Tuesday 10 October 2017

அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், ஜி.கே.எஸ்.நகர் (லட்சுமி நகர்), பொம்மனாம்பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.

அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில்





மூலவர் : லட்சுமி விநாயகர்
  உற்சவர் : விநாயகர்
  அம்மன்/தாயார் : துர்க்கை, நியானாட்சி அம்மன்
  தல விருட்சம் : அரசமரம்
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை :
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : பொம்மனாம்பாளையம்
  ஊர் : வடவள்ளி
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  விநாயகர் சதுர்த்தி, சனிபெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றனர்.
 
தல சிறப்பு:
 
  பழங்கால அரச மரத்தடி விநாயகர் என்பதால் சிற்பபுக்குரியவைகளில் ஒன்றாகும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், ஜி.கே.எஸ்.நகர் (லட்சுமி நகர்), பொம்மனாம்பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.
 
போன்:
 
  +91 94437 53812 , 94864 45687, 98946 27791
 
பொது தகவல்:
 
  கிழக்கு பார்த்த மூலவர் விநாயகர் இரண்டு, வடக்கு பார்த்த  அம்மன், தெற்கு பார்த்த கால பைரவர் அருள்பாலிக்கிறார்.
 

பிரார்த்தனை
 
  திருமண பாக்கியம், மற்றும் நினைத்த காரியங்கள் நடைபெற பிரார்த்திக்கின்றனர்.
 
நேர்த்திக்கடன்:
 
  அருகம்புல், மற்றும் அபிஷேக பொருட்கள் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  மூலவர் வலம்புரி விநாயகர். மற்றும் ஆதி கால அரசமரத்தடி விநாயகர் என இரண்டு விநாயகர் சிலைகள் இந்த கோயிலின் சிறப்பு. மேலும் நானாட்சி அம்மன்,  நாம்தேஸ்வரர் காணப்படுவது இந்த கோயிலில் தான் என்பது பெருமைமிக்கதாகும்.
 
 தல வரலாறு:
 
  ஜி.கே.எஸ்.நகர் உருவான நேரத்தில் இங்கு அரச மரத்தடி விநாயகரை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். ஆதி கால சிலையாக அரச மரத்தடி விநாயகரே வழிபட்டு வரப்பட்டார். பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கோயில் கட்ட முடிவு செய்தனர். நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றும் பலருக்கும்நிறைவேறியதையடுத்து 2004 ம் ஆண்டு பொதுமக்கள் அனைவராலும் சேர்ந்து கோவிலை பெரிதாக கட்டும் பணி துவங்கியது.துவக்கத்தில் ராகு, கேது சிலைகளுடன் நிறுவப்பட்ட கோயில் நாளடைவில் பெரிதாக கட்டப்பட்டு துர்க்கை, சனிஸ்வரன், நாம்தேஸ்வர், நானாட்சி அம்மன் உள்ளிட்ட சிலைகள் அமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் ஜீன் 23ல் நடைபெற்றது. இந்த கோயிலில் திருமணத்திற்க்காக வேண்டுபவர்களுக்கு சீக்கிரம் திருமண பாக்கியம் நிறைவேறுவதால் ஏராளமான பக்தர்கள் தற்போது இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: பழங்கால அரச மரத்தடி விநாயகர் என்பதால் சிற்பபுக்குரியவைகளில் ஒன்றாகும். 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer