Showing posts with label விநாயகர் திருக்கோயில். Show all posts
Showing posts with label விநாயகர் திருக்கோயில். Show all posts

Wednesday, 15 May 2019

விநாயகர் திருக்கோயில்


001.அருள்மிகு பால விநாயகர் திருக்கோயில் வடபழநி, சென்னை.

002. அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .

003. அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை- 642126 கோயம்புத்தூர் மாவட்டம்

004. அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், டெக்ஸ்டூல்(எல்.எம்.டபுள்யூ) எதிர்புறம், சத்தி ரோடு, கணபதி புதூர், கோயம்புத்தூர்- 641006.

005. அருள்மிகு பெரிய விநாயகர் திருக்கோயில், மதுக்கரை மார்க்கெட், கோயம்புத்தூர்-641105.

006. அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், புலியகுளம், கோவை - 45.

007. அருள்மிகு ஸ்ரீராஜகணபதி திருக்கோயில், தெப்பக்குளம் வீதி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்-642001.

008. அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், பொம்மணம்பாளையம், கோயம்புத்தூர்.

009. அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், ஜி.கே.எஸ்.நகர் (லட்சுமி நகர்), பொம்மனாம்பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.

010. அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில் சன் கார்டன், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 008.

011.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில், 62, தாமுநகர்புலியகுளம்,கோவை -641045

012.அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி- 641021. கோயம்புத்தூர்

013.அருள்மிகு ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில்,  மேகிணறுமேட்டுப்பாளையம் ரோடுஅன்னுõர் தாலுக்கா கோயம்புத்தூர். 641653

014. அருள்மிகு ஆபத் சகாய சுந்தர விநாயகர் திருக்கோயில்வடவள்ளிகோயம்புத்தூர்.

015.அருள்மிகு கம்பீரவிநாயகர் திருக்கோயில்குறிச்சி ஹவுசிங் யூனிட்-பேஸ்-1, சிட்கோ (போஸ்ட்), கோயம்புத்தூர்- 641021.




Monday, 25 February 2019

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில். ககோளம் – பூகோளம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.
ககோளம் – பூகோளம்.

மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் 1568 ஆம் வருட வானவியல் தொடர்பான ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.

ககோளம்:

சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஓவியத்தில்
அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி.
புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதிதிருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி
விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

பூகோளம்:
இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.

நமது முன்னோர்களின் நுண்ணிய அறிவாற்றலை இதன் மூலம் அறியலாம்.

Tuesday, 10 October 2017

அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில் சன் கார்டன், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 008.

அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில்





மூலவர் : யோகவிநாயகர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : -
  ஊர் : குனியமுத்தூர்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி
 
தல சிறப்பு:
 
  ஐயப்பனை போன்று யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் வலது முன்கையில் ருத்ராட்ச மாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்து அருட்காட்சி அளிப்பது சிறப்பு.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலை 12 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில் சன் கார்டன், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 008.
 
போன்:
 
  +91 422 2675 220, 94435 51511
 
பொது தகவல்:
 
  கோயிலின் நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மேற்குப் பக்கம் புற்றும், ராகுவின் திருமேனியும் உள்ளது. கோயில் உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் சுற்று தெய்வங்களாக காட்சி தருகின்றனர். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சங்கடஹர
சதுர்த்தி நாட்களில் சிறப்பு அர்ச்சனையும், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகளும் நடைகிறது.
 

பிரார்த்தனை
 
  குழந்தைப்பேறு, தடைபட்ட திருமணம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், யோகா, தியானத்தில் சிறந்து விளங்கவும் இங்குள்ள யோகவிநாயகரை வழிபடுகின்றனர்.
 
நேர்த்திக்கடன்:
 
  விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், புதுவஸ்திரம், கொலுக்கட்டை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  இத்தல விநாயகர், சபரிமலை ஐயப்பனைப்போல யோக நிலையில், யோக பட்டம் தரித்துக் கொண்டு இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு தன் நான்கு கரங்களில் பாசம், அக்ஷமாலை, யோகதண்டம், கரும்பு ஆகிய யோக அம்சங்களுடன் வேறெங்கும் காணமுடியாதபடி கோயில்கொண்டுள்ளார்.  யம, நியமம், ஆசனம், இரணாயாமம், பிர்தயாஹாரம், தாரணம், தியானம், அமைதி ஆகிய அஷ்டாங்க யோக லட்சனங்களோடு தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலித்துக் கொண்டிருப்பவர் தான் யோக விநாயகர். இந்த யோகவிநாயகரை தரிசிப்பதால் யோகம் எட்டும் உடனே கிட்டும். தினமும் கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றப்படுகிது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கின்றனர்.
 
 தல வரலாறு:
 
 
கோவை மாநகரின் பிரசித்தி பெற்ற தலங்களில் யோகவிநாயகர் தலமும் ஒன்று. பொதுவாக யோகவிநாயகர் என்ற திருநாமத்தில் கோயில்கள் தமிழ்நாட்டில் அதிகம் இல்லை எனலாம். கோவை குனியமுத்தூரில் யோகவிநாயகர் கோயில் கொண்டு அருளாட்சி புரிகின்றார். இப்பகுதியில் விநாயகர் கோயில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தவுடன் அரிதாக உள்ள விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய எண்ணினர். அதன்படி யோக விநாயகரை தேர்வு செய்து, அதற்கான விபரங்களை சேகரிக்கும் பொருட்டு ஆன்மீக அறிஞர்களையும், ஆதினங்களையும் சந்தித்தனர். அவர்களின் அறிவுரைப்படியும் சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் இச்சிலையை உருவாக்கினர்.





 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: ஐயப்பனை போன்று யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் வலது முன்கையில் ருத்ராட்ச மாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்து அருட்காட்சி அளிப்பது சிறப்பு. 

அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், ஜி.கே.எஸ்.நகர் (லட்சுமி நகர்), பொம்மனாம்பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.

அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில்





மூலவர் : லட்சுமி விநாயகர்
  உற்சவர் : விநாயகர்
  அம்மன்/தாயார் : துர்க்கை, நியானாட்சி அம்மன்
  தல விருட்சம் : அரசமரம்
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை :
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : பொம்மனாம்பாளையம்
  ஊர் : வடவள்ளி
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  விநாயகர் சதுர்த்தி, சனிபெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றனர்.
 
தல சிறப்பு:
 
  பழங்கால அரச மரத்தடி விநாயகர் என்பதால் சிற்பபுக்குரியவைகளில் ஒன்றாகும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், ஜி.கே.எஸ்.நகர் (லட்சுமி நகர்), பொம்மனாம்பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.
 
போன்:
 
  +91 94437 53812 , 94864 45687, 98946 27791
 
பொது தகவல்:
 
  கிழக்கு பார்த்த மூலவர் விநாயகர் இரண்டு, வடக்கு பார்த்த  அம்மன், தெற்கு பார்த்த கால பைரவர் அருள்பாலிக்கிறார்.
 

பிரார்த்தனை
 
  திருமண பாக்கியம், மற்றும் நினைத்த காரியங்கள் நடைபெற பிரார்த்திக்கின்றனர்.
 
நேர்த்திக்கடன்:
 
  அருகம்புல், மற்றும் அபிஷேக பொருட்கள் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  மூலவர் வலம்புரி விநாயகர். மற்றும் ஆதி கால அரசமரத்தடி விநாயகர் என இரண்டு விநாயகர் சிலைகள் இந்த கோயிலின் சிறப்பு. மேலும் நானாட்சி அம்மன்,  நாம்தேஸ்வரர் காணப்படுவது இந்த கோயிலில் தான் என்பது பெருமைமிக்கதாகும்.
 
 தல வரலாறு:
 
  ஜி.கே.எஸ்.நகர் உருவான நேரத்தில் இங்கு அரச மரத்தடி விநாயகரை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். ஆதி கால சிலையாக அரச மரத்தடி விநாயகரே வழிபட்டு வரப்பட்டார். பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கோயில் கட்ட முடிவு செய்தனர். நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றும் பலருக்கும்நிறைவேறியதையடுத்து 2004 ம் ஆண்டு பொதுமக்கள் அனைவராலும் சேர்ந்து கோவிலை பெரிதாக கட்டும் பணி துவங்கியது.துவக்கத்தில் ராகு, கேது சிலைகளுடன் நிறுவப்பட்ட கோயில் நாளடைவில் பெரிதாக கட்டப்பட்டு துர்க்கை, சனிஸ்வரன், நாம்தேஸ்வர், நானாட்சி அம்மன் உள்ளிட்ட சிலைகள் அமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் ஜீன் 23ல் நடைபெற்றது. இந்த கோயிலில் திருமணத்திற்க்காக வேண்டுபவர்களுக்கு சீக்கிரம் திருமண பாக்கியம் நிறைவேறுவதால் ஏராளமான பக்தர்கள் தற்போது இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: பழங்கால அரச மரத்தடி விநாயகர் என்பதால் சிற்பபுக்குரியவைகளில் ஒன்றாகும். 

அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், பொம்மணம்பாளையம், கோயம்புத்தூர்.

அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில்





மூலவர் : லட்சுமி விநாயகர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : அரசு, வேம்பு
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : சிவாகம முறைப்படி ஒரு கால பூஜை
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் :
  ஊர் : பொம்மணம்பாளையம்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  இங்கு சங்கடஹர சதுர்த்தி தேய்பிறை அஷ்டமி கிருத்திகை சஷ்டி பிரதோஷம் ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விநாயக சதுர்த்தி விழா வருடத்தின் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சம்பத்ரா அபிஷேகமும் (ஆண்டுவிழா) முக்கிய விழாவாகும்.
 
தல சிறப்பு:
 
 
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், பொம்மணம்பாளையம், கோயம்புத்தூர்.
 
 
பொது தகவல்:
 
  பக்தர்கள் கருவறையை சுற்றி வரும் வகையில் அமைப்பு உள்ளது. விநாயகப் பெருமான் சிலையின் பீடம் ஆகம விதிகளின்படி குறைந்த அளவு உயரத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. கருவறை நுழைவு வாயிலின் ஒருபுறம் நர்மதேஸ்வரர் மறுபுறம் ஞானாக்ஷ்சி அம்மன் வீற்றுள்ளனர். கோஷ்டத்தில் மேதா தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர். கோயிலின் வெளியே நவகிரஹ சன்னிதியும் காலபைரவர் சன்னிதியும் உள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள பலி பீடங்கள் உயரமான தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆதி மூலஸ்தானத்திலிருந்த விநாயகரை புதியதாகக் கட்டப்பெற்ற கோயிலுக்கு இடம் மாற்றியதால் அங்கு ஒரு புதிய சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு ராகுவும் கேதுவும் உடன் வீற்றுள்ளனர்.
 

பிரார்த்தனை
 
  லட்சுமி விநாயகராக அருள்பாலிப்பதால் சகல செல்வங்களையும் அள்ளி தருகிறார்.

 
நேர்த்திக்கடன்:
 
  விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.
 
தலபெருமை:
 
  சிலையை பாலாலய அறையிலிருந்து எடுத்து வந்தபோது மூன்று பேர் மட்டுமே தூக்கி வந்தனர். எங்கும் கீழே வைக்கவில்லை. முதலில் 8 பேர் சேர்ந்து தூக்க முடியாத சிலையை மூன்று பேர் மட்டும் இலகுவாக தூக்கி வந்தது அதிசயமே. தன் சொந்த இடத்தில் வந்து அமர்வதால் அவரே செய்த அற்புதம் போலும்.
 
 தல வரலாறு:
 
  கோவை வடவள்ளியிலிருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் பொம்மணம்பாளையம் எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் (ஜி.கே.எஸ்) நகர் எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் குடியேறியவர்கள் அங்கு சிறியமேடை அமைத்து விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். கூடவே அரசு வேம்பு மரங்களையும் நட்டுவைத்தனர். வருடங்கள் ஓடின குடியிருப்பு பகுதியில் குடியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அப்பகுதியில் ஒரு சிறிய அளவில் தொழில் செய்யும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வசித்து வந்தார். இவர் பல வகையான தொழில் செய்து நஷ்டமடைந்தார்.

சொந்த வீட்டையும் விற்றார். குடும்ப செலவை சமாளிப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இடிந்து போய் உட்காரவில்லை. எப்படியும் வாழ்வில் முன்னேறி விடலாம் என்ற தன்னம்பிக்கை இருந்தது. இந்நிலையில் மருத மலைக்குச் சென்று முருகன் முன் நின்றார். கண்ணீர் மல்க தன் நிலையை முறையிட்டு அவரைச் சரணடைந்தார். நாட்கள் நகர்ந்தன. புதியதாகத் தொடங்கிய வீடு கட்டி விற்கும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது. அதன் பின் மருதமலை முருகனின் அதிதீவிர பக்தர் ஆனார். தினமும் காலை மருத மலைக்குச் சென்று முதல் வணக்கம் செலுத்தி வேண்டி துதித்த பின் தான் தன் பணிகளைத் தொடரும் அளவிற்கு மாறி விட்டார். மருத மலையில் நீர்கசிவு போன்ற சிறு சிறு குறைபாடுகளைச் சீர் செய்து கொடுத்தார்.

எல்லாம் அவனே என்ற நிலைக்கு வந்து விட்டார். இந்நிலையில் அவருக்கு முருகனிடமிருந்து ஓர் உத்தரவு வந்தது, நான் இங்கு குளிர்ச்சியாக நல்ல வசதியுடன் மலைமீது இருக்கிறேன். அங்கு என் அண்ணன் விநாயகப்பெருமான் வெய்யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் துன்பத்தில் வீற்றிருக்கின்றார். அவருக்கு ஒரு நல்ல இருப்பிடத்தை அமைத்துக் கொடு என்றார். ஒரு கணம் அதிர்ந்து விட்டார். முருகன் குறிப்பிட்டது தன் குடியிருப்பில் உள்ள விநாயகப் பெருமானைத் தான் என்பதை உணர்ந்தார். முருகனே உத்தரவு போட்டு விட்டார். காலம் தாழ்த்த முடியுமா? தன் ஒருவனாலேயே கோயிலைக் கட்டி முடிக்கும் அளவிற்கு வசதியை அந்த மருதமலை முருகன் கொடுத்துள்ளார். பொது கோயில் என்றால் அனைவரது பங்களிப்பும் தேவை என்பதால் குடியிருப்பு வாசிகளைக் கலந்து முடிவு செய்தார். குடியிருப்பு வாசிகளின் பங்களிப்புடனும் ஒத்துழைப்புட

அருள்மிகு ஸ்ரீராஜகணபதி திருக்கோயில், தெப்பக்குளம் வீதி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்-642001.

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்





மூலவர் : ராஜகணபதி (சிவன், கிருஷ்ணன்)
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : அரச மரம்
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : சைவ முறைப்படி
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : பொழில்வாய்ச்சி என அழைக்கப்படும் பொள்ளாச்சி
  ஊர் : பொள்ளாச்சி
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  சங்கடஹரசதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி, விநா<யகர் சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை மற்றும் மார்கழி மாதம் 30 நாட்களும் பூஜை கொண்டாடப்படுகிறது.
 
தல சிறப்பு:
 
  -
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை. மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு ஸ்ரீராஜகணபதி திருக்கோயில், தெப்பக்குளம் வீதி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்-642001.
 
போன்:
 
  +91 95242 45384
 
பொது தகவல்:
 
  அரச மரத்தடியில் அமைந்துள்ள ராஜ கணபதி, இடது பக்கம் சிவன், வலது புறம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். மற்றபடி கோவில் மேற்கூரையிலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. இவை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன.

 

பிரார்த்தனை
 
  குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 
நேர்த்திக்கடன்:
 
  மனமிறங்கி வேண்டுபவர்களுக்கு இன்னல்களை நீக்கி அருள் கொடுக்க கூடியவர். பக்தர்கள் மனதில் வேண்டியது அனைத்தும் நன்றாக நடந்தால் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மனமுருகி வேண்டுபவர்கள், விபூதி மற்றும் மஞ்சள் அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கின்றனர். தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்யலாம். காரியங்கள் கை கூடியவர்கள் விநாயகப்பெருமானுக்கு வெள்ளி கவசம் வாங்கி தந்துள்ளனர். காரியம் நிறைவேறினால், தேங்காய் உடைத்து, அபிஷேகம், ஆராதனை செய்து வழிபடுகின்றனர்.
 
தலபெருமை:
 
  முழு முதற் கடவுளான விநாயகப்பெருமான் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சமாக உள்ளது. கிழக்கு முகம் பார்த்து அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சம்.
 
 தல வரலாறு:
 
  அரச மரத்தடியில் ஒரு சிறுவன் விநாயகப்பெருமான் சிலை இருப்பதை காண்பித்த பின் இக்கோயில் உருவாகியதாக கூறப்படுகிறது. துவக்கத்தில் கோயில் கட்டவில்லை; பின் கட்டப்பட்டது. 1986ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின், 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

   

அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், புலியகுளம், கோவை - 45.

அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்





மூலவர் : முந்தி விநாயகர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : அரசமரம்
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : -
  ஊர் : புலியகுளம்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 



திருவிழா:
 
  சங்கடஹர சதுர்த்தி,விநா<யகர் சதுர்த்தி. சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. சித்திரைக்கனி யன்று (தமிழ்ப் புத்தாண்டு 5டன் அளவு எடை உள்ள காய், கனிகளால் (பழங்கள்) செய்யப்படுகின்ற அலங்காரம் மிகவும் சிறப்புக்குரியதாகும்.அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைமுடிந்து அலங்காரம் கலைத்த பின்பு பயன்படுத்திய காய் கனிகளை பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புக் கொண்டாடப்படுகிறது. அன்று இராஜ அலங்காரத்தில் கம்பீரமாக அருள்தரும் அழகைக் காண கண்கோடி வேண்டும். நீண்ட தூரத்தில் இருந்தும் கூட இவரை வழிபடுகின்ற அமைப்பு ஒரு சிறப்பாகும்.
 
தல சிறப்பு:
 
  ஆசியாவின் மிகப்பெரிய இந்த விநாயகர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.விநாயகர் ,துதிக்கையில் அமிர்த கலசம், இடது காலில் மகாபத்மம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், புலியகுளம், கோவை - 45.
 
போன்:
 
  +91 422 2313822
 
பொது தகவல்:
 
  பக்தர்களின் பங்களிப்புடன் முந்தி விநாயகருக்கு முழுவதும் கற்களால் ஆன 5 நிலைக் கோபுரமும் முன் மண்டபமும் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது. இதற்கென அரசு திருப்பணி குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

 

பிரார்த்தனை
 
  சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவாகிய விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கின்றன. ராகு, கேது தோஷங்கள், நவகிரஹ தோஷங்கள் நிவர்த்திக்காக நவகோள்கள் கோவில் கொண்ட ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதை விட, கணங்களுக்கு எல்லாம் நாயகனாகத் திகழும் இம் முந்தி விநாயகனைத் தொழுது போற்றினால் எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகின்றன என முழுமையாக நம்புகின்றனர்.சக்தி வாய்ந்த விநாயகரின் திருஅருளால் தன்னை நாடிவந்த பக்தர்களின் வேண்டுதல், தடைபெற்ற திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார். இதன் காரணமாக பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் கூடி வருவதைக் காண முடிகிறது. முந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.
 
நேர்த்திக்கடன்:
 
  பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறியதும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்கின்றனர்.
 
தலபெருமை:
 
  விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன் கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் விநாயகக் கடவுள். அவரின் கிடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் கணபதி பெருமான். பிடியதன் உருவுமை கொளமிகு கரியது என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு விநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளதால் இவர் முன் நின்று தரிசிக்கும் போது ஓர் ஆண் யானையின் கம்பீரமான தோற்றம் பக்தர்களை பிரமிக்க வைக்கிறது. கரஸ்த்த கதலிசூத பனஸேக்ஷக மோதகம் பால சூர்ய பீரபாகாரம் வந்தே பால கணாதிபம் என்கிறது சிவாகம சாஸ்திரம் அரசமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் அருள் கடாக்ஷம் அதிகம். இடது திருவடியில் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரத்தைக் கொண்டுள்ளதால் நாடிவரும் பக்தர்களுக்

அருள்மிகு பெரிய விநாயகர் திருக்கோயில், மதுக்கரை மார்க்கெட், கோயம்புத்தூர்-641105.

அருள்மிகு பெரிய விநாயகர் திருக்கோயில்





மூலவர் : பெரிய விநாயகர்
  உற்சவர் : விநாயகர்
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : கிணற்று நீர் தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவாகம் முறைப்படி
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : மதுக்கரை மார்க்கெட்
  ஊர் : மதுக்கரை மார்க்கெட்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  தைப்பூசம், கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாதம் சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றன.
 
தல சிறப்பு:
 
 
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு பெரிய விநாயகர் திருக்கோயில், மதுக்கரை மார்க்கெட், கோயம்புத்தூர்-641105.
 
போன்:
 
  +91 98656 49778
 
பொது தகவல்:
 
  விநாயகர், சிவன், முருகன், அம்மன், நவகிரஹங்கள், கிழக்கு முகம் பார்த்து அமர்ந்துள்ளனர்.
 

பிரார்த்தனை
 
  உடல் ஆரோக்கியத்திற்கு, திருமணபாக்கியத்திற்கு, குழந்தை பாக்கியத்திற்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
 
நேர்த்திக்கடன்:
 
  விநாயகர், சிவனுக்கு அபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  இந்த ஊரில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் கிணற்றிலிருந்து தீர்த்தம் (நீர்) எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள்.
 
 தல வரலாறு:
 
  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள விநாயகரை வைத்து வழிபட்டு வந்தார்கள். ஆற்றங்கரை அமர்ந்திருந்ததால் சிறப்பாக இருந்தது. பிறகு 1997ம் ஆண்டு பொதுமக்கள் சேர்ந்து கோயிலை விரிவுபடுத்தி முருகன், அம்மன், மாணிக்க வாசகர் மற்றும் நவகோள் வைத்து கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு 2010ம் ஆண்டு இரண்டாம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

Monday, 9 October 2017

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், டெக்ஸ்டூல்(எல்.எம்.டபுள்யூ) எதிர்புறம், சத்தி ரோடு, கணபதி புதூர், கோயம்புத்தூர்- 641006.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்





மூலவர் : பிரசன்ன விநாயகர்
  உற்சவர் : பிரசன்ன விநாயகர்
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : -
  ஊர் : கணபதி புதூர்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  சிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்

சிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பிரசன்ன விநாயகர் மாலை,காட்சி விநாயகர் மாலை ஆகிய பாடல்களை இயற்றியுள்ளார்.
 
திருவிழா:
 
  விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம், சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிவெள்ளி, மார்கழிபூஜை, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தைப்பொங்கல், கார்த்திகை தீபம் விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
 
தல சிறப்பு:
 
  இங்கு பிரசன்ன விநாயகருக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், டெக்ஸ்டூல்(எல்.எம்.டபுள்யூ) எதிர்புறம், சத்தி ரோடு, கணபதி புதூர், கோயம்புத்தூர்- 641006.
 
போன்:
 
  +91 99449 47151
 
பொது தகவல்:
 
  பிரசன்ன விநாயகர், காட்சி விநாயகர், சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், விஷ்ணு துர்கை மற்றும் நவகிரகங்கள் ஆகிய தெய்வங்கள் உள்ளன.
 

பிரார்த்தனை
 
  இங்கு அமைந்துள்ள பிரசன்ன விநாயகரை வணங்கினால் திருமணம் கைகூடும், குழந்தை பேறு கிட்டும், தொழில் விருத்தி பெறும், கல்விவளம் செல்வ வளம் பெருகும், நினைத்த காரியம் தடங்கள் இல்லாமல் வெற்றி பெறும்.
 
நேர்த்திக்கடன்:
 
  அபிஷேக அலங்காரம் செய்தும், அன்னதானம் செய்தும், சிதரு தேங்காய் உடைத்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.
 
தலபெருமை:
 
  பக்தர்களின் நினைத்த காரியம் நிறைவெற்றும் சிறப்பு பெற்ற விநாயகப்பெருமான் திருத்தலம்.

 
 தல வரலாறு:
 
  இத்தலமானது 1937ம் ஆண்டு சிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களது அருளார்ந்த தலைமையில் நிறுவப்பட்டது. பிறகு கோயில் சேதமடைந்ததால் 2012ம் வருடம் திருப்பணி தொடங்கி 11.04.2016 அன்று தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பேரூர் ஆதினம் கயிலை குருமணி திருப்பெருந்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்களின் அருளார்ந்த ஆசிகளோடும், சிரவை ஆதினம் குருமகா சன்னிதானம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களது அருளார்ந்த தலைமையில், பேரூர் ஆதினம் இளையபட்டம் கயிலை புனிதர் தவத்திரு மருதாச்சல அடிகளார், தென்சேரிமலை திருநாவுக்கரசர் மடம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார், பேரூர் பச்சாபாளையம் பிள்ளையார் பீடம் தவத்திரு பொன்மணிவாசக அடிகளார் ஆகியோரது முன்னிலையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பிரசன்ன விநாயகருக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும். 

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை- 642126 கோயம்புத்தூர் மாவட்டம்

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்





மூலவர் : பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்)
  உற்சவர் : விநாயகர்
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : வன்னி , வில்வம், அரசு
  தீர்த்தம் : கிணற்றுநீர்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : -
  ஊர் : உடுமலைப்பேட்டை
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம்.
 
தல சிறப்பு:
 
  இங்கு விநாயகர் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி கோயில் கொண்டுள்ளார். திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை- 642126 கோயம்புத்தூர் மாவட்டம்
 
போன்:
 
  +91 - 4252 221 048
 
பொது தகவல்:
 
  இங்கு விநாயகர் ராஜகம்பீர கோலத்துடன், ஏகதளவிமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

அரைச் சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் "சக்கரபுரி' என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் "உடும்புமலை' என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்றழைக்கப்பட்டது.

 

பிரார்த்தனை
 
 
 அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் வேண்டிக்கொள்கின்றனர்..




 
நேர்த்திக்கடன்:
 
  பிரார்த்தனை நிறைவேறியதும் விநாயகருக்கு உகந்த கொழுக்கட்டை நைவேத்யம் படைத்து, பால் அபிஷேகம் செய்து சூரைத்தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  ராஜகம்பீர கோலம் : இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில் ராஜகம்பீர கோலத்தில் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூறையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம்,அரசு ஆகியன இங்குள்ளன. திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசிவிஸ்வநாதர், மூலவர் இடத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுர நாயகி உடனாய சவுரிராஜபெருமாள், அவருக்கு இடப்புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனியே சன்னதி கொண்டுள்ளனர். இவ்வாறு, இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. மாதக்கிருத்திகை தினத்தில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது இக்கோயிலின் சிறப்பு.

 
 தல வரலாறு:
 
  முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராஜ்யம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, "உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது.

 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு விநாயகர் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி கோயில் கொண்டுள்ளார். திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. 
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer