Monday, 9 October 2017

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை- 642126 கோயம்புத்தூர் மாவட்டம்

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்

மூலவர் : பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்)
  உற்சவர் : விநாயகர்
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : வன்னி , வில்வம், அரசு
  தீர்த்தம் : கிணற்றுநீர்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : -
  ஊர் : உடுமலைப்பேட்டை
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம்.
 
தல சிறப்பு:
 
  இங்கு விநாயகர் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி கோயில் கொண்டுள்ளார். திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை- 642126 கோயம்புத்தூர் மாவட்டம்
 
போன்:
 
  +91 - 4252 221 048
 
பொது தகவல்:
 
  இங்கு விநாயகர் ராஜகம்பீர கோலத்துடன், ஏகதளவிமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

அரைச் சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் "சக்கரபுரி' என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் "உடும்புமலை' என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்றழைக்கப்பட்டது.

 

பிரார்த்தனை
 
 
 அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் வேண்டிக்கொள்கின்றனர்..
 
நேர்த்திக்கடன்:
 
  பிரார்த்தனை நிறைவேறியதும் விநாயகருக்கு உகந்த கொழுக்கட்டை நைவேத்யம் படைத்து, பால் அபிஷேகம் செய்து சூரைத்தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  ராஜகம்பீர கோலம் : இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில் ராஜகம்பீர கோலத்தில் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூறையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம்,அரசு ஆகியன இங்குள்ளன. திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசிவிஸ்வநாதர், மூலவர் இடத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுர நாயகி உடனாய சவுரிராஜபெருமாள், அவருக்கு இடப்புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனியே சன்னதி கொண்டுள்ளனர். இவ்வாறு, இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. மாதக்கிருத்திகை தினத்தில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது இக்கோயிலின் சிறப்பு.

 
 தல வரலாறு:
 
  முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராஜ்யம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, "உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது.

 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு விநாயகர் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி கோயில் கொண்டுள்ளார். திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer