Wednesday, 11 September 2019

சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் #பலன்கள்!

#சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும்
#பலன்கள்!

1. சாளக்கிராம பூஜை #செய்பவன் #சித்தம் #சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் #விஷ்ணுவாகவே #ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
#கொலை செய்தவனின் #பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல #பாபங்கள்_கழன்று_ஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் #திடீரென பூஜை செய்ய #நேர்ந்தாலும்_முக்தி_உண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு #எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் #இப்பூஜையினை_செய்பவர்கள்
#விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம் #வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை #பக்தியுடன்_நமஸ்கரித்தவன் #தேவனாகிறான்...!
#அவன் சாதாரண #மனிதன் #அல்லன்...!

9. #சாளக்கிராமம்- பகவான் #இருக்குமிடம்.
#சர்வ பாபங்களையும்
#நாசம்_செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட சாளக்கிராம பூஜையினால் #பரகதி அடைகிறார்கள். #பக்தியோடு செய்பவர்கள் #முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி உண்டாவதுபோல, #சாளக்கிராமத்தில் #ஹரி இருக்கின்றார். #லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட  ஹரி சாளக்கிராமத்தில் மிகவும் #பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால் #அக்னிஹோத்தரமும் #பூதானமும் செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
#ஒரு நாள் சாளக்கிராமத்தை #பூஜை செய்த பலனுக்கு #ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் #பூஜை செய்தபலன்
#ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட சாளக்கிராம பூஜையினால் #முக்திபெறுவான்.

16.#தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே #சாளக்கிராம பூஜையினால் #முக்தியடைவான்.

17. #சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் #சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்துகொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் #விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும்,
#சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.

21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..! சாளக்கிராம தீர்த்தமே #போதுமே நம் #உள்ளும் #புறமும் #சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவாநிலை கிடைத்துவிடும்.

#ஸ்ரீராமஜயம்

Tuesday, 10 September 2019

சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்

*சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்*

பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும்.

ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும்.

எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.

அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.

எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான்.

அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.

சக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.

மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.

கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.

அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம்.

ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும்.

வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.

Wednesday, 15 May 2019

விநாயகர் திருக்கோயில்


001.அருள்மிகு பால விநாயகர் திருக்கோயில் வடபழநி, சென்னை.

002. அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .

003. அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை- 642126 கோயம்புத்தூர் மாவட்டம்

004. அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், டெக்ஸ்டூல்(எல்.எம்.டபுள்யூ) எதிர்புறம், சத்தி ரோடு, கணபதி புதூர், கோயம்புத்தூர்- 641006.

005. அருள்மிகு பெரிய விநாயகர் திருக்கோயில், மதுக்கரை மார்க்கெட், கோயம்புத்தூர்-641105.

006. அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், புலியகுளம், கோவை - 45.

007. அருள்மிகு ஸ்ரீராஜகணபதி திருக்கோயில், தெப்பக்குளம் வீதி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்-642001.

008. அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், பொம்மணம்பாளையம், கோயம்புத்தூர்.

009. அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், ஜி.கே.எஸ்.நகர் (லட்சுமி நகர்), பொம்மனாம்பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.

010. அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில் சன் கார்டன், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 008.

011.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில், 62, தாமுநகர்புலியகுளம்,கோவை -641045

012.அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி- 641021. கோயம்புத்தூர்

013.அருள்மிகு ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில்,  மேகிணறுமேட்டுப்பாளையம் ரோடுஅன்னுõர் தாலுக்கா கோயம்புத்தூர். 641653

014. அருள்மிகு ஆபத் சகாய சுந்தர விநாயகர் திருக்கோயில்வடவள்ளிகோயம்புத்தூர்.

015.அருள்மிகு கம்பீரவிநாயகர் திருக்கோயில்குறிச்சி ஹவுசிங் யூனிட்-பேஸ்-1, சிட்கோ (போஸ்ட்), கோயம்புத்தூர்- 641021.




Wednesday, 3 April 2019

12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்... ஏன் எதற்காக?

12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்... ஏன் எதற்காக?
கோவில், கோபுரம், கலசம்!


🙏 நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஊரில் உள்ள கோவில் கோபுரங்களை விட உயரமாக வேறு எந்த கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது.

என்ன காரணம்?

🙏 கோவில் கோபுரங்கள் உயரமாகவும், அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் கலசங்களையும் பார்த்திருக்கிறோம். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மீக உண்மையை அறிவியலின் துணையுடன் என்ன என்று இப்போதுதான் தெரிகிறது.

🙏 கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் கலசங்கள் தங்கம், வெள்ளி செம்பு(அ)ஐம்பொன்னால் செய்யப்பட்டு இருக்கும். மேலும், கலசங்களில் தானியங்களும் கொட்டப்படும்.

🙏 இந்த கலசங்களிலும், அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்காச்சோளம், எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால், வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

🙏 இன்றைக்கு கடைபிடிக்கப்பட்டு வரும் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுவது வெறும் சம்பிரதாயமாக மட்டுமே நடக்கிறது.

🙏 காரணம் என்னவென்றால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறதாம். அதன்பின் அது செயல் இழந்துவிடுகிறதாம்.

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்?

🙏 இதை அறிந்து கொண்ட விஷயம் ஆச்சர்யம்தான். இன்றைக்கு திடீரென்று 3 அல்லது 4 நாட்கள் மழைப் பெய்வதைப் போன்று அந்த காலகட்டத்தில் தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

🙏 ஒரு இடத்தில் எது மிக உயரமாக உள்ள இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்" ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள் ஆகும். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

🙏 சில கோவில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் பல மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுகின்றனர். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன என்பது நாம் அறியப்படாத உண்மைகள்.

Monday, 1 April 2019

கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் தெரியுமா?​

கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் தெரியுமா?​


கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. கவசம் என்றால் நம்மைக்காப்பாற்றக்கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக்காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளை குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இந்த எல்லா தோஷத்தைப்போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப்பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச்சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக்காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை
ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை உடம்பில் தான் எத்தனை பாகங்கள் காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்கு புனிதவேல், கண்ணிற்கு கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனியவேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,

இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மை காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.
 சர்வமும் சிவமயம்
ஓம் வெற்றிவேல் முருகா....

கந்தர் ஷஷ்டி கவசம் பாடலுக்கு இங்கு கிளிக் செய்யவும் 


Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer