21 அக்ஷரங்கள் வரையிலுள்ள வேறு சில மந்திரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வித்யாராஜ்ஸ்ரீ மந்திரத்தின் ரிஷி மஹாகாளரே, இந்த மந்திரங்களில்.

த்யானம் பற்றி 1 முதல் 11 சுலோகங்கள்

யந்திரம் பற்றி 18-வது சுலோகம்.
சாதனை பற்றி 10,11,15,16,17,18,19,20
மத்யா பற்றி  18
மாம்ஸா பற்றி 19
மைதுனா பற்றி 10
பலச்ருதி பற்றி 21 22
ஸ்துதி பற்றி 9,12,14

சுலோகங்களும் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer