Tuesday 24 February 2015

சனி கவசம்


சனி கவசம்



கரு நிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும்
ஒருபெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன் ஆதரித் தெம்மைக் காப்பாய்.
பொருளோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய். ----------1

ஏழரைச் சனியாய் வந்தும், எட்டினில் இடம் பிடித்தும்,
கோளாறு நான்கில் தந்தும், கொண்டதோர் கண்டகத்தில்
ஏழினில் நின்ற போதும், இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலத்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்! ---------2

பன்னிரு ராசிகட்கும் பாரினில் நன்மை கிட்ட,
எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறி வழிகள் காட்ட,
எண்ணெயில் குளிக்கும் நல்ல ஈசனே உன்னைத் துதித்தேன்
புண்ணியம் எனக்குத் தந்தே புகழ்கூட்ட வேண்டும் நீயே! ----------3

கருப்பினில் ஆடை ஏற்றாய்! காகத்தில் ஏறி நின்றாய் !
இரும்பின் உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்சசி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே! -----------4

சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம், பூசம், ஆன்றதோர் உத்ரட்டாதி,
இனிதே உன் விண்மீனாகும் எழில்நீலா மனைவி யாவாள்
பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்பதென்று சொல்வார். ----------5

குளிகனை மகனாய்ப் பெற்றாய்! குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்துப் பிடித்துக் கொள்வாய்! விநாயகர், அனுமன் தன்னை தொழுதாலோ விலகிச்செல்வாய் துணையாகி அருளைத் தாராய். ----------6

அன்ன தானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தே மன்னர்போல் வழ்வதற்கே மணியான வழிவகுப்பாய். ----------7

மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே சனி என்றும் எங்கள் ஈசா!
வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு!

எந்த நாள் வந்தபோதும் இனிய நாள் ஆக மாற்று! ---------8

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer