Tuesday 10 October 2017

அருள்மிகு ஸ்ரீராஜகணபதி திருக்கோயில், தெப்பக்குளம் வீதி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்-642001.

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்





மூலவர் : ராஜகணபதி (சிவன், கிருஷ்ணன்)
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : அரச மரம்
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : சைவ முறைப்படி
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : பொழில்வாய்ச்சி என அழைக்கப்படும் பொள்ளாச்சி
  ஊர் : பொள்ளாச்சி
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  சங்கடஹரசதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி, விநா<யகர் சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை மற்றும் மார்கழி மாதம் 30 நாட்களும் பூஜை கொண்டாடப்படுகிறது.
 
தல சிறப்பு:
 
  -
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை. மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு ஸ்ரீராஜகணபதி திருக்கோயில், தெப்பக்குளம் வீதி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்-642001.
 
போன்:
 
  +91 95242 45384
 
பொது தகவல்:
 
  அரச மரத்தடியில் அமைந்துள்ள ராஜ கணபதி, இடது பக்கம் சிவன், வலது புறம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். மற்றபடி கோவில் மேற்கூரையிலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. இவை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன.

 

பிரார்த்தனை
 
  குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 
நேர்த்திக்கடன்:
 
  மனமிறங்கி வேண்டுபவர்களுக்கு இன்னல்களை நீக்கி அருள் கொடுக்க கூடியவர். பக்தர்கள் மனதில் வேண்டியது அனைத்தும் நன்றாக நடந்தால் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மனமுருகி வேண்டுபவர்கள், விபூதி மற்றும் மஞ்சள் அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கின்றனர். தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்யலாம். காரியங்கள் கை கூடியவர்கள் விநாயகப்பெருமானுக்கு வெள்ளி கவசம் வாங்கி தந்துள்ளனர். காரியம் நிறைவேறினால், தேங்காய் உடைத்து, அபிஷேகம், ஆராதனை செய்து வழிபடுகின்றனர்.
 
தலபெருமை:
 
  முழு முதற் கடவுளான விநாயகப்பெருமான் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சமாக உள்ளது. கிழக்கு முகம் பார்த்து அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சம்.
 
 தல வரலாறு:
 
  அரச மரத்தடியில் ஒரு சிறுவன் விநாயகப்பெருமான் சிலை இருப்பதை காண்பித்த பின் இக்கோயில் உருவாகியதாக கூறப்படுகிறது. துவக்கத்தில் கோயில் கட்டவில்லை; பின் கட்டப்பட்டது. 1986ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின், 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

   

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer