Saturday 10 October 2015

நவராத்திரி கொலு டிப்ஸ்


நவராத்திரி கொலு டிப்ஸ்





நவராத்திரி கொலுவில் வைக்க, புத்தம் புதிய பொம்மைகள் தான் வேண்டும் என்ற அவசியமில்லை. நிறம் மங்கிய பழைய பொம்மைகளை ஏதேனும் ஒரு அடர்த்தியான கலரில் பெயிண்ட் அடித்து, புதுப்பித்து பயன்படுத்தலாம்.



* கொலுவில் சாம்பிராணியை சின்ன டப்பாக்களில் ஆங்காங்கே வைத்தால், பார்க்க நன்றாகவும் இருக்கும், நல்ல மணமாகவும் இருக்கும். எந்தப் பூச்சியும் கொலு வைத்திருக்கும் இடத்தை அண்டாது.



* நவராத்திரி கொலுவில் பூங்கா போன்று செட் போடும் போது, கீழே கனமான பிளாஸ்டிக் பேப்பரை போட்டு, அதன் மீது மண்ணை போட்டு பரப்பவும், மரத்தூளோடு, பச்சைக்கலரை கலந்து, அதை மண்ணில் தூவி விட்டால் புல்வேளி போல் பசுமையாக அழகாக இருக்கும்.



* தினமும் கொலுவுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை எல்லாம் முடிந்தவுடன் கொலுவுக்கு ஆரத்தி எடுத்து யார் காலும் படாத இடத்தில் செடியில் ஆரத்தி தண்ணீரை ஊற்றவும்.



* கொலுவுக்கு வருபவர்களுக்கு தினமும்  பிரசாதம் வழங்கலாம். சுண்டல், ஐஸ்க்ரீம், இனிப்பு, கார வகைகள், ஸ்டிக்கர் பொட்டு ஆகியவற்றை வழங்கினால் விருந்தினர்களும் சந்தோஷமாக செல்வார்கள்.



* கொலுவில் மலை அமைக்க, மண் கொட்டி கஷ்டப்பட வேண்டாம். மண்ணை கரைத்து ஊற்றி காய்ந்த பழைய துணியை நான்கு குச்சிகள் மீது வைத்தால் மலை போல் இருக்கும். தேவையான இடத்தில் மண்ணைத்தூவி கொள்ளலாம்.



* கொலுவுக்கு வரும் விருந்தினர்களுக்கு புது பொம்மைகளை தாம்பூலத்துடன் சேர்த்து வழங்கினால், பொம்மைகள் சேரும். விருந்தினர்களுடன் வரும் குழந்தைகளும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்வார்கள்.



* கோவிலில் சந்தனக் காப்பு செய்து, பூஜை முடிந்த பிறகு கலைத்த சந்தனத்தை பிள்ளையார் போல் செய்து கொலுவில் வைத்து வணங்கினால், திருமணமாகாத பெண்களுக்கு திருமண யோகம் கிட்டும்.




* முன்பெல்லாம் வீட்டில் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இருந்தால் மரப்பாச்சியில் ஆண், பெண் பொம்மைகள் செய்து அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள், கொலுவில் எப்போதும் இடம் பெறும் மரப்பாச்சியிலான பொம்மைகள் இடம் பெறுவது சிறப்பாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer