Saturday 11 November 2017

அருள்மிகு கம்பீரவிநாயகர் திருக்கோயில், குறிச்சி ஹவுசிங் யூனிட்-பேஸ்-1, சிட்கோ (போஸ்ட்), கோயம்புத்தூர்- 641021.

அருள்மிகு கம்பீரவிநாயகர் திருக்கோயில்




மூலவர்          :               கம்பீரவிநாயகர்
                உற்சவர்          :               கம்பீரவிநாயகர்
                அம்மன்/தாயார்      :               புவனேஸ்வரி அம்மன்
                தல விருட்சம்           :               அரசமரம்
                தீர்த்தம்           :               -
                ஆகமம்/பூஜை          :               -
                பழமை             :               500 வருடங்களுக்குள்
                புராண பெயர்              :               -
                ஊர்      :               கோயம்புத்தூர்
                மாவட்டம்    :               கோயம்புத்தூர்
                மாநிலம்         :               தமிழ்நாடு

                பாடியவர்கள்:           
                                 
                                 
                                 
                 திருவிழா:   
                                 
                விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், ஆடிவெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி பூஜை, மார்கழி பூஜை இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.     
                                 
                 தல சிறப்பு
                                 
                                               
  
                                 
                                 
                திறக்கும் நேரம்:     
                                 
                காலை 5.45 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.       
                                 
                முகவரி:        
                                 
                அருள்மிகு கம்பீரவிநாயகர் திருக்கோயில், குறிச்சி ஹவுசிங் யூனிட்-பேஸ்-1, சிட்கோ (போஸ்ட்), கோயம்புத்தூர்- 641021.          
                                 
                போன்:             
                                 
                +91 94424 12119              
                                 
                 பொது தகவல்:        
                                 
                இக்கோயில் ஆகமம் விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புவனேஸ்வரி அம்மன், துர்க்கை அம்மன் மற்றும், சிவன், தட்சிணாமூர்த்தி, முருகன், சரஸ்வதி, லெட்சுமி நாராயண சாமி, ஆஞ்சனேயர், கருடாழ்வார், நவகிரகம், சண்டிகேஸ்வரர், அரசமர விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளது.    
                                 

                பிரார்த்தனை            
                                 
                அனைத்துவிதமான பிரார்த்தனைகளும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.               
                                 
                நேர்த்திக்கடன்:       
                                 
                பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன், விநாயகருக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வணங்குகின்றனர்.     
                                 
                 தலபெருமை:          
                                 
                -             
                                 
                  தல வரலாறு:         
                                 
                சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்கள் தாங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் இருக்க விநாயகரை வழிபாடு செய்து வந்தனர். இதன் காரணமாக விநாயகருக்கு தனி கோயில் கட்ட நினைத்து விநாயகரை வைத்து பூஜையும் செய்து வந்தனர். பக்தர்களது கோரிக்கைகளை எல்லாம் விநாயகர் கம்பீரமாக இருந்து நடத்திக்கொடுத்ததால்,இத்தல விநாயகருக்கு கம்பீர விநாயகர் என திருநாமம் சூட்டி கோயில்கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.



No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer