கன்னி:
(உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) எல்லா
நாளும் புத்தாண்டு தான்! (80/100)
பாசத்துடன்
பழகி மகிழும் கன்னி ராசி
அன்பர்களே!
குரு ராசிக்கு 11ம் இடத்தில் இருக்கிறார்.
இதனால் பொருளாதார வளம் மேம்படும்.தொழில்
சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும்.
குருவின் 7, 9-ம் பார்வைகள் சாதகமாக
இருப்பதால் ஆண்டு
முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். குரு ஜூலை5ல்
சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பின், விடாமுயற்சி
தேவைப்படும். மன சோர்வுக்கு ஆளாகலாம்.
அலைச்சல் அதிகரிக்கும். அதன் பிறகு டிச. 20ல் அதிசாரமாக(முன்னோக்கி) உங்கள் ராசிக்குப் பெயர்ச்சி
அடைகிறார். ராகு, ராசியிலேயே இருக்கிறார்.
உறவினர்களுடன்
கருத்து வேறுபாடு உருவாகலாம். கேது தற்போது மீனத்தில்
இருப்பதால் அலைச்சல், அக்கம் பக்கத்தினரால் தொல்லை
ஏற்படலாம். ராகு 2016 ஜன. 8ல் சிம்ம
ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவரால் வெளியூர் பயணம்
ஏற்படும். கேது
கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவரால் பொருளாதார வளம்
அதிகரிக்கும். சனி
3-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை.
முயற்சி அனைத்தையும் வெற்றி அடைய செய்வார்.
பொருளாதாரம் பன்மடங்கு உயரும். தொழிலில் சிறப்பான
வளர்ச்சியை உருவாக்குவார். விருச்சிக ராசியில் இருக்கும் சனி செப். 5 வரை
வக்கிரத்தில் சிக்கி உள்ளார். இந்த
காலத்தில் அவரால் நன்மை தர
இயலாது.டிசம்பர் வரை, குடும்பத்தில் மகிழ்ச்சி
நிலைக்கும். கணவன்- மனைவி இடையே
அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி விமரிசையாக
நடந்தேறும். மனதிற்குப் பிடித்த நல்ல வரனாகவும்
அமையும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் அடைவர்.
உறவினர்களால் நன்மை கிடைக்கும். புதிய
வீடு கட்ட வாய்ப்புண்டாகும் அல்லது
தற்போது உள்ளதை விட வசதியான
வீட்டுக்கு குடி புகுவர். வாகன
யோகம் அமையும். பணியாளர்கள் நன்மையை எதிர்பார்க்கலாம். வேலையில்
ஆர்வம் பிறக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக
ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். பதவி உயர்வும் கிடைக்கும்.
சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
வேலை இன்றி இருப்பவர்களுக்கு நல்ல
வேலை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வருமானம் அதிகரிக்கும். பகைவர்கள் சரணடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
திறமை மேம்படும். டிசம்பருக்கு பிறகு, புதிய வியாபாரத்தை
ஆரம்பிக்கலாம். அரசின் உதவி கிட்டும்.
வேலை இன்றி இருப்பர்களுக்கு நல்ல
சம்பளத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்கள்
விருது பெற்று மகிழ்வர். அரசியல்வாதிகள்
நற்பெயர் காண்பர். எதிர்பார்த்த பதவி விரைவில் கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். சிலர்
வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு
கிடைக்கும். விவசாயிகள் நவீன முறையைக் கையாண்டு
கூடுதல் மகசூல் பெறுவர். புதிய
சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு
விவகாரம் சாதகமாக அமையும். கைத்தொழிலில்
ஈடுபடுபவர்கள், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எழுத்தாளர், பத்திரிகையாளர் நல்ல முன்னேற்றம் காணலாம்.
பெண்கள் முன்னேற்றம் அடைவர். பிறந்த வீட்டில்
இருந்து வெகுமதி கிடைக்கும். ஆடம்பர
பொருள் வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர்.
2016 ஜனவரி முதல் பணப் புழக்கத்துக்கு
குறைவிருக்காது. சமூகத்தில் கவுரவத்துடன் செயல்படுவீர்கள். விருந்து, விழா என சென்று
மகிழ்வீர்கள். கணவன், மனைவி இடையே
கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், உங்கள் அணுகுமுறையால் விரைவில்
மறைந்து விடும். சிலர் சுபச்
செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம்.
பணியாளர்கள்
பணிச்சுமையைச் சந்தித்தாலும், அதற்கான ஆதாயத்தைப் பெறுவர். வியாபாரிகள்
வெளியூர்ப்பயணம் மூலம் ஆதாயம் அடைவர்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகள்
சீரான வளர்ச்சி காண்பர்.
விவசாயிகள்
உழைப்புக்கு ஏற்ற வருமானம்
காண்பர்.
மாணவர்கள்
ஆர்வமுடன் படித்து முன்னேறுவர்.
பெண்கள்
ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.
பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
பரிகாரம்:
ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோயிலுக்குச்
செல்லுங்கள். துர்க்கைக்கு
எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள்.
ராகு காலத்தில், பைரவருக்கு தயிர் சாதம் படைத்து
வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.
No comments:
Post a Comment