10. சந்திரசேகர
மூர்த்தி
நான்
முகனின்
மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழுப்
பெண்களாகப்
பிறந்தது.
அவர்கள்
அனைவரையும்
சந்திரனுக்கு திருமணம்
செய்வித்தார். சந்திரன்
திருமணம்
நடைப்பெற்ற
சிறிது
காலம்
வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி
வைத்தார். சிறிது
காலத்திற்குப்
பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
சாபத்தின்
வீரியத்தால்
நாளொரு
கலையாக
சந்திரன்
தேய்ந்து
கொண்டே
வந்து
இறுதியாக
ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும்
மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்று
உறுதிகொண்டுள்ளோம்.
எனவே இக்
குறைகளை
சிவபெருமானால்
மட்டுமே
தீர்க்க
முடியும்
எனவே அவரை சரணடையிமாறு
சொன்னார். அதன்படி
சந்திரன்
சிவபெருமானிடம் சரணடைய சிவனும்
சந்திரனின் ஒரு
கலையை எடுத்து
தன் சடையில் வைத்து
இனி உன் ஒருக்கலைக்கு அழிவில்லை ஆனாலும் தட்சனின்
சாபத்தால் தினமொரு கலையாக அழிந்தும், என்னிடம் உள்ளதால் தினமொரு
கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி
கூறினார். சந்திரனைத்
தன் சடையில் தரித்ததால் சந்திர
சேகரன்
ஆனார். அவரது
தலம் திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது. இங்கு
கோயில்
கொண்டுள்ள
இறைவனின் திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர்.
இறைவி கருந்தாழ்குழலி
யாகும். நல்லவனவற்றை
மட்டுமேக் கொடுக்க
கூடியவர் இங்குள்ள
சந்திர
சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும்
வைரமாகும்.
மேலும் வெண்தாமரை
அர்ச்சனையும்,
நெய்யன்ன
நைவேத்தியமும்
சோமவாரம்,
பௌர்ணமி
தினங்களில்
கொடுக்க அறிவு
வளர்ச்சி
மிகுவதோடு
நினைவாற்றல் பெருகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ந்த சந்தனத்தால் அபிசேகம்
செய்தால் நற்புகழ்
அடையலாம்.
No comments:
Post a Comment