Tuesday, 5 April 2016

மந்திரத்தால் எளிதில் பயன் அடையக்கூடிய எளிய வழிமுறைகள்

மந்திரத்தால் எளிதில் பயன் அடையக்கூடிய எளிய வழிமுறைகள்
நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர்.


ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான்.
மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எல்லாவற்றையும் பின்பற்ற இயலாது. ஒரு சில விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்
மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-
மந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.
மந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.
பால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
உணவில் தயிர் சேர்க்கக்கூடாது. தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.
உணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும். இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.
செபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.
ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.
மற்றொரு சங்கினை எடுத்து ஊத வேண்டும்.
மந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.
பால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
சங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.
12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.
பிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.
மந்திர செபம் முடிந்தவுடன் சங்கினை ஊதி மேற்கண்ட எலுமிச்சை பானத்தினை அருந்த வேண்டும்.
அதன் பின்னர் மற்றொரு சங்கில் வைத்த இளநீரினை பருக வேண்டும்.
வெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.
உயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.
கால சந்திகளில் செபம் செய்தல் மிகுந்த பலனை கொடுக்கும்

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer