Friday, 25 April 2014

தினமும் துதிக்க பைரவர் தோத்திர துதிகள்

தினமும் துதிக்க பைரவர் தோத்திர துதிகள்

பரமனை மதித்தடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே
யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு
தண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்  (3 முறை)

தளம் பொலி மலரோன் ஆதிவானவர் தாழ்ந்து போற்ற
உளம்பொலி காசிமேவும் உயிர்கள் செய்பாவமெல்லாம்
களம் பொலியாது தண்டங்கண்டறவொழிந்து முக்தி
வளம்பொலி வகை செய் காலவயிரவற் கன்பு செய்வோம்  (3 முறை)

சீரார் மதி சடையும் திருநீரும் திருமுகமும் கூராரிந்த
முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி
பிறவியிலே வருமுன் காட்சி தர வாரார்
வளர் தெட்சிணகைலாச வடுக பைரவமே (3 முறை)

வஞ்சகர் அஞ்சத்தக்க வாள் நகை வதனம் வாழி
வெஞ்சமத்து அசுரர் செற்றவீர அட்டகாசம் வாழி
புஞ்சவல் இருள்வெல்லோதி பொறியினை அடக்கு நல்லார்
நெஞ்சகம் கவரா நின்ற நிர்வாணக் கோலம் வாழி    (3 முறை)

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருகம் கை
தரித்ததோர்கோல காலபைரவனாகி வேழம் உரித்து உமை
அஞ்சகக்கண்டு ஒண்திருமேனி மணிவாய்விள்ள
சிருத்தருள் செய்தார் சேறைச் செந்நெறி செல்வனாரே.  (3 முறை)

மழுசூலம் கரத்தேந்தி-மறைவாகனத்தேறி - மாந்தர்
காக்கும் விழுதான தீச்சிகையும்-வெற்றிமிகு புன்னகையும்-
விண்ணோர்வேந்தின் பழுதானபகை நீக்கி - சுரர் சேனை
அழிவித்து-பாரைக்காத்து-தொழுவோர்க்கு துணைசெய்யும்
தோன்றல் எம் பைரவரே - துணைத்தாள் காப்பு    (3 முறை)

காலத்தை வென்றவனே! காசிக்கு சென்றவனே! கயிலை
வாழும் மூலத்தை காட்டியவா! சூலத்தை நீட்டியவா!
ஞமலி வேதக்கோலத்தை காட்டியவா! கோபம் கொண்டு
வேழத்தை உரித்தவனே! பைரவா! பணிகின்றோம்
வினைகள் தீர்ப்பாய்        (3 முறை)

வெண்தலை மாலை வாழி-விலையிலாப்பணிப்பூண் வாழி
புண்தலை கருமுள் பாசம் பொருதொடி கபாலம் வாழி-
மண்டு அலை வாரி வாய்பெய் மணி அரிச்சிலம்பு வாழி
கண்ட அலை மொழி மார்பன் தோல்கரிய கஞ்சுகமமும் வாழி
வாக்கிய விலாழி வாய்த்து மணியணி மிடற்றது இம்பர்
நோக்கிய கட்டு நிலநொறில் வயப்புரவி வாழி! தூக்கிய
துளிர் மென் தாலுச்சுருண்டவால் சுணங்கன் வாழி
பாக்கிய வடுக நாத பைரவர் வாழி! வாழி!

மதியிருக்கும் சடைமுடியும் மூன்று கண்ணும் மணிமாலை
திருக்கரமும் திருநீற்றுப் பூச்சும் விதியெழுதும் வேதனவன்
கபாலம் சூடும் வியன்கழுத்தும் முப்புரிநூல் விரிந்த மார்பும்
பதிபுகழ் சூலமுடன் விளங்கக்காட்டி - பார்புரக்கும்
பரம்பொருளே, நிதிவழங்கி புதுவாழ்வு தருபவனே -

திரு மெய்ஞானப்புரிக்கோயில் பைரவனைப் போற்றி வாழ்வோம் (3 முறை)

2 comments:

  1. பைரவர் தோத்திர துதிகள் பத்தும் கண்டேன்; ஆனால் ஒன்றுமே சரியாகப் பதியப்பட இல்லை. துதிகள் ஒவ்வொன்றும் கட்டளைக் கலித்துறை வகையாகும். இதற்கென்று தனி இலக்கணமும் உண்டு.

    இன்று காலையில் தேவாரம் பாடல் பெற்ற ’பிரான்மலை’ கொடுங்குன்றநாதர் கோவில் சென்றிருந்தேன். அங்குள்ள பைரவர் சன்னதியின் முன் மண்டபத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தது; என்ன வகைப் பாடல் என்றறியாத நான் புகைப்படமெடுத்து வந்து பரீட்சித்த பொழுது 'கட்டளைக் கலித்துறை' என அறிந்தேன். அப்பாடலை கீழே தருகிறேன்.

    சீரார் மதிசடை யும்திரு நீரும் திருமுகமும்
    கூராரிம் முக்கவர் சூல கபாலமும் குன்றி(ல்)மிகும்
    காராரிம் மேனி பிறவி வருமுன்னே காட்சிதர
    வாரார் வளர்தெட் ணகைலா சவடுக பைரவமே!

    இப்பாடலில் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்து நீக்கி, 16 எழுத்துகள் இருக்கும்.

    கண் மருத்துவ பேராசிரியர் (பணி நிறைவு)
    பாவலர் மணி வ.க.கன்னியப்பன், மதுரை

    ReplyDelete
  2. கலிவிருத்தம்
    (விளம் விளம் மா கூவிளம்)
    (மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
    (1, 3 சீர்களில் மோனை)

    பரமனை மதித்தடா பங்க யாசனன்
    ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
    குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
    புரிதரு வடுகனைப் போற்றிச் செய்குவோம்! 1

    ReplyDelete

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer