Tuesday 24 February 2015

அருள்மிகு ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில்

அருள்மிகு ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில்




                மூலவர்          :               ஸ்ரீ நிவாசன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார்.
                உற்சவர்          :               ஸ்ரீ தேவர் பிரான்
                அம்மன்/தாயார்      :               அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்.
                தல விருட்சம்           :               -
                தீர்த்தம்           :               தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம்.
                ஆகமம்/பூஜை          :               -
                பழமை             :               1000-2000 வருடங்களுக்கு முன்
                புராண பெயர்              :               -
                ஊர்      :               தொலைவிலிமங்கலம்
                மாவட்டம்    :               தூத்துக்குடி
                மாநிலம்         :               தமிழ்நாடு

                பாடியவர்கள்:           
                                 
                மங்களாசாசனம்

நம்மாழ்வார்

துவளில் மாமணிமாட மோங்குந் தொலைவில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னை மீர் உமக்காசையில்லை விடுமினோ தவளவொன் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கனென்றும் குவளையொண் மலர்கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமோ

-நம்மாழ்வார்              
                                 
                 திருவிழா:   
                                 
                வைகுண்ட ஏகாதசி               
                                 
                 தல சிறப்பு:
                                 
                பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 85 வது திவ்ய தேசம்.நவதிருப்பதிகளில் இது 8வது திருப்பதியாகும், இரட்டைத் திருப்பதியில் 1வது திருப்பதி நவக்கிரகங்களில் இது ராகு தலம்.         
                                 
                திறக்கும் நேரம்:     
                                 
                காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை5 மணி வரை திறந்திருக்கும்.       
                                 
                முகவரி:        
                                 
                அருள்மிகு ஸ்ரீ நிவாஸன் திருக்கோயில், நவதிருப்பதி (இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம்- 628 752 தூத்துக்குடி மாவட்டம்.              
                                 
                போன்:             
                                 
                +91 4639 273 607             
                                 
                 பொது தகவல்:        
                                 
                இத்தலத்தில் பெருமாள் குப்த விமானத்தில் கீழ் அருள்பாலிக்கிறார்.                 
                                 

                பிரார்த்தனை            
                                 
                திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
                                 
                நேர்த்திக்கடன்:       
                                 
                பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.   
                                 
                 தலபெருமை:          
                                 
                சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி.                 
                                 
                  தல வரலாறு:         
                                 
                தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.         




01 02 03 04 05 06 07 08 09 
               


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer