Friday, 25 April 2014

கால பைரவ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணம்

கால பைரவ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணம்

அசிதாங்க பைரவர் தியானம்

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் முண்டமாலா விபூஷிதம்
ச்வேதவர்ணம் க்ருபா மூர்த்திம் பைரவம் குண்டலோஜ்வலாம்

கதா கபால ஸம்யுக்தம் குமாரஞ்ச திகம்பரம் :
பாணம் பாத்ரஞ்ச சங்கம் அக்ஷமாலாம் கமண்டலும்

நாக யக்ஞோப வீதஞ்ச தாரிணம் ஸூ விபூஷிதம் ப்ரஹ்மாண் ஸக்தி ஸஹிதம் ஹம்ஸாரூடம் ஸூருபிணம்
ஸர்வா பீஷ்டப்ரதம் நித்யம் அஸிதாங்கம் பஜாம்யஹம்

மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே தந்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தைக் கொண்டிருப்பவரும், கபாலங்களால் ஆக்கப்பட்ட மாலையை அணிந்திருப்பவரும், கருணைமிக்கவரும், காதுகளில் பிரகாசமான குண்டலங்களை அணிந்திருப்பவரும், கதை, பாணம், பாத்திரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்திருப்பவரும், திகம்பரத் தோற்றமும், இளமை வடிவமும் கொண்டிருப்பவரும், நன்றாக அலங்கரிக்கப்பட்டிருப்பவரும் ப்ரஹ்மாணி என்ற சக்தியுடன் கூடியிருப்பவரும் அன்னப்பறவையை வாகனமாகக் கொண்டிருப்பவரும், அழகிய தோற்றத்துடன் விளங்குபவருமான அசிதாங்க பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

ருரு பைரவர் தியானம்

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
டங்கம் க்ருஷ்ணம்ருகம் பாத்ரம் பிப்ராணஞ்ச க்ருபாணகம்
மகேச்வர்யாயுதம் தேவம் வ்ருஷாரூடம் ஸ்மிதானனம்
சுத்த ஸ்படிக ஸங்காஸம் நமாமி ருரு பைரவம்

மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களைத் வேண்டியவாறே தந்தருள்பவரும், கருணை மிகுந்த தோற்றத்தைக் கொண்டிருப்பவரும், இளம்பருவத் திகம்பர வடிவத்தினரும், டங்கம், மான், பான பாத்திரம், சத்தி ஆகியவற்றை வைத்திருப்பவரும், மஹேஸ்வரி என்ற சக்தியுடன் கூடியிருப்பவரும் காளை வாகனத்தின் மீது வீற்றிருப்பவரும், புன்முறுவல் தவழும் முகத்தினரும், நிர்மலமான தூய ஸ்படிகத்தைப் போன்ற வெண்ணிறத் திருமேனியை உடையவருமான ருரு பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

குரோதன பைரவர் தியானம்

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம் கதாம்
சங்கம் சக்ரஞ்ச பான பாத்ரஞ் தாரிணம்
லக்ஷ்ம்யாம் ஸஹிதம் வாமே கருடாஸந ஸுஸ்த்திகம்
நீலவர்ணம் மஹாதேவம் வந்தே ஸ்ரீக்ரோத பைரவம்

மூன்று கண்களையுடையவரும், கதை, சங்கம், சக்கரம், பானபாத்திரம் ஆகியவற்றை உடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தையுடையவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோன்றுபவரும், இடப் பக்கத்தில் இலக்குமி தேவியுடன் கூடி கருட வாகனத்தில் வீற்றிருப்பவரும் நீலநிறமான திருமேனியையுடையவருமான குரோதன பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

உன்மத்த பைரவர் தியானம்

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
ஹேமவர்ணம் மஹாதேவம் அஸ்வவாஹன ஸுஸ்த்திதிம்
கட்கம் கபாலம் முஸலம் ததந்தம் கேடகம் ததா
வாராஹீ சக்தி ஸஹிதம் வந்தே உன்மத்த பைரவம்

மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தைக் கொண்டிருப்பவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோன்றுபவரும், சொர்ணத்தைப் போன்று மஞ்சள்நிறத் திருமேனியையுடையவரும், குதிரை வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவரும் கட்கம், கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவருமான வாராஹீதேவி சக்தியுடன் கூடிய உன்மத்த பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

கபால பைரவர் தியானம்

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
பாசம் வஜ்ரம் ததா கட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்
இந்த்ராணீ சக்தி ஸஹிதம் கஜவாஹன ஸுஸ்த்திதம்
கபால பைரவம் வந்தே பத்மராகப்ரபம் சுபம்

மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தையுடையவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோற்றமளிப்பவரும், பாசக்கயிறு, வச்சிரம், கத்தி, பானபாத்திரம், கட்கம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்னும் சக்தியுடன் கூடியிருப்பவரும், யானை வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவரும், பதுமராகம் போன்ற நிறங்கொண்ட திருமேனியையுடையவருமான கபால பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

பீஷண பைரவர் தியானம்

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
கட்கம் சூலம் கபாலஞ்ச தாரிணம் முஸலம் ததா
சாமுண்ட சக்திஸ ஹிதம் ப்ரேதவாஹன ஸுஸ்த்திதம்
ரக்தவர்ணம் மகாதேவம் வந்தே பீஷண பைரவம்

மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தையுடையவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோன்றுபவரும், கட்கம், சூலம், கபாலம், உடுக்கை ஆகியவற்றையுடையவரும், சாமுண்டி என்னும் சக்தியுடன் கூடியிருப்பவரும், ப்ரேத வாகனத்தின் மீது வீற்றிருப்பவருமான சிவந்த மேனியரான பீஷண பைரவர் என்ற மகாதேவனான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

சண்ட பைரவர் தியானம்

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
தனுர் பாணஞ்ச பிப்ராணம் கட்கம் பாத்ரம் ததை வச
கௌமாரி சக்தி ஸஹிம் சிஹிவாஹன ஸுஸ்த்திதம்
கௌரவர்ண யுதம் தேவம் வந்தே ஸ்ரீ சண்ட பைரவம்

மூன்று கண்களையுடையவரும், வேண்டிய வரங்களை  வேண்டியவாறே கொடுத்தருள்பவரும், சாந்தமான தோற்றத்தையுடையவரும், இளமையானவராகவும், திகம்பரனாக தோன்றுபவரும், வில், அம்பு, கத்தி, பானபாத்திரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவரும், கௌமாரி என்ற சக்தியுடன் கூடியிருப்பவரும், வெண்மை நிறத்தினரும், மயிலை வாகனமாகக் கொண்டு வீற்றிருப்பவருமான சண்ட பைரவர் என்ற பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

சம்ஹார பைரவர் தியானம்

தசாபாஹும் த்ரிநேத்ரம் சர்ப்பயக்ஞோப வீதினம்
தம்ஷ்ட்ராகராளவதனம் அஷ்டைச்வர்ய ப்ரதாயகம்
திகம்பரம் குமாரஞ்ச சிம்ஹவாஹன ஸம்ஸ்த்திதம்
சூலம் டமருகம் சங்கம் கதாம் சக்ரஞ்ச தாரிணம்
கட்கம் பாத்ரம் கட்வாங்கம் பாசமங்குச மேவச
தைத்யசீர்ஷக பாலோக்ர ப்ருஹண்மாலாதரம் வடும்
உக்ர ரூபம் மதோன்மத்தம் பாடவானல பைரவம்
சண்டிகா சக்திஸஹிதம் த்யாயேத் சம்ஹார பைரவம்

பத்துக் கரங்களையும், மூன்று கண்களையும் உடையவரும், பாம்பைப் பூணூலாக அணிந்திருப்பவரும், கோரைப் பற்களால் குரூரமான முகத்தையுடையவரும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுப்பவரும், இளமையானவராகவும், திகம்பரனாகவும் இருப்பவரும், சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பவரும், சூலம் டமருகம், சங்கு, சக்கரம், கதை, கத்தி, பானபாத்திரம், பாசம், அங்குசம், கட்வாங்கம் ஆகியவற்றைக் கைகளில் கொண்டிருப்பவரும், அரக்கர்களின் மண்டையோடுகளால் தயார் செய்யப்பட்ட பயங்கரமான பெரிய மாலையுடன் காணப்படுபவரும், பயங்கரத் தோற்றத்தையுடையவரும் மதத்தினால் உன்மத்தர் போல் காணப்படுபவரும் பாடவாக்னி போல மிக அச்சமூட்டுபவரும், சண்டிகை என்னும் சக்தியுடன் கூடியிருப்பவருமான சம்ஹார பைரவரைத் தியானம் செய்கிறேன்.

ஊர்த்தவ வடுக பைரவர் தியானம்

த்ரயக்ஷம் தசபுஜம் ரௌத்ரம் ஊர்த்வகேசம் ஸுதர்ஸ்ட்ரகம்
ரௌத்ர த்ருஷ்டிஞ்ச க்ருஷ்ணாபம் விலஸச் சசிசேகரம்
ப்ரபா மண்டல மத்யஸ்த்தம் நாகயக்ஞோப வீதினம்
கர்ணயோம் பத்ரஸம்யுக்தம் நாகயக்ஞோப வீதினம்
சூலம், டமருகம், கட்கம், அங்குசம், சாபயம் ததா
கபாலம், கேடகம், நாகம், பாசம், தண்டஞ்ச தாரிணம்
நாகாதிவ்யாம் பரைர்யுக்தாம் கிங்கிணீ வரஸம்யுதம்
பத்ம பீடஸ்த்திதம் வந்தே ஊர்த்வ வடுக பைரவம்

மூன்று கண்களையும், பத்துக்கரங்களையும் உடையவரும், மிகவும் அச்சமூட்டக்கூடிய தோற்றத்தைப் பெற்றிருப்பவரும், மேல் நோக்கித் தூக்கிக் கட்டப்பட்ட கேசத்தையுடையவரும், கொடூரமான பார்டையுடையவரும், கரிய நிறத்திலான திருமேனியை உடையவரும், சந்திரனைச் சிரசில் வைத்திருப்பதால் பிரகாசமாகக் காணப்படுபவரும், ஒளிப்பிரபையால் சூழப்பெற்றவரும், பாம்பைப் பூணூலாக அணிந்திருப்பவரும், காதுகளில் பத்ரகுண்டலங்களைக் கொண்டிருப்பவரும், கூர்மை மிகுந்த தோமரம் என்னும் ஆயுதத்தைக் கையில் தரித்திருப்பவரும், மேலும் மற்ற கைகளில் சூலம், டமருகம், கத்தி, அங்குசம், கபாலம், கேடயம், பாம்பு, பாசம், தண்டம், அபயமுத்திரை ஆகியவற்றைக் கொண்டிருப்பவரும், சிறப்பு மிக்க ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டவரும், அழகிய கிங்கிணி மாலையை அணிந்திருப்பவரும், பத்ம பீடத்தில் வீற்றிருப்பவருமான ஊர்த்தவ வடுக பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

ஸ்வாயம்புநாத பைரவர் தியானம்

ஏகேந சூலமிதரேண சிரஹ் கபாலம்
அந்யேந நாகம் அபரேண வீணாம்
ஆதாய யச்சரதி பைக்ஷம நேகரூபம்
ஸ்வாயம்புநாத பகவாந் பரமேச்வரொஸொ

ஒரு கையில் சூலத்தையும், இன்னொரு கையில் கபாலத்தையும், மற்றொரு கையில் பாம்பையும், இன்னொரு கையில் வீணையையும் வைத்திருப்பவரும், பலவித உருவங்களில் தோன்றி, பிட்சை ஏற்பவரும் பரமேஸ்வரனின் ரூபமுமான ஸ்வாயம்புநாத பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

க்ஷத்ரபால பைரவர் தியானம்

ஆசாம்பரம் த்ரிநயனம் ஊர்த்வகேசம் சதுர்புஜம்
டக்கா சூல கபாலரோக்ரம் வந்தேஹம் ÷க்ஷத்ரபாலகம்

மூன்று கண்களையும், நான்கு கரங்களையும் உடையவராகவும், உயரே தூக்கிக் கட்டப்பட்ட கேசத்தையுடையவராகவும், உடுக்கை, சூலம், கபாலம் ஆகியவற்றை உடையவராகவும், உக்ரமான உருவத்தைக் கொண்டவருமான ÷க்ஷத்ரபால மூர்த்தியை வணங்குகின்றேன்.

சட்டநாதஸ்வாமி தியானம்

பாலம் நீல ஜடாதரம் கஸ்தூரி திலகோஜ்வலம்
தண்டா பயகரம் காலம் தத்ருதகஞ்சுக மிஷ்டதம்
ப்ரபுல்ல நயனம் சாந்தம் புஷ்போஷ்ணீஷ விராஜிதம்
ஸ்ரீமத் பிரும்மபுராதீசம் சட்டநாதமு பாஸ்மஹே

இளமைப் பருவத்தினராகவும், கருநீல நிறங்கொண்ட ஜடாமுடியையுடையவராகவும், நெற்றியில் இடப்பட்டுள்ள கஸ்தூரி திலகத்தினால் மிகப் பிரகாசம் பொருந்தியவராகவும், யமன் போன்றவரும், சட்டையை அணிந்திருப்பவராகவும், விரும்பிய வரங்களைக் கொடுத்தருள்பவராகவும், மலர்ச்சி பொருந்திய கண்களையுடையவராகவும், சாந்தமான தோற்றமுடையவராகவும், மலர்களால் ஆக்கப்பட்ட தலைப்பாகையை அணிந்தவராகவும், சீர்காழி எனப்படும் பிரம்மபுரத்தின் தலைவராக விளங்கும் சட்டநாத ஸ்வாமியை வணங்குகின்றேன்.

இவ்வாறாகப் பைரவப் பெருமானின் பல்வேறு வகையான திருவுருவங்களையும் பக்தி சிரத்தையுடன் வணங்கிப் பயன் பெறுவோமாக !

ஸ்வர்ணாகர்ஷண பைரவ மகா மந்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ
மகா மந்த்ரஸ்ய பிரும்மா ருஷி: பங்திஸ் சந்தஹ:
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதா:
ஸ்வர்ணாகர்ஷண பைரவ பிரசாத சித்யர்த்தே
ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோக:

தியானம்

காங்கேய பாத்ரம் டமருகம் த்ரிசூலம்
வரம் கரை: ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்
ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer