விருச்சிகம்:
(விசாகம் 4, அனுஷம், கேட்டை) மலைபோல்
உயர்த்தும் மன்மத ஆண்டு! (75/100)
எதையும்
சாதிக்கும் திறனுள்ள விருச்சிக ராசி அன்பர்களே!
வருட ஆரம்பத்தில் குரு 9-ம் இடத்தில்
இருக்கிறார். இது மிகச்சிறப்பான இடம்.
மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக
செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும். குருபகவான்
ஜூலை5ல், சிம்ம ராசிக்கு
பெயர்ச்சி அடைகிறார். அப்போது தற்போதுள்ள பலன்களின்
அளவு குறையும். டிசம்பர் 20ல் கன்னி ராசிக்கு
அதிசாரம் (முன்னோக்கி செல்லுதல்) ஆகும். குருவால், பொருளாதார
வளம் மேம்படும். பணியிடத்தில் சிறப்பான நிலை அமையும். ராகு தற்போது 11-ம்
இடமான கன்னியில் இருப்பது சிறப்பான இடம். பொன், பொருள்
கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். கேது மீனத்தில் இருக்கிறார்.
அவரால் கடும் போட்டியைச் சந்திக்கலாம். ராகு
2016 ஜனவரி 8ல், சிம்ம ராசிக்கு
பெயர்ச்சி அடைகிறார். அவரால் சிலரது பொல்லாப்பை
சந்திக்க நேரிடலாம். கேது அதே தேதியில்
கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த இடம் அவ்வளவு
சிறப்பானதல்ல, பயணத்தின் போது கவனம் தேவை.
இது ஏழரை காலம் என்பதால்,
உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம்.
ஆனால், சனியின் 3-ம் இடத்துப் பார்வையால் செயல்களில்
வெற்றியும், பொருளாதார வளமும் ஏற்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் இருக்கும்.
விருச்சிக ராசியில் இருக்கும் சனி, செப். 5 வரை
வக்கிரத்தில் சிக்கி உள்ளார். அப்போது
கெடுபலன்களைத் தரமாட்டார். டிசம்பர் வரை தேவைகள் பூர்த்தி
ஆகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அக்கம்பக்கத்தார்
உங்களை பெருமையாக பேசுவார்கள். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்பட்டாலும்,
கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிற்சில ஊடல்கள் வந்து
மறையும். விருந்து, விழா என சென்று
வருவீர்கள். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.
ஜூலை5க்கு பிறகு குடும்பத்தில்
விட்டுக் கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள்
தாமதமாகலாம்.
பணியாளர்களுக்கு
மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர்
இடமாற்றம் காண்பார்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக
இருப்பர். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.வியாபாரம் எதிலும் அதிக முதலீடு
போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும்.
அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம்
கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இருக்கத்தான் செய்யும்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். சிலர் அரசிடம் இருந்து
விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு
அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும். பொது
மக்களிடம் செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு கூடுதல்
மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்புண்டு. சிலர் வெளிநாடு சென்று
படிக்க வாய்ப்பு பெறலாம். விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற
வகைகளில் அதிக மகசூல்
கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக
இருக்கும். பெண்களுக்கு அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.கணவரின் அன்பு கிடைக்கும்.
பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
2016 ஜனவரி முதல் பொருளாதார
வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும்
சிறப்பாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
உங்கள் மீதான அவப்பெயர் மறையும்.
குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும்.திருமணம்
போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வாகனம் வாங்கலாம்.
பணியிடத்தில் கடந்த காலத்தில் இருந்த
பிற்போக்கான நிலை மறையும். சிலர்
அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். வரும் லாபத்தை கவனமாகப்
பாதுகாக்க வேண்டும். குடும்ப பிரச்னையை தொழிலில்
காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். புதிய
தொழிலை தவிர்க்கவும். கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவர்.
அரசியல்வாதிகளுக்கு
உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
மாணவர்கள்
இந்த கல்வி ஆண்டில் சிறப்பான
முன்னேற்றம் காண்பர்.
விவசாயத்தில்
நல்ல வளம் காணலாம். நெல்,
கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில்
சிறப்பான மகசூல் கிடைக்கும்.
பெண்களுக்கு
பிறந்த வீடு மற்றும் உறவினர்கள்
வகையில் இருந்த பிரச்னை மறையும்.
பரிகாரம்:
சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் மற்றும் முருகன் வழிபாடு
உறுதுணையாக இருக்கும். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால
பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்.
No comments:
Post a Comment