இறைவனை எப்படி வழிபடவேண்டும், வழிபடும் முறைகளில் ஒருசில வழிமுறைகள்
1. அபிஷேகம் ( நீர், பால், தயிர்,சந்தனம்,தேன்,பன்னீர்,இளநீர்,திரவியபொடி,விபூதி,கரும்புச்சாறு,போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து இறைவனை வழிபடுதல் ஆகும்)
2. அழகு செய்தல் ( பெருமானுக்கு சந்தனத்தால் காப்பு செய்தல்,திருநீறால் காப்பு செய்தல்,அன்னத்தால் காப்பு செய்தல்,ஆடை, ஆபரணங்கள் அனிவித்தல், பிறை,திருநீறு பட்டை அனிவித்தல்,முகம் பாவனை செய்தல், மாலைகள் சாத்துதல் போன்றவைகள் ஆகும்)
3. அர்ச்சனை ( மலர்களால் அர்ச்சனை செய்தல், விபூதியால் அர்ச்சனை செய்தல், குங்குமத்தால் அர்ச்சனை செய்தல், வேதங்களால் அர்ச்சனை செய்தல்,மந்திரங்களால் அர்ச்சனை செய்தல், திருமுறைகளால் அர்ச்சனை செய்தல், அஷ்டோத்திரம் ( 108) போற்றிகள் செய்து அர்ச்சனை செய்தல் சகஸ்ரநாமம் ( 1008) போற்றிகள் செய்து அர்ச்சனை செய்தல் போன்றவை ஆகும்)
4. நைவேத்யம் ( பஞ்சாமிர்தம்,சுத்தஅன்னம்,சுண்டல்,பழங்கள்,சக்கரைப் பொங்கல்,வெண் பொங்கல், பாசிப்பயிறு பாயாசம்,போன்றவை செய்தல் ஆகும்)
5. ஆராதனை ( 16 தீப வகைகளை வைத்து பெருமானுக்கு அர்ச்சித்தல் ஆகும்)
6. திருவிழாக்கள் ( திருவாதிரை, பிரதோசம்,கல்யாண உற்சவம்,ஆருத்ரா தரிசனம்,அமாவாசை,பௌர்ணமி, மகாசிவராத்திரி,மாதசிவராத்திரி, போன்றவைகளை கொண்டாடுதல் ஆகும்)
No comments:
Post a Comment