Monday 27 October 2014

மகாபாரதம் பகுதி 049


மகாபாரதம் பகுதி-49

ரவுபதியிடம் பீமன், அன்பே! நீ கேட்ட மலர் குபேரபட்டணத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். காற்றினும் வேகமாகச் சென்று கணநேரத்தில் பறித்து வருகிறேன், என சொல்லிவிட்டு, பீமன் புறப்பட்டான்தலீவனம் என்ற காட்டின் வழி அவன் சென்ற போது, அவன் வேகம் தாளாமல், காடே அதிர்ந்து மிருகங்கள்  அலறியடித்து ஓடின. ஆனால், வழியில் படுத்திருந்த ஒரு குரங்கு மட்டும் பாதையை மறித்துக் கொண்டிருந்தது. இது  ஆச்சரியப்பட்ட  தன் கதாயு  குரங்கே! போய் படுவருவது தெரியவில்லை என  . அதன் மிக நீளமாக பல  இருந்தது.

பீமனை அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்த அந்தக் குரங்கு, மானிடனே! வேண்டுமானால் சுற்றிப்போ, அல்லது என் வாலை தூக்கி ஓரமாக வைத்து விட்டு போ, வீணே என்னையேன் எழுப்புகிறாய், என்றது. பீமன், அதன் வாலை அலட்சியமாக தூக்கி விடலாம் என கை வைத்தான். ஒரு சிறியவால், அந்த பலவா சக்திக்கு கட்டப்படவில்லைகொண்ட மட்டும் தூக்கியும் அதை அசைக்கக் கூட முடியவில்லைரங்கு சிரித்தது.
என்ன மானிடா! முடியவில்லையா என்றது. குரங்கே! ஜாலம் காட்டாதே. என் சக்திக்கு முன்னால் நீ ஒரு தூசு. ராமபக்தனாகிய என் சகோதரன் அனுமானின் வாலைத் தவிர, இந்த உலகில் வேறு எந்த குரங்கிற்கும் சக்தி கிடையாது என்பதை அறிவேன். இப்போது பார், என மீண்டும் தூக்க இப்போதும் வால் அசையவில்லை. அனுமான் அப்போது தன் சுய ரூபம் காட்டினார். ராமாயண காலத்தில் பிறந்து ஒரு யுகத்தையே கடந்த சீரஞ்சிவியான அவர், இப்போது முதிர்ந்த கோலத்தில் இருந்தார்.

தம்பி! பீமா! நானே அனுமான், என்றதும், பீமன் அவரது பாதங்களில் விழுந்தான். அண்ணா! என் தெய்வமே! தங்களுடனா நான் வாதம் செய்து கொண்டிருந்தேன். மன்னியுங்கள், என்று நமஸ்காரம் செய்தான். அனுமானின் தாய் அஞ்சனா, வாயு பகவான் மூலம் பெற்ற பிள்ளை ஆஞ்சநேயர். குந்தி தேவியும் வாயு பகவான் மூலமே பீமனைப் பெற்றாள். தாய் வேறு, தந்தை ஒன்று என்ற முறையில் இவர்கள் சகோதரர்கள் ஆகிறார்கள். தம்பியை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர், பீமா! நீ வேண்டும் வரத்தைக் கேள், என்றார். அண்ணா! நாங்கள் துரியோதனனால் பாதிக்கப்பட்டுள்ள விஷயத்தை தாங்கள் அறிவீர்கள். தர்மத்துக்காக நடக்கப்போகும் போரில் தாங்கள் என் தம்பி அர்ஜுனனின் தேரில் கட்டப்படும் கொடியில் வந்து அமர வேண்டும். நான் தங்கள் திருவடியை விரைவில் அடைய வேண்டும், என வேண்டினான்.

அர்ஜுனனின் கொடியில் வந்து அமர்வதாக ஒப்புக்கொண்ட ஆஞ்சநேயர், பீமா! நீ என் திருவடியை அடைய இன்னும் காலம் இருக்ககிறது. உன் தம்பிகளோடும், திரவுபதியோடும் வாழ வேண்டிய காலத்தை முடித்தபின் என்னை அடைவாய், என வரமருளினார். பின்னர் அளகாபுரிக்கு செல்லும் வழியை அனுமனிடம் கேட்டான் பீமன். தம்பி! அதற்கு இன்னும் பல யோஜனை தூரம் செல்ல வேண்டும். அங்கே நீ கேட்கும் மலர் இருக்கிறது. அந்த தோட்டத்தை பல ராட்சஷர்கள் பாதுகா த்து வருகிறார்கள். அவர்களைக் கொன்று அந்த மலரைப் பறிக்க வேண்டும். அல்லது குபேரன் தன் மனைவி சித்ராதே உதவியுடன் அந்த வனத்துக்கு அவ்வப்போது வருவான். நீ நட்பு கொண்டால் மலரை அவனே உனக்கு பரிசாகத்தருவான், என யோசனை சொன்னார். பீமன் அவரிடம் ஆசி பெற்று புறப்பட்டான். செல்லும் வழியில் சக்ரசாகர மலை வந்தது. அங்கே தேவர்கள் தவமிருப்பதுண்டு. புண்டரீகன் என்ற அசுரன் அப்பகுதிக்கு வந்த பிறகு, அவர்கள் அப்பகுதிக்கு வருவதில்லை. அவன் ஒரே நொடியில் இருநூறு யோஜனை தூரம் நடக்குமளவிலான கால்களைப் பெற்றவன். அந்த மலைக்கு பீமன் வந்ததும், அவன் வழி மறித்தான்.

மானிடனே! வழி தெரியாமல் வந்துவிட்டாயா? திரும்பி ஓடிவிடு, என்றான். கலங்காத பீமன், அசுரா! உன் அழிவுக் காலத்தை வரவழைத்துக் கொள்ளாதே. வழி விடு, என்று இடி போல் முழங்கினான். உடனே அசுரனுக்கு கோபம் ஏற்பட, இருவரும் கடுமையாகப் போரிட்டனர். அப்போது அசரீரி தோன்றி, பீமா! இவன் உன்னால் தான் அழிய வேண்டுமென்பது விதி. அவனது உயிர் அவனது தோளில் இருக்கிறது. உன் கதாயுதத்தால் அந்த இடத்தில் அடி, என்றதும், பீமனும் கணப்பொழுதில் அவ்வாறே செய்தான். அசுரன் சாய்ந்தான்தேவர்கள் மகிழ்ந்தனர். பின்னர் செந்தாமரை மலர்கள் பூத்துக்கிடக்கும் அளகாபுரி எல்லைக்குள் நுழைந்தான். அங்கேஅனுமான் சொன்னது போலவே ராட்சஷர்கள் உலா வந்து கொண்டிருந்தனர். ஒன்றிரண்டுல. வாமனன் என்பவன் தலைமையில் லட்சம் பேர் இருந்தார்கள். அவர்கள் பீமனை பார்த்துவிட்டனர். நரனே! நீ எப்படி பூலோகத்தில் இருந்து இந்த அளகாபுரிக்கு வந்தாய். உயிர் மேல் ஆசையிருந்தால் ஓடிவிடு. இங்கே இந்திரன் கூட வருவதற்கு அஞ்சுவான், என்றதும் பீமன் ஏதும் பேசாமல் அரக்கர் இடத்தினரிடையே பாய்ந்தான்.


லட்சம் பேரையும் கணப்பொழுதில் மரங்களை பிடுங்கி அடித்துக் கொன்றான். அவர்களை அம்புகளால் அடித்து சாய்த்தான். ஆர்ப்பாட்டுடன் தோட்டத்தில் நுழைந்தான். இதைக் கண்டு அங்கு வசித்த யட்சர்கள் கலங்கி ஓடி தங்கள் தலைவர் குபேரனிடம் விபரத்தைக் கூறினர். குபேரனின் கண்கள் சிவந்தன.சங்கோடணன் என்ற படைத்தலைவனை அழைத்து, அந்த மானிடனை இழுத்து வர கட்டளையிட்டான். சங்கோடணன் பெரும்படையுடன் அங்கு செல்லவே, பீமன் தன் பலத்தாலும் கதாயுதத்தாலும் பல்லாயிரம் யட்சர்களைக் கொன்று விட்டான். சங்கோடணனுக்கு கொடுத்த அடியில் அவன் புறமுதுகிட்டு ஓடினான். குபேரப்பெருமானே! அவன் சாதாரண ஆளாகத் தெரியவில்லை. சிவபெருமானே இங்கு வந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது எனவும் குபேரன் அதிர்ந்தான்


             
               
               
                
               .  

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer