திருப்பாணாழ்வார்
பயோடேட்டா
பிறந்த இடம் :
உறையூர் (திருச்சி)
பிறந்த காலம்
: எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம்.
நட்சத்திரம் :
ரோகிணி (வளர்பிறைதுவிதியை திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் :
அமலனாதிபிரான்
பாடிய பாடல் :
10
சிறப்பு : திருமாலின்
ஸ்ரீவத்சத்தின் அம்சம்
இவர் தினமும் கையில் வீணையேந்தி காவிரியாற்றின் தென்கரைக்கு செல்வார்.
அங்கிருந்தபடியே ஸ்ரீரங்கப்பெருமாளை நோக்கி பாடுவார். ஒருமுறை இப்படி பெருமாளை நோக்கி
பாடிக்கொண்டிருக்கும் போது சாரங்கமுனி என்பவர்
பெருமாளை நீராட்ட பொற்குடத்தில் நீர் எடுத்து
சென்றார். அப்போது, தான் செல்வதற்காக கைதட்டி திருப்பாணரை விலக கூறினார். பெருமானின்
நினைப்பிலேயே இருந்ததால் சாரங்க முனிவர் கூப்பிட்டதை திருப்பாணர் கவனிக்க வில்லை. இதனால்
கோபம் கொண்ட சாரங்கமுனி திருப்பாணரை கல்லால் எறிந்து அவர் தலையில் ரத்தம் வர செய்தார்.
இதன் பின் பொற்குடத்தில் இருந்த நீரை எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய சாரங்கமுனி
முயன்றபோது பெருமாளின் தலையில் ரத்தம் வருவதை பார்த்து துடித்தார். இதற்கான காரணத்தை
அறிய முடியாததால், ஏதும் சாப்பிடாமல் உறங்கி விட்டார். பெருமாள் சாரங்கமுனி கனவில்
தோன்றி ஆற்றின் கரையில் நின்று என்னைப்பாடிக்
கொண்டிருந்த திருப்பாணரை கல்லால் தாக்கினாய். என் உள்ளம் உண்மையான பக்தனான திருப்பாணர்
மீது இருந்ததால், அவன் மீது எறிந்த கல் என் மீது பட்டது.
எனவே திருப்பாணரிடம்
சென்று மன்னிப்பு கேட்டு, அவனை தோள்மீது சுமந்து
கோயிலுக்கு வந்து என்னை தரிசனம் செய்ய வைப்பாயாக என்று பெருமாள் கூறி மறைந்தார். பெருமானின்
உத்தரவுப்படி சாரங்கமுனி திருப்பாணரை தோளில் சுமந்து பெருமாளை தரிசனம் செய்ய வைத்தார்.
இதுதான் வரை பெருமாளை பார்த்திராத திருப்பாணர் பெருமாளின் பாதம் முதல் உச்சி வரை பார்த்து
மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சியில் தான்.
கொண்டல் வண்ணனைக்
கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்
உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்னென்
னமுதினைக்
கண்ட கண்கள்மற்
றொன்றினைக் காணாயே
என்று பத்துப்பாசுரங்களையும்
பாடிமுடித்தார். திருப்பாணாழ்வார் கடைசிப்பாகத்தில் அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள்
மற்ற ஒன்றினைக் காணாவே என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின்
திருவடிகளில் சரணடைந்து தோன்றாத்தன்மை பெற்று இவ்வுலகை விட்டு மறைந்தார். பெருமாளின்
108 திருப்பதிகளில் திருப்பாணாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன்
சேர்ந்து மொத்தம் 3 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருப்பாணாழ்வார்,
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை
ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்,
(2)
1. திருவேங்கடம்
(அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
திருப்பாணாழ்வார்,
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை
ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம்
(அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
No comments:
Post a Comment