Saturday, 7 October 2017

கோமாதாவின் சிறப்ப

கோமாதாவின் சிறப்பு
*இந்துக் கலாசாரத்தின் புனித சின்னமாக பசு கருதப்படுகின்றது. செல்வத்தைத் தரும் மகாலட்சுமியும் மற்றும் அனைத்து தேவதைகளும் பசுவின் உடலில் வசிப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.*
வேதங்களில் பசு மிகவும் புகழ்ந்து பேசப்படுகின்றது. மேலும் நமது முன்னோர், தன்னை ஈன்றெடுத்த தாயை மட்டுமல்லாது, தாய்ப்பால் இல்லாதபோது அதற்கு நிகரான தன் பாலைக் கொடுக்கின்ற பசுவையும் தாயாகப் பார்க்கும் மனோபாவத்தை வளர்த்தனர்.
இதனால்தான் இந்துக்கள் பசுவை புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். கோமாதா எனப் போற்றப்படும் பசுவிற்கு பூஜைகள் செய்வதன் மூலம் நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகம்
உலகை காக்கின்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் கோமாதாவின் (பசுவின் உடலில்) அடங்கி இருந்தாலும், கல்வி, செல்வம் போன்ற முக்கிய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய தெய்வங்கள் கோமாதாவின் திருவுருவில் எங்கெங்கு உள்ளனர் எனத் தெரிவிப்பதே வழக்கமாக இருக்கிறது. இதையே பல தெய்வங்களை உள்ளடக்கிய காமதேனு என்ற படத்தில் காண்கிறோம்.*
கோமாதாவின் உடற் பகுதியும், அங்கே அருளும் தெய்வங்களும்:
1. முகம் மத்தியில் சிவன்
2. வலக் கண் சூரியன்
3. இடக் கண் சந்திரன்
4. மூக்கு வலப்புறம் முருகன்
5. மூக்கு இடப்புறம் கணேசர்
6. காதுகள் அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம் ராகு
8. கழுத்து கீழ்புறம் கேது
9. கொண்டைப்பகுதி ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால் பைரவர்
12. முன் இடக்கால் ஹனுமார்
13. பின்னங்கால்கள் ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் – கீழ்ப்புறம் கங்கை
16. பிட்டம் – மேல்புறம் லக்ஷ்மி
17. முதுகுப்புறம் பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி
18. வயிற்றுப்பகுதி ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு வீமன்
22. இடக்கொம்பு இந்திரன்
23. முன்வலக்குளம்பு விந்தியமலை
24. முன்இடக்குளம்பு இமயமலை
25. பின் வலக்குளம்பு மந்திரமலை
26. பின் இடக்குளம்பு த்ரோணமலை
27. பால்மடி அமுதக்கடல்
கோமாதாவை தினமும் வழிபாடுபோலவே வாழ்க்கை ஆனந்தம் அடைவோம்

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer