பூர்விகம்:
ஆந்திரம்
அவதரித்தது:
திருவாரூரில் 4.5.1767 அன்று (சர்வஜித் வருடம்
சித்திரை மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை
பூச நட்சத்திரம்).
பெற்றோர்:
ராம பிரம்மம் சீதம்மா
உடன்பிறந்தோர்:
பஞ்சநாதம் என்கிற ஜல்பேசன் (மூத்தவர்)
இரண்டாவது மகன் ராமநாதன், சிறுவயதிலேயே
காலமானார். தியாகராஜர் மூன்றாவது மகன்.
குருநாதர்:
ஸொண்டி வெங்கடரமணய்யா.
சிஷ்யர்களில்
சிலர் திருவொற்றியூர் வினை குப்பையர், ஐயா
பாகவதர், வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர், மானம்புச்சாவடி வேங்கட சுப்பையர், தில்லை
ஸ்தானம் ராமையர், தஞ்சாவூர் ராமராவ், லால்குடி ராமையா, நெய்க்காப்பட்டி சுப்பையர்,
உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர
பாகவதர் மற்றும் கும்பகோணம் ஆராவமுது
ஐயங்கார்.
குடும்பம்:
மனைவி பார்வதி அம்மாள். ஐந்து
வருடங்கள் மட்டும் தியாகராஜருடன் வாழ்ந்து
இறைவனடி சேர்ந்தார். இவர்களுக்குக் குழந்தை இல்லை. அதன்பின்
பார்வதி அம்மாளின் தங்கை கமலாம்பாளை தியாகராஜருக்குத்
திருமணம் செய்து வைத்தனர். இவர்களின்
மகள் சீதாலட்சுமி. இவளை குப்புஸ்வாமி என்பவருக்குத்
திருமணம் செய்து வைத்தனர்.
குப்புஸ்வாமி-சீதாலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பெயர் தியாகராஜன். தியாகராஜனுக்கும் குருவம்மாள் என்கிற கன்னிகைக்கும் திருமணம்
நடந்தது. இவர்களுக்கு வாரிசு இல்லை. எனவே
தியாகராஜரின் நேர் வம்சத்தில் பிறந்தவர்கள்
எவரும் இப்போது இல்லை. அதேநேரம்
தியாகராஜரின் அண்ணன் ஜல்பேசனின் வம்சம்
இன்றுவரை தழைத்தோங்கி வருகிறது. ஜல்பேச பிரம்மம், சதாசிவ
பிரம்மம். ராமுடு பாகவதர், ஸ்ரீனிவாச
பாகவதர் ஆகியோரைத் தொடர்ந்து இந்த வம்சத்தில் ஐந்தாவது
தலைமுறையாகத் தற்போது இருக்கும் தியாகராஜ
சர்மா என்பவர் சமாதியின் பூஜைகளைக்
கவனித்து வருகிறார்.
தியாகராஜர்
சமாதியானது: 6.11.1847.
தியாகராஜ
ஸ்வாமிகள் - தகவல் பலகை
தலம் : திருவையாறு
மூலவர் : தியாகராஜ ஸ்வாமிகளின் சமாதி.
எங்கே இருக்கிறது: தஞ்சாவூரில் இருந்து சுமார் 13கி.மீ. தொலைவிலும் கும்பகோணத்தில்
இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவிலும்
உள்ளது திருவையாறு. திருவையாறு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் பத்து
நிமிட நடைதூரம்.
எப்படிச்
செல்வது: திருவையாறுக்கு தஞ்சாவூர். அரியலூர். கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து
பேருந்து வசதி உண்டு. கும்பகோணத்தில்
இருந்து சென்றால் திருவையாறு பேருந்து நிலையத்துக்கு முன்னாலேயே இறங்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து சென்றால் பேருந்து
நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தே
சென்று சமாதியை அடையலாம்.
No comments:
Post a Comment