Monday 12 October 2015

சகல சௌபாக்கியங்களும் தரும் நவராத்திரி விரதம்

சகல சௌபாக்கியங்களும் தரும் நவராத்திரி விரதம்




ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்

காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்

சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.



புரட்டாசி மாதப் பிரதமை தொடங்கி நவமி வரை வரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாட்களும் பூஜித்து வழிபடும் போது, முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும்  வேண்டியும், அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாட்கள்  ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள்  என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.



புரட்டாசி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலம் என வரலாறு கூறுகிறது. உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.



இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன் வித்யாகாரகன் என்று அழைக்கப்படுகிறான். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய இந்த புதனின் பார்வை மிகவும் முக்கியமானது. எனவே தான் இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது மிகவும் சிறந்தது  என கருதுகின்றனர்..




நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பது தான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் முக்கிய தத்துவம் ஆகும். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சகல சொபாக்கியங்களும் கிடைப்பது உறுதி.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer