நம்மாழ்வார்
பயோடேட்டா
பிறந்த இடம் :
ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் :
9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் :
விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் :
பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் :
1296
சிறப்பு : திருமாலின்
படைத்தலைவரான விஷ்வக்சேனரின் அம்சம்
வைணவத்தில் ஆழ்வார்
என்றாலே அது நம்மாழ்வரைத் தான் குறிக்கும். வடமொழியின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு
ஒப்பான திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களை அருளியவர் நம்மாழ்வார். ஆழ்வார்
அவதரிக்கும் போது ஆத்ம ஞானத்தை மறைக்கிறசடம் என்னும் காற்று தம்மை நெருங்க அதனைக் கோபித்துக்
கொண்டார். அதனாலேயே இவருக்கு சடகோபன் என்கிற பெயர் உண்டாயிற்று. மேலும் இவருக்கு பராங்குரர்,
வகுளாபரணர் என்ற பெயர்களும் உண்டு ஆழ்வார் பிறந்த போதிலிருந்தே பால் உண்ணாமலும், அழாமலும்,
சிரிக்காமலும், வளர்ந்து வந்தார். இதனால் பெற்றோர் மிகவும் வருந்தினர். திருவநந்தாழ்வான்
திருப்புளிமரமாக வளர்ந்திருக்க அந்த மரத்தடியில் தொட்டில் கட்டி மாறன் என்ற பெயரிட்டு
அங்கேயே விட்டுப்போனார்கள். ஆழ்வாரும் திருப்புளி மரத்தில் குகை போன்ற பொந்தில் பதினாறு
வருஷங்களை கழித்தார். திருமாலுக்குரிய திவ்விய தேசங்களில் 37 திவ்விய தேசங்களுக்கு
மங்களாசாசனம் செய்துள்ளார்.
அயோத்தியில் இருந்த
மதுரகவி ஆழ்வார் தெற்கே வந்து நம்மாழ்வாரை வணங்கி அவருக்கு சேவை செய்து வந்தார். நம்மாழ்வார்
பெருமானின் குணங்களை சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் எழுதுவார். நம்மாழ்வார் அனுபவித்து
சொல்லும் பொழுது மயக்கம் அடைந்து விடுவார். அப்பொழுதெல்லாம் மதுரகவியாழ்வார் தான் இவரை
மயக்கம் தெளிவிப்பார். நம்மாழ்வார் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இவ்வுலக வாழ்க்கையை
வேண்டினார். இப்பொழுதும் ஆழ்வார் திருநகரியில் இவர் தவம் செய்த புனித புளியமரம் உள்ளது.
பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார் தனியாக சென்று 16 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன்
சேர்ந்து 19 கோயில்களையும் என மொத்தம் 35 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
நம்மாழ்வார் தனியாக
சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-16
1. ஸ்ரீவைகுண்டம்
(அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)
2. நத்தம் (அருள்மிகு
விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி
3. திருப்புளியங்குடி
(அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி
மங்கலம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில்(நவ
திருப்பதி), இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
4ஏ. திருத்தொலைவில்லி
மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,(திருத்தொலைவில்லி
மங்கலம்), தூத்துக்குடி
5. பெருங்குளம்
(அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)
6. தென்திருப்பேரை
(அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)
7. திருக்கோளூர்
(அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)
8. வானமாமலை (அருள்மிகு
தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)
9. திருப்பதிசாரம்
(அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)
10. திருவட்டாறு
(அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)
11. திருவனந்தபுரம்
(அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில்,
திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)
12. ஆரம்முளா
(அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன்
விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)
13. திருவண்வண்டூர்
(அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
14. திருக்கடித்தானம்
(அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)
15. திருக்காக்கரை
(அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
16. திருச்செங்குன்றூர்
(அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர்,
திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)
நம்மாழ்வார் மற்ற
ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-19
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
(5)
1. திருமோகூர்
(அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர்
(அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா,
கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ்
(அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா
மாநிலம்
4. திருமூழிக்களம்
(அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய்
(அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)
நம்மாழ்வார், மதுரகவி
ஆழ்வார் (1)
1. ஆழ்வார் திருநகரி
(அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)
நம்மாழ்வார், பேயாழ்வார்,
திருமங்கையாழ்வார் (1)
1. திரு விண்ணகர்
(அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)
நம்மாழ்வார், பூதத்தாழ்வார்,
திருமங்கை ஆழ்வார் (1)
1. வெண்ணாற்றங்கரை
(அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில்,
தஞ்சாவூர்)
நம்மாழ்வார், ஆண்டாள்,
பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
1. துவாரகை (அருள்மிகு
கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை
(அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)
நம்மாழ்வார், திருமழிசையாழ்வார்,
பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
1. திருப்பேர்
நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி
(அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. திருக்கண்ணபுரம்
(அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. அயோத்தி (அருள்மிகு
ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
நம்மாழ்வார், ஆண்டாள்,
பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் (1)
1. திருமாலிருஞ்சோலை
(அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
நம்மாழ்வார், ஆண்டாள்,
பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார்
(1)
1. கும்பகோணம்
(அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)
நம்மாழ்வார், பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்,
திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
1. திருவேங்கடம்
(அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
நம்மாழ்வார், பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்,
திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம்
(அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
No comments:
Post a Comment