Saturday, 29 November 2014

தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி

தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி 
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி 
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி 
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி 
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி 
 (தேடு
கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே-எங்கள் 
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே 
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே-என்மேல் 
அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடிவந்தாயே 
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
 (தேடு
தந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே-ஒரு 
தம்பி மட்டும் பிறக்க வேண்டும் உந்தன் வடிவிலே 
அன்புகொண்டு தந்தைக்கவன்செய்யும் பணியிலே-நாங்கள் 
ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே 
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
 (தேடு)



No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer