பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஸ்ரீ ராதையின் பிரார்த்தனை : --
ஐயனே, நான் உம்மை முதன் முதலாகக் கண்டவுடனேயே, நீர் என் பிராணநாதர் எனவும், என் தெய்வம் எனவும் உணர்ந்தேன், எனது நிவேதனத்தை நீர் ஏற்றுக் கொள்வீராக.
என் சிந்தனைகள் எல்லாவற்றையும், என் உள்ள நெகிழ்ச்சிகள் எல்லாவற்றையும், என் இதய உணர்ச்சிகள் யாவற்றையும், என் உயிரின் இயங்கங்கள் யாவற்றையும், என் உடலின் அணுக்கள் ஒவ்வொன்றையும், என் உதிரத்தின் துளிகள் ஒவ்வொன்றையும் உமக்கே சமர்ப்பணம் செய்கிறேன்,
நான் முற்றிலும் உம்முடையவனே சம்பூரணமாக உமது உடைமையே, யாதொரு ஒளிவு மறையின்றி உம்முடையவனே. நான் எவ்வண்ணம் இருத்தல் வேண்டும் என்பது உமது திருவுள்ளமோ அவ்வண்ணமாகவே இருப்பேன்.
எனது வாழ்வையோ, சாவையோ, எனது சுகத்தையோ, துக்கத்தையோ, எனது இன்பத்தையோ, துன்பத்தையோ நீர் எனக்கு எதை அளிக்கத் திருவுள்ளம் கொண்டபோதிலும் உம்மிடமிருந்து வருவது யாதாயிருப்பினும் எல்லாவற்றையும் நான் வரவேற்கிறேன்.
நீர் எனக்கு அளிக்கும் ஒவ்வொன்றும் எனக்கு என்றும் இறைவனின் பேரின்பத்தைக் கூடவே கொண்டுவரும் தெய்வப் பிரசாதமாக விளங்கும்.
"ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருவடிகளே சரணம் "

No comments:
Post a Comment