மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக இருக்கும் அஷ்டதிக் பாலகர்கள்.
அஷ்டதிக் பாலகர்கள் என்று இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை குறிப்பிடுவார்கள். இவர்களை வணங்கினால் அனைத்து விதபலன்களையும் பெறலாம்.
மனிதர்கள் செய்யும் நற்பலன்களுக்கும், தீய பலன்களுக்கும் இவர்களே சாட்சியாக இருக்கின்றனர்.
இந்திரனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும், சுகமும் உண்டாகும். அக்னியை வழிபட்டால் ஒளி பொருந்திய நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறலாம். எமனை வழிபட்டால் தீவினைப் பயன்கள் நீங்கி தர்ம வழியில் நடக்கலாம். நிருதியை வழிபட்டால் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம். வருணனை வழிபட்டால் பயிர்வகைகள் சிறந்து வளர்ந்து பசுமையை உண்டாக்கி செழிப்பாக வாழலாம். வாயு நம் மூச்சுக்கு ஆதாரமாக இருப்பவர், நீண்ட ஆயுளையும், பலத்தையும் வழங்குவார், குபேரனை வழிபட்டால் சகலவித செல்வங்களையும் தந்து வாழ்க்கையை சிறப்பிப்பார். ஈசானனை வழிபட்டால் ஞானத்தை வழங்கி ஆன்ம விடுதலையை தருவார்.
இதனால் இந்த அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டால் வாழ்வில் அனைத்தும் பெற்று இன்பமாக வாழலாம், திருவண்ணாமலையில் சிவபெருமான் கிரிவல பாதையை சுற்றி அஷ்டதிக் பாலகர்களை உள்ளடக்கியவாறு சிவலிங்கமாக காட்சி தருகின்றார்.
No comments:
Post a Comment