Friday, 10 April 2015

தமிழ் புத்தாண்டு ராசிபலன் மீனம்:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2015 முதல் 13.4.2016 வரை)

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மாலை சூடும் மணநாள் வந்தாச்சு! (70/100)


நிதானமுடன் பணியாற்றும் மீன ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 5ல் இருக்கிறார். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் பெருகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திட்ட மிட்டபடி வீட்டில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். குருவின் பார்வையாலும் நன்மை உண்டாகும். குரு ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரால் உடல்நலம் பாதிக்கப்படலாம்அதன் பிறகு  டிச. 20ல் கன்னி ராசிக்கு அதிசாரமாக(முன்னோக்கி) பெயர்ச்சிஅடைகிறார். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். பணியாளர்கள் பணியில் உயர்வு நிலை காண்பர். ராகு 7-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் வீண் அலைச்சல் உண்டாகும். கேது உங்கள் ராசியில் இருப்பதால், பகைவர் தொல்லை அதிகரிக்கும்.  2016 ஜன. 8ல் ராகு சிம்மத்திற்கும், கேது கும்பத்திற்கும் பெயர்ச்சி அடைகின்றனர். ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். சனி 9-ம் இடத்தில் இருப்பதால் எதிரியால் பிரச்னை உண்டாகும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். சனி சாதகமற்று இருந்தாலும், அவரது பார்வை பலம் சிறப்பாக உள்ளது. 3,7,10 என்னும் மூன்று பார்வைகளும் நன்மையளிக்கும். செப். 5 வரை வக்கிரத்தில் சிக்கி உள்ளதால்,கெடுபலன் தர மாட்டார். மாறாக நன்மை தருவார்.ஜூலை5 முதல், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். வாகனம் வாங்க யோகம் உண்டாகும். உறவினர் வகையில் இணக்கமான போக்கு ஏற்படும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு. பெரியோர்களின் வழிகாட்டுதலால் நன்மை பெறுவீர்கள்.

பணியாளர்கள் தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். போலீஸ், பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தி லாபத்தை பெருக்குவர். சனியால் பணிச்சுமை அதிகமானாலும், அதற்கான ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைஞர்கள் நல்ல புகழும், பெருமையும் பெறுவர். மாணவர்கள் தேக்க நிலை மாறி ஆர்வமுடன் படிப்பர். சிலர் அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு பெறுவர். விவசாயிகளுக்கு கால்நடை செல்வம் பெருகும். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினர் ஆதரவால் சந்தோஷம் காண்பர். அக்கம் பக்கத்தினர் நட்பு பாராட்டுவர். ஜூலை 5க்கு பிறகு வருமானம் இருந்தாலும், செலவும் கூடும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணியாளர்கள் பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே இருக்கும். திடீர் இடமாற்றம் ஏற்படலாம். மாணவர்கள் நட்பு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் பிள்ளைகளின்  நலனில் அக்கறை கொள்வர். 2016 ஜனவரி முதல், குடும்பம் வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள்பணியாளர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு அதிக சம்பளத்தில் புதிய வேலை  கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

அரசு வகையில் உதவி கிடைக்கும். கலைஞர்கள் பாராட்டு கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். கை விட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் தற்போது நிறைவேறும்.

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயரையும், சாஸ்தாவையும் வழிபடுங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காளிக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வாருங்கள். பவுர்ணமியன்று சித்திரகுப்தரை வணங்குங்கள்.ஜூனுக்குப் பிறகு வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer