Sunday, 24 March 2019

அஷ்டம சனியும், ஏழரை சனியும்!

*அஷ்டம சனியும், ஏழரை சனியும்!*

*அஷ்டம சனி:*

✰ ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி வருவது தான் அஷ்டமத்து சனி.

✰ அஷ்டம சனியில் தொட்டது துலங்காது, அஷ்டமத்து சனி திசையில் அந்நிய தேசத்தில் புகழ்பெறுவான் என்றெல்லாம் கூறுவார்கள்.

✰ வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். அஷ்டம சனி நடக்கும் போது புத்தி வேலை செய்யாது, உணர்ச்சி மட்டும் வேலை செய்யும்.

✰ அஷ்டம சனி இரண்டரை வருடம் இருக்கும். ஆனால் அது போன பிறகு அவர்களிடம் பேசினால் ஞானி போல பேசுவார்கள். அஷ்டம சனி வந்து போனவர்கள் நிதானமாகவும், யதார்த்தமாகவும் பேசுவார்கள்.

✰ பொதுவாக சனி இரண்டரை வருடம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும். சந்திரனுக்கு 8-ல் சனி வருவது அஷ்டம சனி.

*ஏழரைச் சனி:*

✰ ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் ஏழரைச் சனி ஆகும்.

✰ அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும்.

✰ வான்வெளியில் எல்லா ராசிகளிலும் சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக் கொண்டு வர 30 வருடங்களை வகுத்தால் 12 ராசிகளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

✰ ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால் என்று நஷ்டமாகவே அக்காலம் இருக்கும்.

✰ அடுத்த பகுதியை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

✰ அடுத்த பகுதியை கழிவுச் சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.

*பரிகாரங்கள்:*

✰ உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

✰ பொதுவாக சனிக்கிழமைகளில் எள் விளக்கு ஏற்றலாம்.

✰ சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

✰ அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

✰ ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

✰ தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

✰ தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

✰ விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்ல பலனைக் கொடுக்கும்.

✰ சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.

✰ கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.

இதைப் படிப்பவர்கள் விபூதியைத் தவிர்க்கவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்

*இதைப் படிப்பவர்கள் விபூதியைத் தவிர்க்கவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.*

விபூதியைத் தரித்துக் கொள்ளும் முறைகளும் பெயர்களும் :-

1. உள் தூளனம் :-

விபூதியை அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை "உள் தூளனம்" ஆகும்.

2. திரிபுண்டரீகம் :-

ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரல்களால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்துக் கொள்ளும் முறை "திரிபுண்டரீகம்" ஆகும்.

திருநீற்றை மோதிர விரலால் எடுப்பதுதான் சிறந்தது.

நம் உடலில் பவித்ரமான பாகம் என்று அது தான் கூறப்படுகிறது.

வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, அண்ணாந்து நெற்றியில் பூச வேண்டும்.


"திருச்சிற்றம்பலம்"அல்லது "சிவாயநம" அல்லது "சிவ சிவ" என்று சொல்லி திருநீற்றினை அணிந்து கொள்ள வேண்டும்.

காலை, மாலை மற்றும் இரவு படுக்கப் போகும் போதும்.....

வெளியே கிளம்பும் போதும்.....

திருநீறு தரிக்க வேண்டும்.....

நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் விபூதி தரிக்கவே கூடாது.

*சுவாமி முன்பும்....*

*குரு முன்பும்....*

*சிவனடியார் முன்பும்....*

*முகத்தைத் திருப்பி நின்று....*

விபூதி அணிய வேண்டும்...

1. தலை நடுவில்.....

2. நெற்றி.....

3. மார்பு நடுவில்....

4. தொப்புள் மேல்.....

5. இடது தோள்....

6. வலது தோள்....

7. இடது கை நடுவில்....

8. வலது கை நடுவில்.....

9. இடது மணிக்கட்டு....

10. வலது மணிக்கட்டு....

 11. இடது இடுப்பு.....

12. வலது இடுப்பு ....

13. இடது கால் நடுவில்.....

14. வலது கால் நடுவில்....

15. முதுகுக்குக் கீழ்....

16. கழுத்து....

17. வலது காதில் ஒரு பொட்டு.....

18. இடது காதில் ஒரு பொட்டு.....

என மொத்தம் 18 இடங்களில்....

திருநீறு அணியலாம் என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றன.

வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை

வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை

பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் போட்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது.

ஓராண்டு வரை நவக்கிரக தோஷம் நம்மை பாதிக்காதிருக்க ஒரு ஆன்மீகப்பரிகாரம

சுத்தமான இடத்தில் இருந்து இரண்டு கைப்பிடியளவு அருகம்புல் எடுத்து வரவேண்டும்.அதைக் கழுவ வேண்டும்.பின் அதோடு ஐந்து மிளகை இடித்துப்போட வேண்டும்.அதை ஆட்டுரலில் அல்லது மிக்ஸியில் போட்டு சாறு எடுக்க வேந்தும்.அதை துணியில் வடிகட்ட வேண்டும்.அதில் முப்பது மில்லி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.குடித்தப்பின் ஒன்றரை மணி நேரம் வரையிலும் டீயோ காபியோ காலை உணவோ சாப்பிடக்கூடாது.அதன்பின் அதிக காரசாரமில்லாத உணவுகளை சாப்பிடலாம்.மச்சமாமிசம் அறவே கூடாது.இப்படி ஒன்பது நாள் சாப்பிட்டால் போதும்.ஒரு வருடம் வரை நவக்கிரக தோஷம் நம்மைப் பாதிக்காது.இது அனேகர் அனுபவத்தில் பரிசோதிக்கப்பட்டது.நன்றி:எனது ஆன்மீககுரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

சில வயதானவர்கள் நோய் நொடி இல்லாமல் படுக்கையில் படுக்காமல் உயிர்விடுவது எப்படி என என்னிடம் கேட்டார்கள்.

நான், சனிக்கிழமை மாலை மணி 4.30 முதல் 6.00மணிக்குள் 8 வாழைப்பழம் ஒரு எருமை மாட்டிற்குக் கொடுத்துக்கொண்டே வரச்சொன்னேன்.எம காயத்ரியை தினமும் இரவில் 27 தடவை ஜெபிக்கச் சொன்னேன்.முதியவர்கள் நல்ல முறையில் உயிர் துறந்தனர்.இதை ஜோதிடர்களும் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

இல்லற தர்மம்

*இல்லற தர்மம்*

கட்டிய மனைவியை
கடைசி வரை
கண் கலங்காமல்
காப்பவன்,
தவம் செய்ய தேவை இல்லை.

இருபத்தி ஒரு வயது வரை
அவனவன் சொந்த ஆன்ம கர்மா
செயலுக்கு வராது.

அந்த ஆன்மாவின்
ஸ்தூல தாய் தந்தை
கர்மாவே வழி நடத்தும்.

96 தத்துவங்கள்
முடிவு பெறுவது
இருபத்தி ஒரு வயதிலே.

அதன் பிறகே
அவனது
சொந்த
ஆன்ம கர்மா
செயலில் இறங்கும்.

சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது.
சக்தியோடு
துணை சேர வேண்டும்.

சிரசு ஏற பல வழி...

தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
இன்னும்
எத்தனையோ மூலம்
வழி உள்ளது
சிரசு ஏற.

ஆனால்
சிறந்த மூலம்
இல்லற தர்மம்.

சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது.

சக்தி மாறி
சிவம் சேர்ந்தாலே
பிறவியே சிக்கலே..

மன பொருத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை.

ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.

அந்த சக்தியோடு
சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்.

சிவ சக்தி இடையே
ஊடலும் கூடலும்
உற்சாகம் தானே...!

ஆனால்...
சக்தியின் கண்ணீருக்கு
சிவம் காரணமானால்
அதை விட
கொடிய கர்மா
உலகில் இல்லை.

ஒருவன்
வாழ்வை ஜெயிக்க
ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது.
உண்மையே.

ஆனால்
உறவுகளை கொண்டே
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்கவும்
ஒரு வழி உள்ளது...
உலகம் அறியாதது.

சொந்தம் என்பது
பழைய பாக்கி என
அறிந்தவனுக்கு
சொந்தம் சுமை இல்லை.

நட்பு என்பது
பழைய பகை என்பதை
பண்போடு அறிந்தவனுக்கு
பதற்றம் இல்லை.

எதிரி என்பவன்
தனது கர்மாவின்
தார்மீக கணக்கே
என தன்மையோடு
உணர்ந்தவனுக்கு
எதிரி இல்லையே..

உனது எதிரியும் நீயே!

உனது செயலே
கர்மா ஆகி
அந்த கர்மாவே
நீ எதிரி என நினைக்கும்
ஒரு உயிருள்ள சடலத்தை
உனக்கு எதிராக
பயன்படுத்துகிறது
என நீ உணரும் போது,

உன் எதிரி முகத்தில
உனது கர்மா
உனது கண்களுக்கு
தெரிய வந்தால்..

எதிரி...
உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை
உடனிருந்தே கொல்லும்
உறவும்,
உன்னோடு பிறக்கும்
உனது
பழைய கணக்காலே!

பழைய கணக்கு புரிந்தால்,
பந்த பாசம்;
சகோதரத்துவம் மீது
பற்று அற்ற பற்று
வைத்து...
பிறவி கடமை வெல்லலாம்.

கர்மாவின் கணக்கு புரிந்தால்,
உனது பக்கத்தில்
சரி பாதி அமரும் மனைவி...
யார் என்றும் புரியும்.

தாய் தந்தையை
அன்போடு
பூஜிப்பவன்
தந்தை வழி
தாய் வழி
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.

உறவுகளுக்கு
அவர்கள் தரும் இன்னல்கள்
பொறுத்து
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உபகாரமாக உதவி வந்தால்,

உனது
ஏழு ஜென்ம
சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.

கோயில் போனாலோ
மகா குளத்தில்
குளித்தாலோ
ஒன்னும் மாறாது

சிறு இன்பம் மட்டும்
சிறிது காலம் கிடைக்கும்
அவ்வளவே..

ஆனால்.....
ஒரே ஒரு உறவை
நீ பூஜித்தால்
பிறவி பிணி
மொத்தமாக தீரும்
அது,
மனைவியே!!

மனைவியை
மகிழ்ச்சியாக வைப்பது
உலகிலேயே
சிரமம் மட்டும் அல்ல.
அது தான்
உலகிலேயே
சிறந்த
தவம்.

தவம் என்பது
சாமான்யன்களுக்கு சிரமமே.

கட்டிய மனைவியையும்
உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும்
உளமாற நேசித்து
உன்னதமாக
உனது வாழ்வை
ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால்
அதுவே
உலகின் சிறந்த தர்மம்
சிறந்த தவம்!

தாய் தந்தையை
வணங்கினால்...
- ராமேஸ்வரம் போக
தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்க!

உறவுகளை மதித்தால்...
- கிரக தோஷம் நீங்க
திருவண்ணாமலை,
இடைக்காடரை
தேட தேவை இல்லை!
நவ கிரகமும்
சுற்ற தேவை இல்லை!

மனைவியை,
பெற்ற பிள்ளையை நேசித்தால்,
அவர்களை
ஆனந்தமாக வைத்தால்...
- கர்ம விமோஜனம் தேட
அகத்தீசனை தேடி
பாபநாசம்
போக தேவை இல்லை!

இதற்கு தான்
இல்லற வாழ்க்கை
அமைத்தான்...
நமது
முப்பாட்டன்!
ஆதி யோக வம்சம்!

மனைவி
அழும் வீடே
நரகம்.

மனைவி
சிரிக்கும் வீடே
பிரபஞ்ச சொர்க்கம்.

#சக்தி
உணர்ந்தாலே மட்டுமே,
#சிவம்
ஜோதி ஆக ஜொலிக்கும்!

வீட்டில் எதிர்மறை சக்திகளை விரட்ட

*வீட்டில் எதிர்மறை சக்திகளை விரட்ட*

சிலருக்கு வெளியில் இருக்கும் வரை உள்ள மன சந்தோஷம், நிம்மதி போன்றவை வீட்டிற்குள் நுழைந்த மறு நிமிடம் காணாமல் போய்விடும்.

மேலும் வேறு பல கவலைகளும் தொற்றி கொள்ளும், காரணமின்றி வீட்டில் சதா சண்டை போன்றவை இருந்து கொண்டு இருக்கும்.

இப்படிப்பட்டவை நீங்க, அந்த சூழலில் உள்ள எதிர்மறை சக்திகளை அகற்ற நிரந்தர நிம்மதி பெற கீழே கொடுத்துள்ள பரிகாரம் உதவும்.

இதை எந்த நாளிலும், நேரத்திலும் செய்யலாம்.

வீட்டின் மத்திய பகுதியில் ஒரு மத்திம அளவுள்ள

(பெரிய வீட்டில் உள்ளோர், அதற்கு தகுந்தார் போல் பெரிதாக தேர்ந்தெடுத்து கொள்ளவும் )

பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கிண்ணத்தில், ராக் சால்ட் இட்டு

(கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்துப்பு, பொடியாக கேட்டு வாங்கி வைத்து கொள்ளவும்)

மூன்று நாட்கள் அதை திறந்தபடியே வைத்திருக்கவும்.

நான்காம் நாள் அதை எடுத்து உப்பை மட்டும் ஓடும் நீரில் விட்டு விடலாம் அல்லது வீட்டிற்கு வெளியே கால்வாயில் நீரை கொண்டு கரைத்து விட்டு விடலாம். எதிர் மறை சக்திகளை அதீதமாய் சுவீகரிக்கும் சக்தி கொண்டது 'ராக் சால்ட்'

மாதம் ஒரு முறை இப்படி செய்து வர நிரந்தர நன்மை பெறலாம்.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer