Wednesday 29 November 2017

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில் சி.சாத்தமங்கலம், சிதம்பரம் கடலூர் மாவட்டம்.

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில்


மூலவர் : சாஸ்தா
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : பூரணை, புஷ்கலை
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை :
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : சாஸ்தாமங்கலம்
  ஊர் : சாத்தமங்கலம்
  மாவட்டம் : கடலூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  வைகாசி பிரமோற்ஸவம் எனப்படும் பத்து நாள் திருவிழா
 
தல சிறப்பு:
 
  சாஸ்தா கையில் சாட்டையுடன் இருப்பது சிறப்பு.மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு சாஸ்தா திருக்கோயில் சி.சாத்தமங்கலம், சிதம்பரம் கடலூர் மாவட்டம்.
 
 
பொது தகவல்:
 
  இங்குள்ள சாஸ்தாவிற்கு வாகனமாக யானை வாகனம் உள்ளது. இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும். மேலும் ஐயனார் கோயிலுக்கே உரிய விதத்தில் சுமார் பத்தடி உயரம் கொண்ட நான்கு குதிரைகள் சுதையால் செய்யப்பட்டுள்ளன.
 

பிரார்த்தனை
 
  கையில் சாட்டையுடன் உள்ள சாஸ்தாவை வணங்கினால் எதிரி பயம் நீங்கும் என்பதும், பூரணை புஷ்கலையுடன் உள்ள கல்யாண வரதர் எனப்படும் கல்யாண சாஸ்தாவை வணங்கினால் திருமண தடைகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.
 
நேர்த்திக்கடன்:
 
  இங்குள்ள சாஸ்தாவிற்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஹரிஹரபுத்திர சுவாமி சாஸ்தா மூலஸ்தானத்தில் இருபுறமும் இரண்டு அம்பாளுடன் (பூரணை, புஷ்கலை) கருங்கல் சிலா விக்ரகமாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார். மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. ஆண்டவன் என அனைவராலும் போற்றப்படும் சாஸ்தாவிற்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்ஸவம் எனப்படும் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து தினங்களும் காலையிலும் இரவிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஒன்பதாம் நாள் தேர் திருவிழாவும் பத்தாம் நாள் பகலில் அருகில் உள்ள வெள்ளாற்றில் தீர்த்தவாரியும் இரவு பூரணை புஷ்கலையுடன் திருக்கல்யாணமும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் புஷ்ப பல்லக்கு நடைபெறும். அன்று பல ஊர்களில் இருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வந்து சாஸ்தாவிற்கு நாதஸ்வர இசை அஞ்சலி செலுத்துவர்.
 
 தல வரலாறு:
 
  ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு திருடர்களால் மிகவும் தொந்தரவு ஏற்பட்டு வந்தது. இதனால் வருந்திய மக்கள் காவல் தெய்வமான சாஸ்தாவை வழிபட விரும்பினர். இதன் அடிப்படையில் இங்கு பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு திருடர்களின் தொந்தரவு நீங்கி நிம்மதி ஏற்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் திருடர்கள் நுழைந்து பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரின் ஐம்பொன்சிலைகளை திருடி சென்று விட்டனர். பின்னர் ஹரிஹரபுத்திரரின் அருளால் அவர்களே இச்சிலைகளை இங்கு கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விட்டனர். கையில் சாட்டையுடன் உள்ள இந்த சாஸ்தாவை வணங்கினால் திருடர்கள் மற்றும் எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது நம்பிக்கை.
 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer