கடவுளை நம்பினோர் கைவிடப்படார் !
நடந்த கதை:-
இந்தியா, பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்த காலம் அது!
உஜ்ஜையினி ஆகர் எனும் நகரில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகில் கண்டோன்மென்டில் பிரிட்டிஷ் படையினரின் வீடுகள் இருந்தன.
திடீரென இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் போர் மூண்டது பிரிட்டிஷார் இந்தியப் படைகளின் உதவியுடன் போரில் ஈடுபட்டனர் கண்டோன்மென்டில் இருந்த படைகளையும் சேர்த்து அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது அப்படைக்கு தலைமை தாங்கிச் சென்றார் லெப்டினன்ட் மார்ட்டின்.
போர்க்களத்தில் இருந்து அவ்வப் போது கணவரிடம் இருந்து கடிதங்கள் வந்ததால், சற்று ஆறுதலடைந்தாள் கண்டோன்மென்டில் தங்கியிருந்த அவர் மனைவி இந்நிலையில், திடீரென கடிதங்கள் வருவது நின்று போனது.
ஆப்கன் படைகள் வேகமாக முன்னேறுவதாகவும் அகப்பட்டவர்களை மிகவும் கொடூரமாக நடத்துவதாகவும் தகவல்கள் வந்தன இதனால் தன் கணவரை நினைத்து, துயரத்தில் ஆழ்ந்தாள் மார்ட்டின் மனைவி
ஒருநாள் அப்பெண் குதிரையிலேறி உலாவச் சென்ற போது வழியில் ஒரு சிவன் கோவிலை கண்டாள் ஏராளமானோர் உள்ளே போவதும் வழிபாடு முடிந்து வெளியில் வருவதுமாக இருந்தனர் அதைப் பார்த்த அப்பெண் குதிரையிலிருந்து இறங்கி கோவிலின் உள்ளே சென்றாள்
அங்கிருந்த பூசாரியிடம் ‘ இது என்ன கோவில்! என்றவள் பக்தர்கள் அங்கு பூஜையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து
‘நீங்கள் என்ன செய்கின்றனர்' என்று கேட்டாள் ‘ அம்மா இது சிவன் கோவில் பக்தர்கள் தங்கள் குறைகள் நீங்க வேண்டி சிவனுக்கு பூஜை செய்வர் சிவபெருமானும், அவர்கள் குறைகளை போக்குவார்! என்றார் பூசாரி
நான் பூஜை செய்தால் சுவாமி, என் குறைகளையும் நீக்குவாரா! என் கணவர் போர்முனைக்கு சென்றுள்ளார் அவர் பத்திரமாக திரும்ப வேண்டும் இக்கடவுள் என் கணவரை காப்பாற்றுவாரா! எனக் கேட்டாள் நமசிவாய மந்திரத்தை உச்சரித்து ஜெபம் செய்து சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் கண்டிப்பாக சிவபெருமான் உன் கணவரை காப்பாற்றுவார்! என்றார் பூசாரி
நம்பிக்கையுடன் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தாள் அப்பெண் வேத வல்லுனர்கள் 11 பேர், 11 நாட்கள் ருத்ராபிஷேகம் செய்தனர் தினமும் நீராடி முழு மனதோடு வழிபாட்டில் கலந்து கொண்டாள் மார்ட்டின் மனைவி.
நிறைவு நாளன்று வழிபாடு முடித்து, வீடு திரும்பிய போது ‘ அம்மா போர்க்களத்திலிருந்து கடிதம் வந்துள்ளது' என்று கூறி, கடிதத்தை கொடுத்தார் பணியாளர்
அதை வாங்கிப் பிரித்த மார்ட்டின் மனைவி கண்களில் நீர்ததும்ப ‘ இது என் கணவர் எழுதிய கடிதம் சிவபெருமானே உன் கருணையே கருணை! என கூவினாள் கடிதத்தில் ‘நான் நலமாக இருக்கிறேன்; கடந்த, 11 நாட்களாக பகைவர் எங்களை சுற்றி சூழ்ந்திருந்தனர் எதிரிகளின் கைகளில் சிக்கிக் கொல்லப்படும் சமயத்தில் யாரோ ஜடாமுடியுடன் இருந்த ஒரு துறவி கைகளில் சூலம் ஏந்தி வந்து என்னை காப்பாற்றினார் ஆபத்து சமயங்களில் அவர் அவ்வப்போது வந்து, என்னை பலமுறை காப்பாற்றினார் போர் முடிந்தது; வெற்றி பெற்று விட்டோம் விரைவில் வீடு திரும்புவேன்!’என எழுதியிருந்தது.
அதேபோன்று, சில நாட்களில் வீடு திரும்பிய லெப்டினன்ட் மார்ட்டினிடம் அவர் மனைவி நடந்ததையெல்லாம் விவரித்தார் இதைக் கேட்ட மார்ட்டினுக்கு மெய் சிலிர்த்தது போரில் தன்னை காப்பாற்றிய துறவி சிவபெருமான் தான் என்பதை உணர்ந்தார் உடனே மகாதேவன் கோவிலுக்கு சென்று அவரை மனமுருகி வழிபட்டார்.
அப்போது, ஆலயத்தின் ஒரு பகுதி சிதிலமாகியிருப்பதைக் கண்டு அதை சீர்படுத்தி கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தார் உஜ்ஜையினியில் ஆகர் எனும் நகருக்கருகில் இருக்கும் பைஜநாத் ஆலயம் எனப்படும் சிவன் கோவிலில் 1879 ல் இந்நிகழ்ச்சி நடந்தது.
ஓம் நமசிவாய ஓம்
நன்றி
அன்புடன்
நான்
No comments:
Post a Comment